தமிழில் பெயர்ப் பலகை: கடலூரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
செவ்வாய், 22 ஜூன், 2010
கடலூர்:
கடலூரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனைத்து வணிக நிறுவனங்களிலும் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என்ற, அரசாணையை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாமக மாநில துணைப் பொதுச் செயலர் திருமால்வளவன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட அலுவலகச் செயலர் போஸ் ராமச்சந்திரன் வரவேற்றார். கட்சியின் அமைப்புச் செயலாளர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. சிறப்புரை நிகழ்த்தினார். மாவட்டச் செயலர் பஞ்சமூர்த்தி, நகரச் செயலர் ஆனந்த், ஒன்றியச் செயலர்கள் சிவகுமார், முருகன், விஜயகாந்த், சக்கரவர்த்தி, தட்சிணாமூர்த்தி, நகராட்சி உறுப்பினர்கள் திருமூர்த்தி, ராதாகிருஷ்ணன், கமலநாதன், செந்தில், மாணவரணிச் செயலர் அருள்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விருத்தாசலம்:
விருத்தாச்சலத்தில் நடைபெற்றஆர்ப்பாட்டத்துக்கு, பாமக நகரச் செயலர் முருகன் தலைமை ஏற்றார். மாநில முன்னாள் துணைச் செயலர் திருஞானம், ஒன்றியச் செயலர்கள் செல்வக்குமார், வெங்கடேசன், ராஜவேல் மற்றும் நகர்மன்ற உறுப்பினர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக் குழு துணைத் தலைவர் பழனிவேல், நகர்மன்ற உறுப்பினர் தனபாண்டியன், ஊராட்சித் தலைவர் ஆசைத்தம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக