பா.ம.க., மகளிர் செயற்குழு பொறுப்பாளர்கள் கூட்டம்
வியாழன், 24 ஜூன், 2010
கடலூர்:
பா.ம.க., மகளிர் செயற் குழு மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டம் கடலூர் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
பாட்டாளி மகளிர் சங்க மாநில செயலாளர் சிலம் புச்செல்வி தலைமை தாங்கினார். எழிலரசி ரவிச் சந்திரன், அமுதா, தானாயி, தர்மலிங்கம், பஞ்சமூர்த்தி முன்னிலை வகித்தனர். அலுவலக செயலாளர் போஸ் ராமச்சந்திரன் வரவேற்றார். பா.ம.க., மாநில அமைப்புச் செயலாளர் எம்.எல்.ஏ., வேல்முருகன், மாநில துணை பொதுச் செயலாளர் திருமால்வளவன் பங்கேற்று பேசினர். மாலதி, கலைமதி, உஷாராணி, செல்வகுமாரி, மலர்விழி, சுமதி, பாக்கியம், ஜெயக்கொடி உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஜூலை 18ம் தேதி நடக்கும் வன்னியர் மகளிர் பெரு விழாவில் கடலூர் மாவட்டத்தில் இருந்து 1,000 வாகனங்களில் செல்வது, ஜூலை 28ம் தேதி கடலூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகங்கள் முன் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பெருவாரியாக கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. தேவசுந்தரி நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக