நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் சார்பில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி : பா.ம.க.வேட்பாளர் வேல்முருகன்

புதன், 30 மார்ச், 2011

நெய்வேலி : 

              நெய்வேலி நகரம் எந்த அளவிற்கு அடிப்படை வசதிகளுடன் திகழ்கிறதோ அதுபோலவே நெய்வேலி தொகுதி முழுவதையும் மின்னொளியால் ஜொலிக்கச் செய்வேன் என பா.ம.க., வேட்பாளர் வேல்முருகன் கூறியுள்ளார்.

இதுகுறித்து  பா.ம.க., வேட்பாளர் வேல்முருகன் கூறியது: 

                   என்.எல்.சி.,யில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் இன்ஜினியர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை பெற்றுத் தருவேன். நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் இலவச கல்வி வழங்க நடவடிக்கை எடுப்பேன். மேலும், நெய்வேலியில் என்.எல்.சி., நிறுவனம் சார்பில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி உருவாக்கிக் கொடுக்கவும், அதில் என்.எல்.சி., தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு இலவச கல்விக்கு நடவடிக்கை எடுப்பேன். 

                என்.எல்.சி.,யில் ஐ.டி.ஐ., அப்ரண்டீஸ் முடித்தவர்களுக்கும், என்.எல்.சி., பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை பெற்றுத் தருவேன். என்.எல்.சி., நிறுவனத்திற்காக வீடு, நிலம் வழங்கிய, இழந்த மண்ணின் மைந்தர்களுக்கும் என்.எல்.சி.,யில் வேலை வாங்கித் தருவேன். நெய்வேலியில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் நியாயமான கட்டணத்தை வசூலிக்கச் செய்வேன். தென்குத்து வானதிராயபுரம் கிராமங்களில் சுரங்கங்களுக்கு வைக்கப்படும் வெடியால் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. 

               எனவே, இந்த கிராம மக்களுக்கு மாற்று குடியிருப்பு, நஷ்ட ஈடு மற்றும் வீட்டிற்கு ஒருவருக்கு வேலை பெற்றுத் தருவேன். என்.எல்.சி., நிர்வாகம் தொகுதி வளர்ச்சிக்காக வழங்கும் 2 கோடி ரூபாயை 5 கோடி ரூபாயாக உயர்த்தி பெற்று அதனைக் கொண்டு கிராமங்களுக்கு குடிநீர், சாலை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதோடு, நெய்வேலி நகரில் உள்ளது போல் தொகுதியை மின்னொளியால் ஜொலிக்கச் செய்வேன். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுப்பேன். 

               முந்திரிக் கொட்டை உடைக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க பாடுபடுவேன். மேலும், நெய்வேலி பிளாக் 21, 30 தாண்டவன்குப்பம் பகுதியில் வசூலிக்கப்படும் தரை வாடகையை ரத்து செய்து, மின் வசதியை ஏற்படுத்தி தருவேன். இவ்வாறு பா.ம.க., வேட்பாளர் வேல்முருகன் கூறினார்.

Read more...

PMK, AIADMK to slug it out in Neyveli constituency

T. Velmurugan, PMK MLA, who filed his nomination paper for Neyveli Assembly constituency on Wednesday. Photo: C. Venkatachalapathy
T. Velmurugan, PMK MLA, who filed his nomination paper for Neyveli Assembly constituency

Neyveli :

              The battle for the newly created Neyveli Assembly constituency, encompassing the entire Neyveli Township of the NLC and parts of Kurinjipadi and Panruti constituencies, is hotting up with the Pattali Makkal Katchi and the All India Anna Dravida Munnetra Kazhagam candidates gearing for a direct contest.

              Sitting Panruti MLA T. Velmurugan filed his nomination for the Neyveli constituency on PMK ticket on Wednesday. He sought to erase the impression that he is an outsider or from another constituency by stating that “it should not be misconstrued that he has shifted from Panruti to Neyveli. Since his birthplace is Puliyurkattusagai that forms part of Neyveli he is very much a son of the soil.”

        He told he was not a stranger to Neyveli because he had taken up the cause of 14,000 permanent employees and 13,000 contract workmen of the Neyveli Lignite Corporation at various forums and succeeded in getting their demands fulfilled to a fair extent. It would be his endeavour to get regularisation for contract workmen in a phased manner. He would hold talks with the NLC management to waive the charges for providing electricity to over 1,000 households with 10,000 population, all daily-wage workers and small-time vendors, living in Blocks 21 and 30 of the Neyveli Township.

            He said that the NLC management should enhance the annual allocation for peripheral development from Rs. 2 crore to Rs. 5 crore a year. He noted that former Union Health Minister Anbumani Ramadoss mooted the idea of converting the NLC general hospital into a medical college and he would strive to achieve the goal. He would seek suitable compensation and alternative sites for the residents of Thenkuthu and Vanathirayapuram whose houses had developed cracks and cattle heads were scared away by constant (controlled) explosions triggered in the NLC mines.

             Appreciating the contributions made by the officials for improving the NLC performance, he said he would work in close coordination with them to improve the lot of the employees that in turn would lead to increased production and productivity. He would pursue the idea of setting up units for producing feni (a beverage extracted from cashew nuts), and jackfruit pulp and jam. He would impress upon the government and the NLC management to protect and streamline the water sources and take permanent flood control measures.

Candidates

The other candidates who filed nominations in Neyveli are: 

V.Gayathri (DMK dummy candidate)
P.Chandra (Independent)

Read more...

பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் தி.வேல்முருகனின் சாதனை பட்டியல்

திங்கள், 28 மார்ச், 2011

பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் தி.வேல்முருகனின் சாதனை பட்டியல்

Read more...

விஜயகாந்த்துக்குப் பாடம் புகட்டுவோம் - வேல்முருகன்

அண்ணன் ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டி




         தமிழகத்தில் ஈழத் தமிழர் ஆதரவு மேடையானாலும், அரசியல் மேடையானாலும்... தனது கனல் பேச்சால் அனல் பறக்கவைப்பவர் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலாளரும், நெய்வேலி தொகுதியின் பா.ம.க வேட்பாளருமான வேல்முருகன்!

 ''எதிரெதிர் இயக்கங்கள் என்று சொல்லப்படுகிற பா.ம.க-வும் சிறுத்தைகளும் ஒரே அணியில் தேர்தலை சந்திப்பது எந்த மாதிரியான விளைவை ஏற்படுத்தும்?'' 

                 ''தமிழகத்தில் வன்னியர்களும், ஆதிதிராவிடர்களும் பூர்வீகக் குடிகள். ஆரம்ப காலங்களில் எங்களிடையே சிறு பிரச்னைகள், பூசல்கள், சலசலப்புகள் இருந்தது உண்மைதான். ஆனால், 'அவற்றை எல்லாம் மறந்து இரு கட்சியினரும் ஒன்றாக இணைந்து தமிழர்களுக்காக அரசியல்ரீதியாகப் பாடுபட வேண்டும்’ என்பதுதான் மருத்துவர் அய்யாவுக்கும், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தோழர் திருமாவளவனுக்கும் ஆசை. 

             அதைத்தான் ஒவ்வொரு கீழ்மட்டத் தொண்டனும் இது வரை எதிர்பார்த்தான். தேர்தல் களத்தில் வெவ்வேறு அணியில் தேர்தலை சந்திக்கவேண்டிய சூழல் ஏற்பட்டபோதும், தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு, 'தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ என்கிற ஓர் அமைப்பை உருவாக்கி, இரு இயக்கங்களும் இணைந்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் ஈழத் தமிழர் பிரச்னைகளுக்காகக் களத்தில் போராடி வந்தோம். இப்போதுதான் டாக்டர் கலைஞரின் தலைமையிலான கூட்டணியில் இரு இயக்கங்களும் ஓர் அணியில் இருந்து, தேர்தல் களத்தை சந்திக்கக்கூடிய வாய்ப்பு வந்தது. அய்யாவும், தோழர் திருமாவும் இணைந்து தொடர்ந்து பல பிரச்னைகளுக்கும் குரல் கொடுத்து வந்துள்ளதால், இந்தத் தேர்தலில் எந்தப் பிரச்னையும் இல்லை.''


  ''வட மாவட்டங்களில் தங்கள் கட்சிக்குத்தான் செல்வாக்கு அதிகம் என்று விஜயகாந்த் சொல்கிறாரே?''

                  ''கடந்த காலங்களில் வட மாவட்டங்களில், விடுதலைச் சிறுத்தைகளில் இருந்தும் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்தும் இளைஞர்கள் விஜயகாந்த் பக்கம் சென்றார்கள் என்பது உண்மை. விடுதலைச் சிறுத்தைகள் கொடி பறக்காத இடத்தில்கூட விஜயகாந்த் கொடி பறந்தது. அதேபோல பாட்டாளி மக்கள் கட்சி அமைப்புகள் இல்லாத இடத்தில்கூட விஜயகாந்த் ரசிகர்கள் இருந்தார்கள். இளைஞர்களின் சினிமா மோகம்தான் அதற்குக் காரணம். ஆனால், தொடர்ச்சியான பிரசாரம் நடத்தி, இளைஞர்களை ஒருங்கிணைத்து உள்ளோம். கடந்த காலங்களில் சிறுபான்மையினர் மட்டுமே தமிழகத்தை ஆண்டு வந்தனர். அதற்கு விதிவிலக்கானவர்கள், பெருந்தலைவர் காமராஜர், கலைஞர் இருவரும்தான். இவர்களைத் தவிர, தமிழர்கள் அல்லாதவர்களும், விவசாயத்தைப்பற்றித் தெரியாதவர்களும், இந்த மண்ணின் வரலாறு அறியாதவர்களும்தான் நம்மை ஆண்டனர். இப்போது, அந்த வரிசையில் வருகிறவர்தான் விஜயகாந்த். ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பாட்டாளி மக்கள் கட்சி ஃபீனிக்ஸ் பறவையைப்போல் புத்துணர்ச்சியோடு எழுந்துள்ளது. அதோடு, வெவ்வேறு அணிகளில் இருந்த சிறுத்தைகளும் நாங்களும் ஓர் அணியில் இருப்பதால், தே.மு.தி.க போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் அதை வீழ்த்துவோம். வட மாவட்டங்களில் விஜயகாந்த்துக்கு மறக்க முடியாத பாடம் புகட்டுவோம்!''


''ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக, பா.ம.க-வும் சிறுத்தைகளும் பல போராட்டங்கள் செய்துள்ளன. ஆனால், அதற்கு நேரெதிர் கொள்கையில் இருக்கும் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து இருப்பது சரியா?''


               ''தேர்தல் என்பது வரும், போகும். அது வேறு! ஆனால், ஈழத் தமிழர் ஆதரவு எங்கள் ரத்தத்தில் கலந்தது. என்றைக்கும் நிலைத்து இருக்கும். 'மேதகு பிரபாகரன் என் இதயத்தில் வாழ்கிறார்’ என்பதை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில், நான் சட்டமன்றத்திலேயே பதிவு செய்து இருக்கிறேன். தனி ஈழம் அமைவது என்பது, இந்தியாவுக்கே பாதுகாப்பான ஒன்று. அப்போதுதான் அண்டை நாடுகள் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களை சமாளிக்க முடியும். எனவே, மத்திய அரசு தனி ஈழம் அமைவதற்கு உதவ வேண்டும். அல்லது குறைந்தபட்சம், தனி ஈழம் அமைய இடைஞ்சலாவது தராமல் இருக்க வேண்டும். தேர்தலுக்காகவும், கூட்டணிக்காகவும் எங்கள் கொள்கைகளை மாற்றிக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை!''



''கடந்த மூன்று முறையும் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு வென்றவர், இப்போது நெய்வேலி தொகுதிக்கு வந்தது ஏன்?''


              ''மறு சீரமைப்பில் என் தொகுதியில் பெரிய அளவு மாற்றம் இல்லை. பண்ருட்டி நகரத்தை மாற்றிவிட்டு, அதற்கு பதிலாக 50 ஆயிரம் வாக்குகள் கொண்ட நெய்வேலி நகரத்தைப் புதிதாக இணத்துள்ளார்கள், அவ்வளவுதான். மற்றபடி, 90 சதவிகிதம் மக்கள் எனக்கு அறிமுகமான, தொடர்ந்து வாக்களித்துவந்த பழைய வாக்காளர்களே! புதிதாக வந்த நெய்வேலியிலும்கூட நான், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்காக பல போராட்டங்களை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை வெற்றிபெறச் செய்து உள்ளேன். அவர்களும் அறிமுகம் ஆனவர்கள்தான். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 13,000 ஒப்பந்தத் தொழிலாளர்களுக்காக 40 நாட்கள் அனைத்துக் கட்சியினரோடும் சேர்ந்து போராடி இருக்கிறேன். எனவே, இந்த மக்களைப் பொறுத்த வரை, நான் ஒரு செல்லப் பிள்ளை. இவர்களுக்கும் நான் பாதுகாவலன். என் வெற்றி நிச்சயம்!''

Read more...

என்எல்சி நிறுவன நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த நடவடிக்கை:புவனகிரி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் த.அறிவுச்செல்வன்

சிதம்பரம்:

              நெய்வேலி 3-வது அனல் மின்நிலைய விரிவாக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரை முழுமையாக விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுப்பேன் என புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் த.அறிவுச்செல்வன் தெரிவித்தார்.  

இது குறித்து புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் த.அறிவுச்செல்வன்   தெரிவித்தது: 

                   என்னை உறுப்பினராக தேர்ந்தெடுக்கும்பட்சத்தில் தொகுதியின் அடிப்படை முக்கிய பிரச்னைகளை முன்னின்று செயல்படுத்துவேன்.  ÷இத்தொகுதியின் மிகப்பெரிய ஏரியாக கருதப்படும் வாலாஜா ஏரியை ஆழப்படுத்தி, தடுப்பணைகளை உயர்த்தி வீராணம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை சேமித்து 11,400 ஏக்கருக்கு மேற்பட்ட வேளாண் நிலங்கள் பாசன பெற நடவடிக்கை மேற்கொள்வேன்.  


                 ஆண்டுதோறும் பரவனாற்றில் ஏற்படும் உடைப்பினால் எல்லைக்குடி, குமுடிமூலை உள்ளிட்ட கிராமங்கள் வெள்ளத்தில் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே பரவனாற்றை தூர்வாரி, ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்.  சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பேன். விவசாயிகளின் விளைப் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் சேமிப்புக் கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன்.  



                  சேத்தியாத்தோப்பை மையமாக கொண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க பாடுபடுவேன்.  தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சாலைகள் சீரமைக்க நடவடிக்கை எடுப்பேன். வறுமையில் வாழும் தொகுதி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான திட்டங்களை ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஆலோசனையையும், ஆதரவையும் பெற்று நிறைவேற்றுவேன் என த.அறிவுச்செல்வன் தெரிவித்தார்.  அரசியல் ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் தேவதாஸ் படையாண்டவர், முன்னாள் மாநில இளைஞரணி துணைச் செயலர் வேல்முருகன், மாவட்ட நிர்வாகிகள் சேரலாதன், குருசேவ் ஆகியோர் உடனிருந்தனர்.

Read more...

நெய்வேலியில் அரசு மருத்துவ கல்லூரி அமைய பாடுபடுவேன்: பா.ம.க. வேட்பாளர் வேல்முருகன்

ஞாயிறு, 27 மார்ச், 2011

நெய்வேலி:

               நெய்வேலியில் உள்ள பாட்டாளி தொழிற்சங்க அலுவலகத்தில் தொழிற் சங்கம் மற்றும் பா.ம.க. கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. பாட்டாளி தொழிற்சங்க பொதுச்செயலாளர் திலகர் வரவேற்றார். தலைவர் பெருமாள் முன்னிலை வகித்தார்.  
 
கூட்டத்தில் நெய்வேலி தொகுதி பா.ம.க. வேட்பாளர் வேல்முருகன் கலந்து கொண்டு பேசியதது:-

                  நெய்வேலியில் அமைந்துள்ள தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் பாட்டாளி தொழிற் சங்கம் ஆகியவைகள் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களாக உள்ளன. இந்த தொழிற் சங்கங்களின் உறுப்பினர்கள் முனைப்புடன் கூட்டணி கட்சியினருடன் ஒற்றுமையுடன் செயல்பட்டு தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும். நெய்வேலியில் தொழி லாளர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்காக களமிறங்கி போராடி வெற்றி பெற்றுள்ளேன்.

               பா.ம.க. கூட்டணி வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும். முன்னாள் மத்திய மந்திரி அன்புமணியின் கனவை நனவாக்கும் வகையில் நெய்வேலியில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க பாடுபடுவேன். 21, 30 ஆகிய வட்டங்களில் குடியிருக்கும் குடிசை வாழ் மக்களின் அடிப்படை பிரச்சினையான குடிநீர் மற்றும் மின்சாரம் பெற்றுத்தர முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் பலமுறை பேசியுள்ளேன். அவரும் கலெக்டர் மற்றும் என்.எல்.சி. நிறுவன தலைவரிடம் பேசியுள்ளார். இந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

               கூட்டத்தில் நெய்வேலி நகர செயலாளர் சக்கரவர்த்தி மற்றும் நிர்வாகிகள் ஜோதி பிரகாசம், வளர்மதி, பாட்டாளி தொழிற்சங்க பொருளாளர் மோனிகா, அலுவலக செயலாளர் சுப்பிரமணியன், வன்னியர் சங்க முன்னாள் செயலாளர் ஜோதிலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more...

புவனகிரி சட்டமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் அறிவுச்செல்வன் வேட்பு மனு தாக்கல்

வெள்ளி, 25 மார்ச், 2011

கடலூர்:
 
               புவனகிரி தொகுதி பா.ம.க. வேட்பாளர் அறிவுச்செல்வன் கடலூரில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி கல்யாணத்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது பா.ம.க. மாநில சொத்துப்பாதுகாப்பு குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி, கம்மாபுரம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஞானமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் திருமாறன், புவனகிரி ஒன்றிய குழு தலைவி தனலட்சுமி கலைவாணன் ஆகியோர் உடன் இருந்தனர்.  
பின்னர் பா.ம.க. வேட்பாளர் அறிவுச்செல்வன்  கூறியது:-


                 மிகவும் பின்தங்கிய தொகுதியான புவனகிரி தொகுதியில் உள்ள மக்களின் முன்னேற்றத்துக்காக நான் பாடுபடுவேன். புவனகிரி தொகுதியில் சென்ட் தொழிற்சாலை, மகளிர் அரசு கலைக்கல்லூரி, புத்தூர் பகுதியில் மணிமுக்தாற்றின் குறுக்கே பாலம் அமைக்கவும், இணைப்பு சாலைகள் அமைக்கவும் குரல் கொடுப்பேன். அதேபோல் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை கிடைக்கவும், நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வாங்கி தரவும் பாடுபடுவேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

                அப்போது வேல்முருகன் எம்.எல்.ஏ., பா.ம.க. மாநில துணை தலைவர் சண்முகம், துணைப் பொதுச்செயலாளர் திருமால்வளவன், முதனை செல்வராஜ், தேவதாஸ் படையாண்டவர், முன்னாள் மாநில துணைப் பொதுச் செயலாளர் திருஞானம் ஆகியோர் உடன் இருந்தனர்.


Read more...

கடலூர் (தெற்கு) மாவட்ட பாமக தேர்தல் பணிக் குழு தலைவர் நியமனம்

வியாழன், 24 மார்ச், 2011

சிதம்பரம்:

          பாமக கடலூர் (தெற்கு) மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவராக சிதம்பரம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த ப.மணிவண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை பாமக நிறுவனர் டாக்டர் ச.ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஒப்புதலின் பேரில் மாவட்டச் செயலாளர் வேணு.புவனேஸ்வரன் நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Read more...

நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் பா.ம.க.வேட்பாளர் வேல்முருகன் வேட்பு மனு தாக்கல்




நெய்வேலி : 

            ""என்.எல்.சி., அதிகாரிகளுக்கு எதிரானவன் என, சில விஷமிகள், புரளியை கிளப்பி விடுகின்றனர்,'' என, பா.ம.க., வேட்பாளர் வேல்முருகன் கூறினார். கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அவர், நில எடுப்பு துணை கலெக்டர் கந்தசாமியிடம்  மனு தாக்கல் செய்தார்.

 பின்பு  பா.ம.க., வேட்பாளர் வேல்முருகன் கூறியது 

                   நான், என்.எல்.சி., அதிகாரிகளுக்கு எதிரானவன் என்பது போன்ற புரளியை, சில விஷமிகள் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். நான், என்.எல்.சி.,யில் பணிபுரியும் அனைவருக்கும் பாதுகாப்பாக இருப்பேன். ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்னைகளை விரைவில் முடித்துக் கொடுப்பேன். நெய்வேலி தொகுதியில் என்.எல்.சி., தொழிலாளர்களுக்கு எவ்வித குறையும் கிடையாது. அவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். அவர்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் உருவானால், தொ.மு.ச., - பா.தொ.ச. உள்ளிட்ட அனைத்து கட்சியின் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் இணைந்து பிரச்னைகளை சரி செய்வேன். இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

Read more...

நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் பா.ம.க.தேர்தல் பணிகள் தீவிரம்

பண்ருட்டி : 

                நெய்வேலி தொகுதியில் பா.ம.க.-அ.தி.மு.க.  போட்டி காரணமாக இரு கட்சியினரும் தேர்தல் பணியில் சுறுசுறுப்படைந்துள்ளனர். 

             மறுசீரமைப்பில் உருவான நெய்வேலி தொகுதி பண்ருட்டியை சுற்றியுள்ள 30 கிராமங்கள் மற்றும் நெய்வேலி என்.எல்.சி., தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியாக உருவாகியதால் பண்ருட்டி தொகுதி பா.ம.க., எம்.எல்.ஏ., வேல்முருகன் நெய்வேலி தொகுதியில் போட்டியிட முடிவு செய்து நெய்வேலி தொகுதியில் தேர்தல் பணிகளை துவங்கினார். 

               வேல்முருகனுக்கு போட்டியாக அ.தி.மு.க., சார்பில் மாவட்ட முன்னாள் செயலர் சொரத்தூர் ராஜேந்திரன் நிறுத்தப்படுவார் என எண்ணி அ.தி.மு.க., கட்சியினர் தொகுதி முழுவதும் உள்ள கிராமங்களில் பா.ம.க., விற்கு இணையாக சுவர் விளம்பரத்திற்கு வெள்ளையடித்து பணிகளை துவக்கினர். இந்நிலையில் சொரத்தூர் ராஜேந்திரனுக்கு குறிஞ்சிப்பாடி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதல் பட்டியல் குளறுபடி காரணமாக நெய்வேலி தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் நிறுத்தப்படலாம் என கருதப்பட்டது. 

              இந்நிலையில் அ.தி.மு.க., வின் 2வது வேட்பாளர் பட்டியலில் சொரத்தூர் ராஜேந்திரனின் தீவிர ஆதரவாளரும் ஒன்றிய முன்னாள் சேர்மன் சிவசுப்ரமணியன் அறிவிக்கப்பட்டார். அதனால் நெய்வேலி தொகுதியில் பா.ம.க.- அ.தி.மு.க., போட்டியால் இருதரப்பினரிடையே கடும் போட்டி நிலவும் என்பதால் தற்போது இருகட்சிகளும் சுறுசுறுப்படைந்துள்ளனர்.

Read more...

புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் பா.ம.க. மனு தாக்கல்

கடலூர் : 

        புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் பா.ம.க., வேட்பாளர் உட்பட ஐந்து பேர் நேற்று மனு தாக்கல் செய்தனர். புவனகிரி தொகுதி பா.ம.க., வேட்பாளர் அறிவுச்செல்வன் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி கல்யாணத்திடம் நேற்று மனு தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக சாத்தமங்கலம் ராஜேந்திரன் மனு தாக்கல் செய்தார். இதேதொகுதிக்கு லோக் ஜனசக்தி சார்பில் சிதம்பரம் கமலக்கண்ணன், சுயேச்சைகளாக கம்மாபுரம் சவுந்தரராஜன், கீரப்பாளையம் முருகன் ஆகியோர் நேற்று மனு தாக்கல் செய்தனர். இதுவரை இத்தொகுதியில் ஐந்து பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

Read more...

PMK, AIADMK to slug it out in Neyveli constituency



 

Campaign:T.Velmurugan, PMK MLA, addressing his party workers on Wednesday.

NEYVELI: 

           The battle for the newly created Neyveli Assembly constituency, encompassing the entire Neyveli Township of the NLC and parts of Kurinjipadi and Panruti constituencies, is hotting up with the Pattali Makkal Katchi and the All India Anna Dravida Munnetra Kazhagam candidates gearing for a direct contest.

       Sitting Panruti MLA T. Velmurugan filed his nomination for the Neyveli constituency on PMK ticket on Wednesday. He sought to erase the impression that he is an outsider or from another constituency by stating that “it should not be misconstrued that he has shifted from Panruti to Neyveli. Since his birthplace is Puliyurkattusagai that forms part of Neyveli he is very much a son of the soil.”

           He told The Hindu that he was not a stranger to Neyveli because he had taken up the cause of 14,000 permanent employees and 13,000 contract workmen of the Neyveli Lignite Corporation at various forums and succeeded in getting their demands fulfilled to a fair extent.

Regularisation

            It would be his endeavour to get regularisation for contract workmen in a phased manner. He would hold talks with the NLC management to waive the charges for providing electricity to over 1,000 households with 10,000 population, all daily-wage workers and small-time vendors, living in Blocks 21 and 30 of the Neyveli Township. He said that the NLC management should enhance the annual allocation for peripheral development from Rs. 2 crore to Rs. 5 crore a year.

          He noted that former Union Health Minister Anbumani Ramadoss mooted the idea of converting the NLC general hospital into a medical college and that he would strive to achieve the goal. He would seek suitable compensation and alternative sites for the residents of Thenkuthu and Vanathirayapuram whose houses had developed cracks and cattle heads were scared away by constant (controlled) explosions triggered in the NLC mines.

          Appreciating the contributions made by the officials for improving the NLC performance, he said he would work in close coordination with them to improve the lot of the employees that in turn would lead to increased production and productivity. He would pursue the idea of setting up units for producing feni (a beverage extracted from cashew nuts), and jackfruit pulp and jam. He would impress upon the government and the NLC management to protect and streamline the water sources and take permanent flood control measures.

Read more...

நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தி.வேல்முருகன் அறிமுகம் செய்யும் கூட்டம்

புதன், 23 மார்ச், 2011

நெய்வேலி:

      தொழிலாளர்களிடையே இவர் நிரந்தரத் தொழிலாளி, இன்னொருவர் ஒப்பந்தத் தொழிலாளி என பேதம் பார்த்து பணியாற்றவில்லை. அனைவரின் கோரிக்கைக்காகவும் நான் குரல் கொடுத்து போராடியிருக்கிறேன் என நெய்வேலியில் திங்கள்கிழமை நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வேல்முருகன் பேசினார்.  

              நெய்வேலித் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தி.வேல்முருகனை அறிமுகம் செய்யும் கூட்டம் நெய்வேலியில் உள்ள அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் குடியிருப்பில் திங்கள்கிழமை நடந்தது. இக்கூட்டத்திற்கு திமுக நகரச் செயலர் புகழேந்தி தலைமைவகித்தார். 

               அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேல்முருகனை அறிமுகம் செய்து வைத்து, அவருக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என நெய்வேலி நகர திமுகவினருக்கு உத்தரவிட்டார்.  


இதைத்தொடர்ந்து நெய்வேலித் தொகுதி பாமக வேட்பாளர் தி.வேல்முருகன் பேசுகையில்,

                 ""நான் அடிப்படையில் திமுகவில் இருந்து பின்னர் பாமகவில் வளர்ந்து வந்தவன். எனது தொகுதிக்குட்பட்ட மக்களுக்காக நான் குரல் கொடுப்பதில் என்றைக்கும் தயங்கியது கிடையாது. மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் குணம் உள்ளவன்.  திமுக தலைமைக்கும், பாமக தலைமைக்கும் இடையே ஒரு அணிலாக இருந்து தூது சென்று கூட்டணி அமைய காரணமாக இருந்துள்ளேன்.  

                என்னைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் தவறான அபிப்பிராயம் இருந்தால் அதை நேரிடையாக கேளுங்கள் நான் உங்களுக்கு பதில் கூற கடமைப்பட்டுள்ளேன்.  நான் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதிலும், இங்குள்ள ஜவகர் பள்ளி ஆசிரியர்கள் பிரச்னை, அப்ரண்டீஸ் இளைஞர்கள் பிரச்னை, வட்டம் 21-30 மக்களின் வாழ்வாதார பிரச்னை, ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிரச்னை என அனைத்து பிரச்னைகளுக்கும் சட்டமன்றத்தில் குரல் கொடுத்து மாநில அரசின் கவனத்தை ஈர்த்துள்ளேன்.  

                நிரந்தரத் தொழிலாளர்களின் போனஸ், ஊக்கத்தொகை பிரச்னைகளுக்கும் குரல் கொடுத்ததோடு, இங்குள்ள தொழிற்சங்க நிர்வாகிகளோடு ஒன்றாக அமர்ந்து பிரச்னை முடியும் வரை அவர்களுக்காக போராடியிருக்கிறேன்.  எனது தொகுதி வாசிகளின் பிரச்சனைகள் தீர 24 மணிநேரமும் உழைக்க நான் காத்திருக்கிறேன்'' என்றார் வேல்முருகன்.,  

                   கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், மூமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நெய்வேலியில் வசிக்கும் பண்ருட்டி திமுக வேட்பாளர் சபா.ராஜேந்திரனும் வேல்முருகனுக்கு ஆதரவு அளிக்கவேண்டுமென திமுகவினரை கேட்டுக்கொண்டார். 

Read more...

தி.வேல்முருகனுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற எம்.ஆர்.கே. வேண்டுகோள்

செவ்வாய், 22 மார்ச், 2011

நெய்வேலி:

               திமுக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் தி.வேல்முருகனுக்கு ஆதரவாக  தேர்தல் பணியாற்றுமாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார். நெய்வேலித் தொகுதி பாமக வேட்பாளர் தி.வேல்முருகனுக்கு ஆதரவு கேட்டு தேர்தல் பணியாற்றுவது தொடர்பாக நெய்வேலி நகர திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நெய்வேலியில் சனிக்கிழமை நடைபெற்றது.

அப்போது பேசிய தொமுச செயலர் கோபாலன், 

                 அனைவரும் ஓரணியில் திரண்டு, பாமக சார்பில் போட்டியிடும் தி.வேல்முருகனுக்கு களம் இறங்கி தேர்தல் பணியாற்றி, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

நிறைவுரையாற்றிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், 

              "திமுக-பாமக கூட்டணி ஏற்பட்டதில் வேல்முருகனுக்கும் பெரும் பங்கு உள்ளது.   அதனால் வேல்முருகனை வெற்றி பெற வைக்கவேண்டும்' என்றார் பன்னீர்செல்வம்.

Read more...

நெய்வேலி சட்டமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் திரு. தி.வேல்முருகன் வாழ்க்கை வரலாறு

சனி, 19 மார்ச், 2011

 http://meenakam.com/wp-content/uploads/2010/08/velmurugan-mla-e1290761202333-150x150.png

கட்சி : பா.ம.க. 
பெயர் : தி.வேல்முருகன் 
வயது : 40 
கல்வி : பி.ஏ. 
வசிப்பிடம் : பண்ருட்டி
தொழில் : விவசாயம் 
சமூகம் : வன்னியர் 
பொறுப்பு : பாமக மாநில இணைப் பொதுச் செயலர் 
பதவி : பண்ருட்டி எம்.எல்.ஏ.  ( 2006 )
குடும்பம் : மனைவி - காயத்ரி
தந்தை - திருநாவுக்கரசு 
தாய் - தனகோடி அம்மாள்

Read more...

7 தொகுதிகளுக்கான பா.ம.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

வெள்ளி, 18 மார்ச், 2011

            2011 சட்டமன்றத்  தேர்தலில் 7 தொகுதிகளுக்கான பா.ம.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 

அதன் விவரம் வருமாறு:- 

1. மேட்டூர் - ஜி.கே.மணி, 
2. ஜெயங்கொண்டம் - ஜெ.குரு,
3. நெய்வேலி- தி. வேல்முருகன், 
4. அணைக்கட்டு - மா.கலையரசு,
5. ஆலங்குடி - டாக்டர் அருள்மணி,
6. சோழவந்தான் - மு.இளஞ்செழியன்,
7. கோவில்பட்டி - கோ.ராமச்சந்திரன்

Read more...

நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் பா.ம.க. தேர்தல் பணிகள் துவக்கம்

வியாழன், 17 மார்ச், 2011

பண்ருட்டி : 

             நெய்வேலி தொகுதி பனிக்கன்குப்பம் ஊராட்சியில் பா.ம.க., வினர் சின்னம் வரையும் பணிகள் துவங்கினர். பண்ருட்டி தொகுதியில் இருந்த முந்திரி பயிர் செய்யும் கிராமங்கள் தற்போது மறுசீரமைப்பில் நெய்வேலி என்.எல்.சி., உள்ளடக்கி நெய்வேலி தொகுதியானது.

              இதனால் பண்ருட்டி எம்.எல்.ஏ., வேல்முருகன் நெய்வேலி தொகுதியில் போட்டியிட முடிவு செய்து கடந்த சில ஆண்டுகளாகவே நெய்வேலி தொகுதியில் பூத் வாரியாக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமித்து பணிகளை துவங்கினார். கடந்த சில வாரங்களாக கிராமங்களில் உள்ள வீட்டின் சுவர்களில் விளம்பரம் செய்வதற்காக வெள்ளையடித்தனர். நேற்று முன்தினம் முதல் மாம்பழ சின்னம் வரைந்து, சாதனை பட்டியல்களை எழுதி பணிகள் செய்து வருகின்றனர்.


Read more...

நெய்வேலி சட்டமன்றத் தொகுதி - தி.வேல்முருகன் வேட்பாளராக பாமகஅதிகாரபூர்வ அறிவிப்பு

    திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 30 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.   30 தொகுதிகளில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாமக அறிவித்துள்ளது.

அதன் விபரம்:
1.மேட்டூர் -கோ.க.மணி,

2.ஜெயங்கொண்டம் -ஜெ.குரு,
  3.நெய்வேலி- தி.வேல்முருகன்

Read more...

கடலூர் மாவட்டத்தில் 2 தொகுதிகளில் பாமக போட்டி

புதன், 16 மார்ச், 2011


             திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் நேற்று முடிவு செய்யப்பட்டன.    திமுக - பாமக உடன்பாடு ஏற்பட்டது.    இதையடுத்து திமுக தலைவர் கருணாநிதியும், பாமக நிறுவனர் ராமதாசும் உடன்பாட்டில் கையெழுத்தும் இட்டனர்.

      தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க கட்சி போட்டியிடும் 30 தொகுதிகள் பட்டியல்  வெளியிடப்பட்டது. அதில் கடலூர் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. நெய்வேலி, மற்றும் புவனகிரி சட்டமன்றத் தொகுதிகள்
பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

             நெய்வேலி  தொகுதியில் எம்.எல்.ஏ.தி. வேல்முருகன் வேட்பாளராகவும்   புவனகிரி தொகுதியில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த திரு. அறிவுசெல்வன்  அல்லது திரு.தேவதாஸ் படையாட்சியார் அல்லது திரு.பேராசரியர் திருநாவுகரசு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

Read more...

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP