கடலூரில் பா. ம. க. , பயிற்சி பாசறையில் மாணவ, மாணவியர்களுக்கு இலவச பயிற்சி

புதன், 15 டிசம்பர், 2010

கடலூர் : 

                   கடலூரில் பா.ம.க. , பயிற்சி பாசறை சார்பில் துவங்கவுள்ள இலவச பயிற்சி வகுப்பில் மாணவ, மாணவியர்கள் சேர்ந்து பயன்பெற எம்.எல்.ஏ. , வேல்முருகன் கேட்டுக் கொண்டார்.

கடலூரில்  நேற்று  எம். எல். ஏ. , வேல்முருகன் கூறியது:

                  பொருளாதாரத்தில் பின் தங்கிய அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஏழை எளிய மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பயிற்சி பாசறை கடலூரில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இப்பயிற்சி பாசறையில் ஐ. ஏ. எஸ். , - ஐ. பி. எஸ். , -  டி. என். பி. எஸ். சி. , குரூப் 1, 2, வி. ஏ. ஓ. , வங்கி, ரயில்வே காவலர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இப்பயிற்சியில் பயின்ற 8 பேர் சப் இன்ஸ்பெக்டர் தேர்விலும், 48 மாணவர்கள் காவலர்களாகவும் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணைக்காக காத்திருக்கின்றனர்.  

                மீண்டும் அதே வகுப்புகள் கல்லூரி மாணவர்களின் வசதிக்கேற்ப காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் நடத்தப்படுகின்றன. இவ்வகுப்புகளில் கம்ப்யூட்டரில் வீடியோ ஆடியோ காட்சிகள் மூலமும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.  இதற்காக பிரத்யேக நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.  

                தற்போது டி. என். பி. எஸ். சி. , சுகாதார புள்ளியியல் ஆய்வாளர், வனத்துறை உதவி ஆய்வாளர் தேர்வுகளுக்கான வகுப்புகள், பி. எஸ்சி. , அறிவியல், கணிதம், கணிப்பொறியியல், மண்ணியல், புள்ளியியல் மற்றும் பொறியியல் பட்டதாரிகளுக்கான பயிற்சி வகுப்புகள் வரும் 19ம் தேதி துவங்க உள்ளது. இந்த வகுப்புகளில் சேர விரும்பும் மாணவ, மணவியர்கள் கடலூர் பா.ம க. , அலுவலக செயலரிடம் விண்ணப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

Read more...

வெள்ளச் சேதம் பாமக குழு பார்வையிடும்: ஜி.கே. மணி

செவ்வாய், 7 டிசம்பர், 2010


அரக்கோணம்:
 
             வெள்ளச் சேதங்களை பாமகவின் ஐவர் குழு பார்வையிட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கை அனுப்பும் என்று கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே. மணி கூறினார். 
 
சோளிங்கரில் திங்கள்கிழமை பாமக மாநிலத் தலைவர் ஜி.கே. மணி கூறியது:
 
               கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் வெள்ளச் சேதம் அதிக அளவில் உள்ளது. 
 
               பாமக நிறுவனர் ராமதாஸின் உத்தரவின்பேரில், இம்மாவட்டங்களில் கட்சியின் ஐவர் குழு 7-ம் தேதி முதல் பார்வையிட உள்ளது. எனது தலைமையில், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆர்.வேலு, பொன்னுசாமி, எம்எல்ஏக்கள் பெரியசாமி, வேல்முருகன் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். 
 
              தற்போது வெள்ள நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ள 100 கோடியை அதிகரிக்க வேண்டும். எனவே, மத்திய அரசு உடனடியாக கூடுதல் நிதியை வழங்க வேண்டும். 
 
பாலாற்றில் தண்ணீர் வரவில்லை:
 
             தமிழ்நாட்டில் அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால், பாலாற்றில் மட்டும் தண்ணீர் வரவில்லை. இதற்கு குப்பம் தொகுதியில் உள்ள கணேசபுரத்தில் ஆந்திர அரசு கட்டிவரும் தடுப்பணையே காரணம். எனவே, அந்த தடுப்பணையின் கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் 
 
"உன்னையே நீ அறிவாய்' ஆலோசனைக் கூட்டம்:
 
                தீய சக்தி, பண்பாட்டு சீரழிவில் இருந்து இளைஞர்கள், இளம்பெண்களை காப்பாற்ற "உன்னையே நீ அறிவாய்' எனும் ஆலோசனைக் கூட்டங்கள் பாமக சார்பில் நடந்து வருகின்றன. தமிழ்நாட்டில் 100 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இத்தகைய கூட்டங்களை நடத்த உள்ளோம். தற்போது 22 தொகுதிகளில் இக்கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.

Read more...

சிதம்பரம் நகர பா.ம.க பொதுக்குழு கூட்டம்

வியாழன், 25 நவம்பர், 2010

சிதம்பரம் : 

           சிதம்பரம் நகர பா.ம.க., பொதுக்குழு கூட்டம்  நடந்தது. நகர செயலாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். நகர துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். முருகன் முன்னிலை வகித்தார். மாநில துணை பொதுச் செயலாளர் திருமால்வளவன், தேவதாஸ் படையாண்டவர், வேணுபவனேஸ்வரன், சிலம்புச்செல்வி உட்பட பலர் பேசினர். கூட்டத்தில்  சிதம்பரம் நகரத்திற்குட்பட்ட பகுதியில் கிளைக் கூட்டங்களை நடத்தி, வரும் சட்டசபை தேர்தலில் தனித்தன்மையை நிரூபிப்பது, பா.ம..க.,வை குறி வைத்து தாக்கும் போலீசாரை கண்டிப்பது.  முன்னால் அமைச்சர் அன்புமணி தலைமையில் அனைத்து வார்டு பகுதிகளிலும் கட்சிக்கொடி ஏற்றுவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more...

கும்மிடிப்பூண்டியில் தேமுதிகவில் இருந்து 100 பேர் பாமகவில் இணைந்தனர்

செவ்வாய், 23 நவம்பர், 2010


கும்மிடிப்பூண்டி:

                 கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரணி பேரூர் அருகே உள்ள மல்லியங்குப்பம் ஊராட்சியில் இருந்து, ஊராட்சி மன்ற துணைத் தலைவரும் தேமுதிக கிளைச் செயலருமான கே.ரங்கநாதன் தலைமையில் 100 பேர் வெள்ளிக்கிழமை பாமகவில் இணைந்தனர்.

                    பாமக திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலர் க.ஏ.இரமேஷ், மாநில துணைத் தலைவர் கடலூர் சண்முகம் ஆகியோர் முன்னிலையில் இவர்கள் பாமகவில் இணைந்தனர். மல்லியன்குப்பம் ஊராட்சி மன்ற தலைவரும் பாமக விவசாய அணி மாவட்டச் செயலருமான பா.ரவி, ஆரணி பேரூர் பாமக செயலரும், ஆரணி பேரூராட்சி துணைத் தலைவருமான சி.பாபு, மாவட்ட இளைஞரணி துணைச் செயலர் கோ.சிவா ஆகியோர் உடனிருந்தனர்.

Read more...

கடலூர் பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க பாமக கோரிக்கை

சனி, 20 நவம்பர், 2010

கடலூர்;

                கடலூர் பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட பாமக மகளிரணி கோரிக்கை விடுத்துள்ளது.÷பாமக மகளிரணி தேர்தல் சிறப்புக் கூட்டம் கடலூரில் வியாழக்கிழமை நடந்தது. 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 

                 மழைக்காலம் தொடங்கி விட்டதால், கடலூர் பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேணடும். கடலூர்  மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சுரங்கப் பாதைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, விருத்தாசலம் தொகுதிகளில் மகளிரணியை சிறப்பாக செயல்படவைக்க அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் சென்று அணி திரட்டுவது என்றும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

                 கூட்டத்துக்கு மகளிரணி மாநில துணைப் பொதுச் செயலர் சு.அமராவதி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் செüபாக்கியம், செயலர் உஷாராணி மற்றும் நிர்வாகிகள் தானாயி அம்மாள், தையல்நாயகி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேவசுந்தரி வரவேற்றார். பாமக மாநில துணைப் பொதுச் செயலர் தி.திருமால்வளவன்,  மாவட்டச் செயலர்கள் அ.தர்மலிங்கம், ரா.பஞ்சமூர்த்தி, அலுவலகச் செயலர் போஸ் ராமச்சந்திரன், கடலூர் நகரச் செயலர் ஆனந்த் உள்ளிட்ட பலர் பேசினர். லதா நன்றி கூறினார்.

Read more...

மாணவியை மானபங்கம் செய்து கொன்றவர்கள் மீது நடவடிக்கை: எம்.எல்.ஏ. வேல்முருகன்

வெள்ளி, 12 நவம்பர், 2010





சென்னை:
                  ஓமலூர் பள்ளி மாணவி சுகன்யாவை மானபங்கம் செய்து கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பா.ம.க. எம்.எல்.ஏ. வேல்முருகன் வலியுறுத்தினார்.

 சட்டப் பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற துணை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பா.ம.க. எம்.எல்.ஏ. வேல்முருகன் பேசியது:

                   சேலம் மாவட்டம் ஓமலூரில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி மாணவி சுகன்யா மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அவர் மானபங்கம் செய்து கொல்லப்பட்டதாக புகார் எழுந்தது. இந்தப் பிரச்னையில் நீதி கேட்டு போராடியதற்காக பா.ம.க. எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் மீது போலீஸôர் வழக்குப் பதிவு செய்தனர். சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் மாணவி சுகன்யா மானபங்கம் செய்து கொல்லப்பட்டது உண்மைதான் என்று தெரியவந்துள்ளது. அப்படியெனில் அவரை மானபங்கம் செய்தது யார்? அதனை மறைத்து பா.ம.க.வினர் மீது பொய் வழக்கு போட தூண்டியது யார்? இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

Read more...

கலைஞருடன் என்எல்சி தொழிற்சங்கத்தினர் சந்திப்பு

வியாழன், 28 அக்டோபர், 2010






                     முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையினை ஏற்று, நெய்வேலி நிலக்கரித் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டதையடுத்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துடன், நெய்வேலி நிலக்கரி நிறுவனத் தொழிலாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் இன்று முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

                   இந்நிகழ்வின்போது, தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் சார்பில் செ. குப்புசாமி, பாட்டாளி தொழிற் சங்கத்தின் சார்பில் எல்.எல்.ஏ.தி. வேல்முருகன், ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் சேகர், ஐ.என்.டி.யு.சி. சார்பில் ஏ. ஜானகிராமன் எல்.எல்.எப். சார்பில் கே. குமார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

Read more...

NLC contract workers call off their strike

 
CUDDALORE:

              Contract workers of the Neyveli Lignite Corporation called off their 38-day old strike on Wednesday night following an agreement reached at bilateral talks held in Chennai.

           The management had agreed to give an additional wage of Rs.1,560 a month and a minimum bonus of 8.33% plus Rs.1,000. It also promised not to victimise workers who participated in the strike. T. Velmurugan, MLA, who is heading the Joint Action Council of the trade unions, said that the management had agreed to induct 5,000 workers into the NLC Indcoserve by third week of November. He thanked Chief Minister M. Karunanidhi for his support in finding an amicable solution to the issue.

Read more...

நெய்வேலி பிரச்னையை தீர்க்காவிட்டால்... தமிழ்நாட்டில் நிரந்தர இருட்டு?

புதன், 27 அக்டோபர், 2010




                        ஆண்டுக்கு ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய்களை லாபமாக ஈட்டித் தரும் நிறுவனம், நெய்வேலி அனல் மின் நிலையம். இந்த நிறுவனத்தின் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களை ‘நிரந்தரத் தொழிலாளர்களாக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

அனலாக பற்றியெறியும் இந்தப் பிரச்னை நெய்வேலியைக் கடந்தும் சென்று கொண்டிருக்க, மத்திய-மாநில அரசுகள் இதற்கு எப்படி அணை போடுவது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையில், இந்தப் பிரச்னையை அரசியலாக்கி ஆதாயம் தேடிக் கொண்டிருக்கின்றன பல்வேறு அரசியல் இயக்கங்கள்.

                       கடந்த செப். 19-ம் தேதி ஆரம்பித்த வேலைநிறுத்தம் ஒரு மாதத்தைக் கடந்தும் சென்று கொண்டிருக்கிறது. 
என்னதான் நடக்கிறது என்று நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரிடம் கேட்டோம்.

                            ‘‘அனல்மின் நிலையத்தில் 19 ஆயிரம் பேர் நிரந்தரமாக பணியில் இருக்கிறார்கள். 13 ஆயிரம் பேர் ஒப்பந்தப் பணியில் இருக்கிறார்கள். மொத்தமாக 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நெய்வேலியில் இருக்கிறார்கள். அவர்களுடைய குடும்பங்களும் அங்கேயே இருக்கின்றன.

                        மொத்தமாக 1.5 லட்சம் பேர் நெய்வேலியில் மட்டும் இருக்கிறார்கள். இந்த வாக்குகளை யார் பெறுவது என்பதில்தான் இப்போது பலத்த போட்டி. அதன் விளைவுதான், தற்போது நடந்து கொண்டிருக்கும் பணியாளர்களின் தொடர் வேலைநிறுத்தம்...’’ என்று பிரச்னையின் பின்னணியைத் தொட்டுப் பேசினார்.

                         ‘‘ஒப்பந்த தொழிலாளர்களாக இருக்கும் 13 ஆயிரம் பேருக்கும் சமவேலைக்கு சம ஊதியம், சீனியாரிட்டி அடிப்படையில் பணி நிரந்தரம், முறையான மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி.யின் ‘ஜீவா ஒப்பந்த தொழிலாளர் நலச் சங்கம்’தான் இந்தப் பிரச்னையை முதலில் கையில் எடுத்தது.

                               கடந்த செப். 19-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகிறது. இதனால் கோபமடைந்த நிர்வாகம், ‘சட்டத்துக்குப் புறம்பாக போராட்டம் நடத்தப்படுகிறது... இதனை தடுத்து நிறுத்த வேண்டும்...’ என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘தொழிலாளர்களுக்கு போராட உரிமையுள்ளது. எனவே, இது சம்பந்தமாக தொழிலாளர் நல ஆணையம், தொழிற் சங்கங்கள், நிர்வாகம் ஆகியவை பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும்...’ என்று ஆலோசனை கூறி தீர்ப்பு சொல்லிவிட்டது. ஆனால், இதனை நிர்வாகத் தரப்பு ஏற்றுக் கொள்ளவில்லை. தொழிலாளர் பேராட்டத்தைத் தொடர்ந்து புறக்கணித்து வந்தது.

                         இந்நிலையில் தான் போராட்டத்துக்கு ஆதரவாக தொ.மு.ச., சி.ஐ.டி.யு., டி.பி.ஐ., அண்ணா தொழிற்சங்கப் பேரவை, ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட 7 சங்கங்கள் திடுமென களமிறங்கி போராட்டத்துக்கு வலுசேர்த்தார்கள். இதனால் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், பேரணி, உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் எனப் போராட்ட களம் தீவிரமாகிக் கொண்டே போகிறது.

                           இதன் உச்சகட்டமாகத்தான் அக். 19-ம் தேதி கடலூர் மாவட்டம் முழுவதும் அடையாள வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது. போராடிவரும் ஒப்பந்த தொழிலாளர்களுக்காக இதுநாள் வரை குரல் கொடுக்காத பா.ம.க., அ.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ., ம.தி.மு.க., டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகள், கடந்த 13-ம் தேதி மாபெரும் பேரணியை நடத்திய-தோடு, எதிரும் புதிருமாக இருக்கும் தே.மு.தி.க.வையும் தங்கள் பேரணியில் இணைத்துக் கொண்டதுதான் வேடிக்கை.’’ என்றார். அடுத்து நம்மிடம் பேச வந்தார் இன்னொரு ஊழியர். அவர் இந்த பிரச்னையில் பின்னணியாக இருக்கும் ஓட்டு அரசியல் குறித்து அப்பட்டமாக போட்டு உடைத்தார்.        
                           ‘‘மறுசீரமைப்பில் நெல்லிக்குப்பம் சட்டமன்றத் தொகுதி நீக்கப்பட்டுவிட்டது. புதிதாக நெய்வேலி தொகுதி உருவாகியுள்ளது. இந்தத் தொகுதியை குறிவைத்து அரசியல் வி.ஐ.பி.க்கள் சிலர் களமிறங்கி இருக்கிறார்கள். அவர்களெல்லாம் சேர்ந்துதான், தற்போது ஒப்பந்தத் தொழிலாளர் பிரச்னையை பெரிதாக்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக அரசியல்வாதிகள் களமிறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள்...’’ என்றார்.

தொழிலாளர் போராட்டம் குறித்து கடலூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. செயலாளர் சேகர்
                        ‘கடந்த 30 ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளர்களுக்காக போராடி வருகிறோம். 2008-ம் ஆண்டில் 5 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்குவதாகவும், சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிப்பதாகவும் என்.எல்.சி. நிர்வாகம் உடன்பட்டு கையெழுத்திட்டது. ஆனால் சொன்னபடி செய்யவில்லை. அதுக்காகத்தான் போராட்டம்...’’ என்றார்.

 ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் நலச்சங்க செயலாளர் வெங்கடேசன், 
                               “ஒரு மாதமாக நடக்கும் போராட்டத்தை தி.மு.க. முடிவுக்கு கொண்டுவர விரும்பியது. இது தொடர்பாக சென்னையில் அக். 10-ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் ரூபாய் 1040 சம்பள உயர்வுதர நிர்வாகம் சம்மதித்தது. அதனைத் தொடர்ந்து ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டு போராட்டத்தை விலக்கிக்கொள்வதாக அறிவித்தது, தி.மு.க. தொழிற்சங்கம். ஆனால் இதை யாரும் ஏற்கவில்லை. தொடர்ந்து போராட்டம் நடக்கிறது’’ என்றார்.

போராட்ட களத்தில் முன்னனியில் நிற்கும் பண்ருட்டி பா.ம.க., எம்.எல்.ஏ.வான வேல்முருகனை சந்தித்தோம்.


                             

                        “என்.எல்.சி.க்காக நிலம் கொடுத்தவர்கள் தான் 30 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்களாக உள்ளனர். அவர்களுக்காகத்தான் போராட்டமே. தற்போது கடலூர் மாவட்டத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறோம். அக். 22-ம் தேதி அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவுடன் சேர்ந்து பிரதமரை சந்தித்து மனு கொடுக்கப் போகிறோம். அதற்குப் பிறகும் நடவடிக்கை இல்லையென்றால் எங்கள் போராட்டம் தீவிரமாகும்...’’ என்றவர், ‘‘இந்தப் பிரச்னையில் தி.மு.க.வை தனிமைப்படுத்தியிருக்கிறோம்...’’ என்றும் சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டார்.

                       பிரச்னையை பேசி முடிக்காமல், ஏற்கனவே இருட்டுக்குள் இருக்கும் தமிழகத்தை நிரந்தரமா இருட்டுக்குள்ள தள்ளிடாதிங்க அரசியல்வாதிகளே!
 

Read more...

கொள்கையோடு இருக்கும் ஒரே கட்சி பாமக: டாக்டர் ச.ராமதாஸ்

வெள்ளி, 15 அக்டோபர், 2010

சிதம்பரம்:

                 தமிழகத்தில் கொள்கை ரீதியாக செயல் திட்டங்கள் கொண்டு செயல்படும் ஒரே கட்சி பாமகதான் என அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ச.ராமதாஸ் தெரிவித்தார்.

                 சிதம்பரத்தை அடுத்த சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

பாமக நிறுவனர் டாக்டர் ச.ராமதாஸ் முகாமை தொடங்கி வைத்து பேசியது:

              தமிழகத்தில் உள்ள அனைத்து வன்னியர்களும் ஒரே அணியில் இருந்தால் தமிழகத்தில் 100 தொகுதிகளில் பாமக தனித்து வெற்றி பெறும். விவசாயம், தொழில் உள்ளிட்ட அனைத்து துறையிலும் ஒவ்வொரு ஆண்டும் மாதிரி பட்ஜெட் தயாரித்து அறிஞர்கள் மற்றும் அறிவியலாளர்களுக்கு வழங்கும் செயல்திட்டம் உடைய ஒரே கட்சி பாமகதான். சமூக அக்கறை கொண்ட கட்சி பாமக என ச.ராமதாஸ் தெரிவித்தார்.

அன்புமணி ராமதாஸ் பேசியது:

                 கூட்டணி குறித்து ராமதாஸ் பார்த்துக் கொள்வார். நீங்கள் தேர்தல் பணிகளைப் பாருங்கள். தமிழகத்தில் அனைத்து கட்சிகளிலும் உள்ள இளைஞர்களை ஒன்று திரட்டி ஒரே அணியில் கொண்டு வர வேண்டும். புவனகிரி தொகுதியில் தனித்து நின்று போட்டியிட்டு வெற்றி பெற இளைஞர்கள் தற்போது தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தலித் மக்களுக்கு ஆதரவாக பல போராட்டங்களை நடத்தியவர் ராமதாஸ். அதனைத் தெரிந்து கொள்ளாமல் சிலர் பாமக கொடியை ஏற்ற எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 

                 ஒவ்வொரு வன்னிய இளைஞர்களும், இளம் பெண்களும் வீடு, வீடாகச் சென்று அனைவரையும் மனமாற்றம் செய்து நமது கட்சிக்கு மாறச்செய்தால் புவனகிரி தொகுதியில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியும் என்றார் அன்புமணி. மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் தேவதாஸ் படையாண்டவர் தலைமை வகித்தார்.

                  மாவட்ட முன்னாள் செயலாளர் சிட்டிபாபு, மாவட்டத் தலைவர் செல்வராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். புவனகிரி ஒன்றியச் செயலாளர் செல்வராசு வரவேற்றார். பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, ட்டப்பேரவை உறுப்பினர் தி.வேல்முருகன், மாநில சொத்து பாதுகாப்புக் குழுத் தலைவர் டாக்டர் ஆர்.கோவிந்தசாமி, துணைப் பொதுச்செயலாளர் திருமால்வளவன், துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more...

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் மறியல்: ராமதாஸ்

புதன், 29 செப்டம்பர், 2010


ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி சென்னை மெமோரியல் ஹால் அருகில் செவ்வாய்க்கிழமை கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க.வினர் நடத்திய ஆர்பாட்டம் 

சென்னை:

                 தமிழ்நாட்டில் உடனடியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடங்க வேண்டும். இல்லையெனில் அடுத்த மாதம் மாநிலம் முழுவதும் சாலை மறியல்  போராட்டம் நடத்துவோம் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பா.ம.க. சார்பில் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து, ராமதாஸ் பேசியது: 

                  தமிழகத்தில் அமலில் உள்ள இடஒதுக்கீட்டு முறையை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால், உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி உடனடியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியாக வேண்டும். ஆனால், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த இங்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த 40-க்கும் மேற்பட்ட சமுதாயத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 11-ல் முதல்வர் கருணாநிதியை சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

                   ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால், அடுத்த மாதம் மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்றார் ராமதாஸ். ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஏ.கே. மூர்த்தி, பொன்னுசாமி, வேல்முருகன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more...

கடலூரில் கல்லூரிகளுக்கு கூடுதல் பஸ் வசதி: பாமக மாணவர் சங்கம் கோரிக்கை

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010


கடலூர்:

              கடலூரில் கல்லூரிகளுக்கு மாணவர்கள் எளிதில் செல்லும் வகையில் கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பாமக கிழக்கு மாவட்ட மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்தது. இச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் சனிக்கிழமை நடந்தது. 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

                   கடலூர் கல்லூரிகளுக்கு கிராமப் புறங்களில் இருந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் நகரப் பஸ்களை இயக்க வேண்டும். கடலூர்- குறிஞ்சிப்பாடி, கடலூர்- பண்ருட்டி இடையே மகளிருக்கு மட்டும் தனிப் பஸ்களை இயக்க வேண்டும். பலமுறை இக்கோரிக்கை முன்வைத்தும் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து விரைவில் அரசு போக்குவரத்துக் கழக அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

                    கூட்டத்துக்கு மாணவர் சங்க மாவட்டத் தலைவர் பா.அருள்பாபு தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ராஜ்குமார் நாராயணன் வரவேற்றார். மாநில மாணவர் சங்கச் செயலர் கோபிநாத் முன்னிலை வகித்தார். பாமக மாநில துணைப் பொதுச் செயலர் தி.திருமால்வளவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசினார். பாமக மாவட்டச் செயலர் பஞ்சமூர்த்தி, நகரச் செயலர் ஆனந்த் உள்ளிட்ட பலர் பேசினர்.

Read more...

கடலூர் அருகே பாமக கொடிக் கம்பங்கள் சேதம்: ஆட்சியர் தலைமையில் அமைதிப்பேச்சு


கடலூர்:

                 கடலூர் அருகே பாமக கொடிக் கம்பங்கள் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக, இரு தரப்பினரிடையே மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமையில் வெள்ளிக்கிழமை அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது.

                   மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் முன்னிலை வகித்தார். பாமக மாநில இணைப் பொதுச் செயலர் தி.வேல்முருகன் எம்எல்ஏ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் சு.திருமாறன் உள்ளிட்ட இரு கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இனி எந்தப் பிரச்னையும் ஏற்படாது, சட்டம் ஒழுங்குக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் யாராவது நடந்து கொண்டால். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருப்போம் என்றும் இரு தரப்பினரும் தெரிவித்தனர்.

இந்நிலையில் பாமக மாநில துணைப் பொதுச் செயலர் தி.திருமால்வளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் கூறியிருப்பது:

                                     தலித் மக்கள் பலர் பாமகவில் இணைந்து வருகிறார்கள். இதைச் சகிக்க முடியாத சிலர், சாதிய மோதல்களைத் தூண்டுவது குறித்து, காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. பாமக மற்றும் வன்னியர்கள் தாழ்த்தப்ட்ட மக்களுக்கு விரோதிகள் என்று சித்தரிப்பதை பாமக முறியடிக்கும். உள்ள தலித் பொறுப்பாளர்கள் தாக்கப்பட்டு உள்ளனர். கொடிக் கம்பங்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. கடலூர் மாவட்ட காவல் துறை பாமகவுக்கு எதிராகவும் ஒரு குழுவுக்கு ஆதரவாகவும் வழக்குப் பதிவு செய்து இருப்பது கண்டனத்துக்கு உரியது என்றும் அறிக்கை தெரிவிக்கிறது

Read more...

தீவிரமடைகிறது என்எல்சி ஸ்டிரைக்: பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன் ஆதரவு

வியாழன், 23 செப்டம்பர், 2010

நெய்வேலி:
 
                 என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் 5-ம் நாளாக தொடர்கின்ற நிலையில், போராட்டத்துக்கு வலுசேர்க்கும் விதமாக செப்டம்பர் 25-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டமும், 27-ம் தேதி மனிதசங்கிலிப் போராட்டமும் நடைபெறும் என தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
 
                  என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 19 இரவுப் பணிமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் சென்னையில் மண்டல தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் முத்தரப்பு பேச்சில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாமல் தோல்வியடைந்தது.இதையடுத்து தொமுச, அதொஊச, பாதொச உள்ளிட்ட தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் ஸ்கியூபாலத்தில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
 
                                இப்போராட்டத்தை வாழ்த்திப் பேசிய அதிமுகவைச் சேர்ந்த எம்.பி. செம்மலை, தொழிலாளர்களின் பணிநிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிர்வாகம் உடனடியாக செவிசாய்த்து ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன் கலந்துகொண்டு பேசுகையில், 
 
                    ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக பலமுறை இதே இடத்தில் உண்ணாவிரதம் நடத்தியுள்ளேன். நிர்வாகம் தொடர்ந்து பிடிவாதப் போக்கைக் கடைபிடித்து வருகிறது. நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கை தொடர்பாக நிர்வாகத்துடன் பேச்சு நடத்தி தீர்வுகாண வேண்டும். அதற்கு அனைத்து அரசியல் கட்சியினரும் ஆதரவளிக்கிறோம். எனவே நிர்வாகம் 2 தினங்களுக்குள் தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து, பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். 
 
                 இல்லையெனில் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு, நெய்வேலி நகரின் முக்கிய வீதிகளில் மனிதசங்கிலிப் போராட்டத்தை செப்டம்பர் 27-ம் தேதி நடத்துவார்கள் என்றார் வேல்முருகன்.உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நெய்வேலியில் உள்ள தொமுச, பாதொச, அதொஊச, எல்எல்எப் மற்றும் திமுக, அதிமுக கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர். உண்ணாவிரதப் போராடத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்ததால், உண்ணாவிரதப் போராட்டம் பேச்சுவார்த்தை விளக்கப் பொதுக்கூட்டம் என அறிவிக்கப்பட்டது. 

                         கூட்டத்தின் இறுதியில் பேசிய பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன், இது உண்ணாவிரதப் போராட்டம்தான் என்றார். ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் மெயின்பஜார் காமராஜ் சிலையருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கச் செயலர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.

Read more...

தமிழகத்தில் 150 தொகுதிகளில் பாமகவுக்கு வாக்கு வங்கி: தி.வேல்முருகன் எம்எல்ஏ பேச்சு


சிதம்பரம்:

               மிழகத்தில் 150 தொகுதிகளில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் வகையில் ஒவ்வொரு தொகுதியிலும் 30 ஆயிரம் வாக்குகள் பாமகவிடம் உள்ளது என பாமக இணைப் பொதுச் செயலாளர் தி.வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்தார்.

                பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் 50 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. பாமக மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் வேணு.புவனேஸ்வரன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் முத்துகுமார் வரவேற்றார். பொதுக்குழு உறுப்பினர் தேவதாஸ் படையாண்டவர் உறுப்பினர் சேர்க்கை குறித்து விளக்கவுரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பாமக இணைப் பொதுச் செயலாளர் தி.வேல்முருகன் எம்எல்ஏ பங்கேற்று பேசியது: 

                 இன்னும் 4 அல்லது 5 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. கடலூர் மாவட்ட பாமகவை வலிமையாக்க புதிய உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பாமக ஆதரவு இன்றி எந்தக் கட்சியும் வெற்றி பெற முடியாது. தமிழகத்தில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வன்னியர் அதிகமுள்ள 55 தொகுதிகளைத் தேர்வு செய்து கட்சியை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

                  தமிழகத்தில்  நான்கரை ஆண்டுகள் அமைதியாக இருந்தவர்கள் தற்போது தேர்தலுக்காக சாதிக் கலவரத்தை தூண்டி ஆதாயம் தேடி வருகின்றனர். குறிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் பாமகவினரின் கொடிகம்பங்கள் வீழ்த்தப்பட்டு கொடி மற்றும் பேனர்கள் கிழிக்கப்படும் சம்பவம் தொடருகிறது. பாமகவினர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. பாமக சமூக நீதிக்காக பாடுபடும் இயக்கம், சாதிய கலவரம் கூடாது என ராமதாஸ் கூறி வருகிறார். ஆனால் கடலூர் மாவட்டத்தில் திட்டமிட்டு ஒரு வன்முறை கும்பல் கலவரத்தில் ஈடுபட்டு வருகிறது. 

                 தமிழகத்தில் திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிடத்தயாரானால் பாமகவும் தனித்து போட்டியிட தயாராக உள்ளது. பாமக கூட்டணி அமைப்பது குறித்து விமர்சனம் செய்கிறார்கள். திமுகவும், அதிமுகவும் மாறி, மாறி கூட்டணி வைத்துக் கொள்ளலாம். ஆனால் பாமக மட்டும் ஏன் மாற்றி கூட்டணி வைக்கக்கூடாது என தி.வேல்முருகன் கூறினார். கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் பி.கே.அருள் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

Read more...

வன்னியர் இடஒதுக்கீட்டின் போது மரணமடைந்த தியாகிகளுக்கு டாக்டர் ராமதாஸ் அஞ்சலி

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010


திண்டிவனம்:

              வன்னியர் இடஒதுக்கீட்டின் போது மரணமடைந்த தியாகிகளுக்கு திண்டிவனம் வன்னியர் சங்க அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பாமக நிறுவனர் ராமதாஸ் நினைவஞ்சலி செலுத்தினார். 1987-ல் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 18 பேர் மரணடைந்தனர். 

                   இவர்களின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க தலைமை அலுவலகத்தில் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாமக நிறுவனர் ராமதாசு அனைவரின் உருவ படத்துக்கும் பூ தூவி மெழுகு ஏற்றி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியின் போது முன்னாள் மத்திய அமைச்சர்கள் அன்புமணி ராமதாசு, வேலு, ஏ.கே.மூர்த்தி மற்றும் வன்னியர் சங்கத் தலைவர் குரு, பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி,மாநில் துணைப் பொதுச் செயலர் செந்தமிழ்செல்வன்,மாநில துணைச் செயலர் கருணாநிதி, மாவட்டச் செயலர் ஏழுமலை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்போது உயரிழந்த குடும்பங்களுக்கு நலத் திட்ட உதவிகளை ராமதாசு வழங்கினார்.

தேசிங்கு நினைவிடம்: 

                 இட ஒதுக்கீடு போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தேசிங்கு நினைவிடத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.கொள்ளுக்காரன்குட்டையில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் சிறுதொண்டமாதேவியைச் சேர்ந்த தேசிங்கு உயிரிழந்தார். இவரின் நினைவிடத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

                      இதில் முன்னாள் மத்திய அமைச்சர் அரங்கவேலு, மாநிலத் தலைவர் கோ.க.மணி, மாநில இணை பொதுச் செயலர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன், மாநில துணை பொதுச் செயலர் தி.திருமால்வளவன், வன்னிய சங்கத் தலைவர் குரு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Read more...

பா.ம.க., எம்.எல்.ஏ., வேல்முருகன் பேச்சு:

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

தேர்தல் வந்துவிட்டால் பா.ம.க., ஜாதிக்கட்சி என்று கூறுகின்றனர். பா.ம.க., கொள்கை உள்ள கட்சி. தமிழகத்தில் வேறு எந்த கட்சிக்கும் கொள்கை கிடையாது. கொள்கை தெரியாமல் நடத்தப்படும் கட்சிக்கெல்லாம் இன்று மக்கள் ஓட்டு போடுகின்றனர்.

Read more...

செல்போன் அரசியல் நடத்தக் கூடாது: பாமகவினருக்கு அன்புமணி கட்டளை

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

நெய்வேலி:

              பாமக நிர்வாகிகள் செல்போனில் அரசியல் நடத்துவதால் கிராமங்களில் கட்சி வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பாமகவினருக்கு செல்போன் ஒத்துவராது; அவற்றை உடைத்தெறியுங்கள் என்று நெய்வேலியில் வியாழக்கிழமை நடந்த கடலூர் மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

கூட்டத்தில்  பாமக  இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்  பேசியது: 

               30 ஆண்டுகளுக்கு முன் கட்சியினர் சைக்கிள், பஸ் போன்றவற்றின் மூலம் கிராமம் கிராமமாக சென்று கட்சியை வளர்த்தனர். ஆனால் இப்போது அனைத்து இடங்களிலும் செல்போன் வந்துவிட்டதால் எவரும் கிராமப்புறத்துக்கு செல்வதில்லை. வீட்டிலிருந்தபடியே செல்போன் மூலம் தகவலை சொல்லிவிட்டு அமர்ந்து விடுகின்றனர். இதனால் கட்சி எப்படி வளரும்? கடந்த 10 ஆண்டுகளாக கட்சி வளர்ச்சி பெறவில்லை. எனவே நிர்வாகிகள் அனைவரும் கிராமங்களுக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள பிரச்னைகளை கையில் எடுத்துப் போராட வேண்டும். கட்சியின் அனைத்து கிளைகளிலும் 25 வயதுக்குட்பட்டவர்களையே நிர்வாகிகளாக நியமிக்கவேண்டும். கட்சியின் பழைய நிர்வாகிகள் இளைஞர்களுக்கு வழிவிடவேண்டும்.

            தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 33 சதவீதம் பேர் வன்னியர்கள். இதில் 20 சதவீதம் தான் இடஒதுக்கீடு கேட்கிறோம். தற்போதுள்ள இடஒதுக்கீட்டால் பிற ஜாதியினர் அதிகம் பயனடைகின்றனர். வன்னியர்கள் பயன் அடைவது குறைவாக உள்ளது.  தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டம், 108 ஆம்புலன்ஸ் சேவை போன்ற புதிய திட்டங்கள் எனது முயற்சியால் வந்த திட்டங்கள். ஆனால் இன்று யார்யாரோ அதற்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள். 

                 சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ரூ.400 கோடி செலவாகும் என்கிறார் தமிழக முதல்வர். தமிழகத்தின் ஆண்டு வரவு செலவு திட்டமதிப்பீடு ரூ.69 ஆயிரம் கோடி. இதில் ரூ.400 கோடி செலவு செய்ய முடியாதா என்ன? என்றார் அன்புமணி.  மாநிலத் தலைவர் கோ.க.மணி, எம்.எல்.ஏ. தி.வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Read more...

கல்வி, வேலையில் 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு கடலூரில் பா.ம.க. ஆர்ப்பாட்டம்

வியாழன், 29 ஜூலை, 2010

கடலூர்:

               கடலூரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு கோரி கடலூர் கிழக்கு மற்றும் வடக்கு பா.ம.க. சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரை நிகழ்த்திய பா.ம.க. மாநில இணைப் பொதுச் செயலாளர் தி.வேல்முருகன் பேசியது: 

              வன்னியர்களுக்குக் கல்வி வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்று 1980 முதல் போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் எங்களது கோரிக்கை இன்னமும் நிறைவேறவில்லை. சாதிவாரியாக மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஏனென்றால் தற்போது 80 சதவீத கல்வி, வேலை வாய்ப்புகளை ஒரு சதவீதம் பேர் மட்டுமே அனுபவிக்கிறார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும். பதவிகளுக்காக நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. 

             பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்விக்காகவே போராட்டம் நடத்துகிறோம். அவர்கள் இன்னமும் முந்திரிக் காடுகளிலும், வயல் வெளிகளிலும்தான் வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள் என்றார் வேல்முருகன். ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணைப்பொதுச் செயலாளர் தி.திருமால்வளவன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.பஞ்சமூர்த்தி, வடக்கு மாவட்டச் செயலாளர் தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைமை அலுவலகச் செயலாளர் போஸ் ராமச்சந்திரன் வரவேற்றார்.

சிதம்பரம்: 

            கடலூர் (தெற்கு) மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் வேணு.புவனேஸ்வரன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் முத்து.குமார் வரவேற்ரார். மாநில இணை பொதுச்செயலாளர் தி.வேல்முருகன், துணைப் பொதுச்செயலாளர் தி.திருமால்வளவன், மாநில துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் இரா.சிலம்புச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.

விருத்தாசலம்: 

               விருத்தாசலத்தில் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி அருகில் பேரணி தொடங்கி பாலக்கரை வழியாக வட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். பின்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில முன்னாள் துணைப் பொதுச் செயலர் திருஞானம், மாவட்ட தலைவர் சின்னதுரை ஆகியோர் பேசினர். மாவட்ட செயலர் செல்வராசு வரவேற்றார். மாநில சொத்து பாதுகாப்புக்குழு தலைவர் மருத்துவர் கோவிந்தசாமி தலைமை ஏற்றார். நகர செயலர் முருகன், ஒன்றிய செயலர்கள் ராசவேல், வெங்கடேசன், செல்வகுமார், உத்தண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Halloween Comments - http://www.halloweentext.comகடலூர் மாவட்ட செய்திகள்




Read more...

பாமக தலைவராக ஜி.கே. மணி மீண்டும் தேர்வு

சனி, 10 ஜூலை, 2010

பாமக தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி.கே. மணிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவிக்கிறார் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ். உடன் அன்புமணி ராமதாஸ்
சென்னை:
            பாமக தலைவராக ஜி.கே. மணி மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.சென்னையில் வெள்ளிக்கிழமை பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஜி.கே. மணி தலைவராகவும், பொதுச்செயலாளராக வடிவேல் ராவணனும், பொருளாளராக அக்பர் அலி சையத்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
                அமைப்புச் செயலாளராக இருந்த பண்ருட்டி எம்.எல்.ஏ. வேல்முருகன் இணைப் பொதுச்செயலாளாரகவும், அன்புமணி ராமதாஸ் இளைஞரணி தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கோவிந்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஜி.கே. மணி, 1998-லிருந்து பாமக தலைவராக இருந்து வருகிறார். அதற்கு முன்பு மாநில துணைத் தலைவர், தொண்டரணி தலைவர் போன்ற பதவிகளை வகித்துள்ளார். இப்போது 7-வது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1996-லிருந்து எம்.எல்.ஏவாக இருக்கும் அவர் இப்போது சட்டப் பேரவை பாமக தலைவராகவும் இருந்து வருகிறார்.
தீர்மானங்கள்: 
             ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழை மத்தியில் ஆட்சி மொழியாகவும், உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் நூற்றுக்கு நூறு சதவீதம் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும். இலங்கை முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை சொந்த ஊரில் குடியமர்த்துவதில் மெத்தனம் காட்டி வரும் இலங்கை அரசுக்கு கண்டனம்; ஈழத் தமிழர்களுக்காக இலங்கை அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும்படி இந்தியா வலியுறுத்த வேண்டும்; தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படையினருக்கு கண்டனம்; கச்சத் தீவை மீட்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை அதிகரிக்கக் கூடாது. பெட்ரோலியப் பொருள்களின் மீதான வரிகளை மாநில அரசு குறைக்க வேண்டும், மண்ணெண்ணெய் மீதான விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும். காவரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பின்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Read more...

பா.ம.க., மகளிர் செயற்குழு பொறுப்பாளர்கள் கூட்டம்

வியாழன், 24 ஜூன், 2010


கடலூர்:

            பா.ம.க., மகளிர் செயற் குழு மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டம் கடலூர் கட்சி அலுவலகத்தில் நடந்தது.

             பாட்டாளி மகளிர் சங்க மாநில செயலாளர் சிலம் புச்செல்வி தலைமை தாங்கினார். எழிலரசி ரவிச் சந்திரன், அமுதா, தானாயி, தர்மலிங்கம், பஞ்சமூர்த்தி முன்னிலை வகித்தனர். அலுவலக செயலாளர் போஸ் ராமச்சந்திரன் வரவேற்றார். பா.ம.க., மாநில அமைப்புச் செயலாளர் எம்.எல்.ஏ., வேல்முருகன், மாநில துணை பொதுச் செயலாளர் திருமால்வளவன் பங்கேற்று பேசினர். மாலதி, கலைமதி, உஷாராணி, செல்வகுமாரி, மலர்விழி, சுமதி, பாக்கியம், ஜெயக்கொடி உட்பட பலர் பங்கேற்றனர்.

                  கூட்டத்தில் ஜூலை 18ம் தேதி நடக்கும் வன்னியர் மகளிர் பெரு விழாவில் கடலூர் மாவட்டத்தில் இருந்து 1,000 வாகனங்களில் செல்வது, ஜூலை 28ம் தேதி கடலூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகங்கள் முன் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பெருவாரியாக கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. தேவசுந்தரி நன்றி கூறினார்.


Read more...

தமிழில் பெயர்ப் பலகை: கடலூரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

செவ்வாய், 22 ஜூன், 2010

கடலூர்:

             கடலூரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனைத்து வணிக நிறுவனங்களிலும் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என்ற,​​ அரசாணையை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

               மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாமக மாநில துணைப் பொதுச் செயலர் திருமால்வளவன் தலைமை தாங்கினார்.​ மாவட்டச் செயலர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார்.​ மாவட்ட அலுவலகச் செயலர் போஸ் ராமச்சந்திரன் வரவேற்றார்.​ கட்சியின் அமைப்புச் செயலாளர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ.​ சிறப்புரை நிகழ்த்தினார். மாவட்டச் செயலர் பஞ்சமூர்த்தி,​​ நகரச் செயலர் ஆனந்த்,​​ ஒன்றியச் செயலர்கள் சிவகுமார்,​​ முருகன்,​​ விஜயகாந்த்,​​ சக்கரவர்த்தி,​​ தட்சிணாமூர்த்தி,​​ நகராட்சி உறுப்பினர்கள் திருமூர்த்தி,​​ ராதாகிருஷ்ணன்,​​ கமலநாதன்,​​ செந்தில்,​​ மாணவரணிச் செயலர் அருள்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விருத்தாசலம்:


              விருத்தாச்சலத்தில் நடைபெற்றஆர்ப்பாட்டத்துக்கு, ​பாமக நகரச் செயலர் முருகன் தலைமை ஏற்றார்.​ மாநில முன்னாள் துணைச் செயலர் திருஞானம்,​​ ஒன்றியச் செயலர்கள் செல்வக்குமார்,​​ வெங்கடேசன்,​​ ராஜவேல் மற்றும் நகர்மன்ற உறுப்பினர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக் குழு துணைத் தலைவர் பழனிவேல்,​​ நகர்மன்ற உறுப்பினர் தனபாண்டியன்,​​ ஊராட்சித் தலைவர் ஆசைத்தம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Halloween Comments - http://www.halloweentext.com 

Read more...

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP