கொள்கையோடு இருக்கும் ஒரே கட்சி பாமக: டாக்டர் ச.ராமதாஸ்

வெள்ளி, 15 அக்டோபர், 2010

சிதம்பரம்:

                 தமிழகத்தில் கொள்கை ரீதியாக செயல் திட்டங்கள் கொண்டு செயல்படும் ஒரே கட்சி பாமகதான் என அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ச.ராமதாஸ் தெரிவித்தார்.

                 சிதம்பரத்தை அடுத்த சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

பாமக நிறுவனர் டாக்டர் ச.ராமதாஸ் முகாமை தொடங்கி வைத்து பேசியது:

              தமிழகத்தில் உள்ள அனைத்து வன்னியர்களும் ஒரே அணியில் இருந்தால் தமிழகத்தில் 100 தொகுதிகளில் பாமக தனித்து வெற்றி பெறும். விவசாயம், தொழில் உள்ளிட்ட அனைத்து துறையிலும் ஒவ்வொரு ஆண்டும் மாதிரி பட்ஜெட் தயாரித்து அறிஞர்கள் மற்றும் அறிவியலாளர்களுக்கு வழங்கும் செயல்திட்டம் உடைய ஒரே கட்சி பாமகதான். சமூக அக்கறை கொண்ட கட்சி பாமக என ச.ராமதாஸ் தெரிவித்தார்.

அன்புமணி ராமதாஸ் பேசியது:

                 கூட்டணி குறித்து ராமதாஸ் பார்த்துக் கொள்வார். நீங்கள் தேர்தல் பணிகளைப் பாருங்கள். தமிழகத்தில் அனைத்து கட்சிகளிலும் உள்ள இளைஞர்களை ஒன்று திரட்டி ஒரே அணியில் கொண்டு வர வேண்டும். புவனகிரி தொகுதியில் தனித்து நின்று போட்டியிட்டு வெற்றி பெற இளைஞர்கள் தற்போது தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தலித் மக்களுக்கு ஆதரவாக பல போராட்டங்களை நடத்தியவர் ராமதாஸ். அதனைத் தெரிந்து கொள்ளாமல் சிலர் பாமக கொடியை ஏற்ற எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 

                 ஒவ்வொரு வன்னிய இளைஞர்களும், இளம் பெண்களும் வீடு, வீடாகச் சென்று அனைவரையும் மனமாற்றம் செய்து நமது கட்சிக்கு மாறச்செய்தால் புவனகிரி தொகுதியில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியும் என்றார் அன்புமணி. மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் தேவதாஸ் படையாண்டவர் தலைமை வகித்தார்.

                  மாவட்ட முன்னாள் செயலாளர் சிட்டிபாபு, மாவட்டத் தலைவர் செல்வராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். புவனகிரி ஒன்றியச் செயலாளர் செல்வராசு வரவேற்றார். பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, ட்டப்பேரவை உறுப்பினர் தி.வேல்முருகன், மாநில சொத்து பாதுகாப்புக் குழுத் தலைவர் டாக்டர் ஆர்.கோவிந்தசாமி, துணைப் பொதுச்செயலாளர் திருமால்வளவன், துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP