தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.எஸ்.மோகனை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பிரசாரம்

திங்கள், 31 மார்ச், 2014

தருமபுரி  நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.எஸ்.மோகனை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் 30.03.2014 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு துறை  அலுவலகம் முன்பு நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.

கூட்டத்திற்கு மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன்,   தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வை.காவேரி, அமைப்பு செயலாளர்  மே.ப.காமராஜ், இணைப் பொது செயலாளர் சண்முகம், துணை பொதுச் செயலாளர் சி.தவமணி, மாவட்டச் செயலாளர் முனிரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேசியது:

உலகத்தில் தொன்மையான நாகரீகம் கொண்டது தமிழனின் நாகரீகம். ஆனால், இன்றைக்கு தமிழன் உலக அரங்கில் தலை குனிந்து வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறான். தங்களது உரிமைகளுக்காக இலங்கையில் போராடிய தமிழ் உறவுகளை கொத்துக்கொத்தாக தடை செய்யப்பட்ட குண்டுகளை பொழிந்து அழித்தவர் இலங்கை அதிபர் ராஜபட்ச. அவருக்கு ராணுவ உதவி செய்தது காங்கிரஸ் மத்திய அரசு. அதற்கு உறுதுணையாக இருந்தவர் திமுக தலைவர் கருணாநிதி.

இந்தநிலையை மாற்றி தனித் தமிழ் ஈழம் அமைய வேண்டும். ராஜபட்சவுக்கு சர்வதேச நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத் தரவேண்டும். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி தமிழன் தலைநிமிர்ந்து வாழ வழி செய்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இந்தத் தீர்மானங்கள் அனைத்தும் அதிமுக தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற்றிருக்கின்றன.

60 ஆண்டுகால போராட்டத்துக்கு தேர்தல் அறிக்கையில் தீர்வு சொல்கிறார் ஜெயலலிதா. எனவே, அவர் இந்தியாவின் பிரதமராக வரவேண்டும். தமிழ் இனத்துக்கு துரோகம் செய்த காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் வீழ்த்தப்பட வேண்டும். இதற்காக அனைத்துத் தரப்பினரும் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

எதுவும் செய்யவில்லை: 


தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அன்புமணி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் தங்களது சமூகத்தின் பெயரைச் சொல்லி அரசியல் செய்து வருகின்றனர். ஆனால், அவர்கள் வெற்றி பெற்று பதவிக்கு வரும்போது அந்த சமூகத்துக்கு துரோகத்தை மட்டுமே செய்து வருகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்தை விமர்சித்தவர்கள் இன்று தேர்தலுக்காக கூட்டணி அமைத்துள்ளனர் என்றார் அவர்.














Read more...

கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.அசோக்குமாரை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் ஊத்தங்கரையில் பிரசாரம்

ஞாயிறு, 30 மார்ச், 2014

கிருஷ்ணகிரி  நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.அசோக்குமாரை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் 29.03.2014 (சனிக்கிழமை) அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில்  நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.

கூட்டத்துக்கு ஊத்தங்கரை அதிமுக ஒன்றிய செயலாளர் நாராயணசாமி தலைமை வகித்தார். நகரச் செயலாளர் பி.கே.சிவானந்தம் வரவேற்றார். ஊத்தங்கரை சட்டபேரவை உறுப்பினர் மனோரஞ்சிதம், மாவட்ட அண்ணா தொழில்சங்கத் தலைவர் நாகராஜ், மாநில நில வள வங்கித் தலைவர் சாகுல் அமீது, தலைவர் கிருஷ்ணன், துணைத் தலைவர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேசியது:

 
மத்தியில் 11 ஆண்டுகள் அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ் வன்னியர் சமுதாயத்துக்கு ஏதும் செய்யவில்லை. எந்த தேசியக் கட்சியுடனும் கூட்டணி வைப்பதில்லை என ராமதாஸ் கூறினார். ஆனால், தற்போது பாஜகவுடன்  கூட்டணி வைத்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா, இலங்கை படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு  பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனத் தேர்தல் அறிக்கையில் அறிவித்தார். இதனால், அவருக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்கிறேன் என்றார்.
 


Read more...

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.எஸ்.மோகனை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம்

சனி, 29 மார்ச், 2014

தருமபுரி  நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.எஸ்.மோகனை ஆதரித்து தருமபுரியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி  மற்றும்  அ.தி.மு.க சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் 30.03.2014  (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறுகிறது.

பி.எஸ்.என்.எல் தொலைத் தொடர்பு துறை அலுவலகம் அருகே நடைபெறும் கூட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி மேற்கு மாவட்டச் செயலாளர் கு.முனிரத்தினம் தலைமை வகிக்கிறார். அதிமுக நகரச் செயலாளர் பி.குருநாதன் வரவேற்கிறார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன், மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். அதிமுக மாவட்டச் செயலாளர் கே.பி.அன்பழகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில அமைப்பு செயலாளர் மே.ப.காமராஜ், துணை பொதுச் செயலாளர் சி.தவமணி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

Read more...

வி.பி.சிங், தேவ கௌடா போல மக்களவைத் தேர்தலுக்கு பின்பு ஜெயலலிதா பிரதமராவார் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் பேட்டி

கிருஷ்ணகிரியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத்  தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் அவர்கள் 28.03.2014 (வெள்ளிக்கிழமை) அன்று  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெரும். அப்போது, தேவ கௌடா, வி.பி.சிங், போன்றோர் பிரதமரானது போல  தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வாய்ப்பு உள்ளது. எனவே, வாக்காளர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். தமிழகத்தின் உரிமையைக் காப்பதுடன், நதிநீர் உரிமையைப் பெறுவோம் என ஜெயலலிதா தெரிவித்ததால், அவரை தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரிக்கிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் தோல்வியைச் சந்திப்பார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசிய கட்சி, திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கமாட்டேன் என பாமக நிறுவனர் தலைவர் ராமதாஸ் கூறினார். ஆனால், அதற்கு மாறாக இப்போது தேசிய கட்சியான பாஜக, திராவிட கட்சிகளான தேமுதிக, மதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளார். இது அவரது சந்தர்ப்பவாத சுயநலக் கூட்டணியாகும். 

தமிழகத்தில் உள்ள 20சத இளைஞர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க உள்ளனர். வன்னிய சமுதாயத்தினர் யாரும் பாமகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் ஜி.கே.மணியும், தருமபுரி தொகுதியில் போட்டியிடும் அன்புமணி ராமதாசும்  வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். சம்பந்தப்பட்ட தொகுதியின் வாக்காளர்கள் உள்ளூர் வேட்பாளருக்கே வாக்களிப்பார்கள். இதனால், உள்ளூரைச் சேர்ந்த அதிமுக வேட்பாளர்களான கிருஷ்ணகிரி கே.அசோக்குமார், தருமபுரி மோகன் ஆகியோர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்றார் அவர்.

பேட்டியின் பொது மாவட்டப் பொறுப்பாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Read more...

காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி (தனி) அ.தி.மு.க வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பிரசாரம்

வியாழன், 27 மார்ச், 2014



காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி (தனி) அ.தி.மு.க வேட்பாளர் திருமதி.மரகதம் குமரவேல் அவர்களுக்கு ஆதரவாக 26.03.2014 (செவ்வாய்க்கிழமை) மாலை 7.00 மணி அளவில் உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் வாக்கு சேகரித்தார்.

தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேசியது:

தினம் ஒரு அறிக்கை, வாழ்நாள் முழுவதும் கூட்டணி யாருடனும் இல்லை என கூறியவர்கள் தற்போது பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றனர். யாருடனும் கூட்டணி இல்லை எனக் கூறி வந்த ராமதாஸ் தன் மானத்தை அடமானம் வைத்து விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணி அமைத்து பா.ம.க பலம் வாய்ந்த தொகுதிகளை தாரை வார்த்து கொடுத்துவிட்டார். இது வன்னிய மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் ஈழத்தமிழர்களின் வாழ்வை பாழடைத்து அதன் மூலம் சுயலாபம் அடைந்தது. இந்திய அரசின் முழு ஒத்துழைப்பு மூலமே இக் கொடுஞ்செயல் நடைபெற்றதாகவும் கூட்டணி கட்சிகளான தி.மு.க. கூட எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் தனது சுயலாபத்தையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டது.

இந்நிலையில் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் போர் குற்றவாளியாக அறிவிக்கவும் அந்நாட்டின் மீது பொருளாதார தடைவிதிக்க தமிழக சட்ட மன்றத்தின் 110 விதியின் கீழ் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக உரத்தகுரல் பதிவு செய்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா. உலக தமிழர்களின் பாதுகாப்பு ஒன்றே அ.தி.மு.க.வின் குறிக்கோள் எனக் கூறும் அ.தி.மு.க.விற்கு அதை செயல்படுத்தும் விதத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும். நெய்வேலி நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் 40ஆயிரம் பேர் வாழ்வை மீட்டவர் ஜெயலலிதா தான்.

மேலும் தமிழகத்தில் அ.தி.மு.க.வின் சாதனைகளைக் கண்டு அஞ்சி பாரம்பரிய காங்கிரஸ் நிர்வாகி கூட தேர்தலில் நிற்க பயப்படும் நிலையில் உள்ளது. எனவே ஒட்டு மொத்த தமிழகத்தின் நிலைமாறவும் உலக அளவில் இந்தியா வளர்ச்சி காணவும் அ.தி.மு.க.விற்கு வாக்கு அளிக்க வேண்டும் என்றார்.

பிரசார கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் சிட்லப்பாக்கம் இராஜேந்திரன், சட்ட மன்ற உறுப்பினர்கள் வி.சோமசுந்தரம், வாலாஜாபாத் பா.கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்

Read more...

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் கே.என்.ராமச்சந்திரனை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தேர்தல் பிரசாரம்

புதன், 26 மார்ச், 2014




ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.என்.ராமச்சந்திரனை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் தாம்பரத்தில் 25.03.2014 அன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார். 
அப்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பேசியது: 

 காவிரி நதிநீர் பிரச்னையில் கருணாநிதியால் செய்ய முடியாத சாதனையை மத்திய அரசிதழில் வெளியிட வைத்து சாதனை படைத்தவர் முதல்வர் ஜெயலலிதா. முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சிக்க முயன்ற கேரள அரசைத் தடுத்து தட்டிக் கேட்டவர். தமிழகத்தின் நலனுக்காக தில்லியில் பிரதமர் கூட்டிய கூட்டத்தில் தனது மாநில மக்களின் தேவைக்கான கோரிக்கைகளை காது கொடுத்துக் கேட்கக் கூட அவகாசம் அளிக்காத மத்திய அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்தவர் ஜெயலலிதா.

கூடங்குளம் அணுஉலை விவகாரத்திலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்திலும், இலங்கையில் தனி ஈழம் தொடர்பான விவகாரத்திலும் பாரதீய ஜனதா கட்சி ஆதரவு அளிக்க முன் வராத நிலையில் பாரதீய ஜனதா கட்சியுடன் வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளனர். பாரதீய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையில் தனி ஈழம், போர் குற்றவாளியாக ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவது குறித்த எந்த வாக்குறுதியும் இல்லை.

விஜயகாந்தை கேவலமாக பேசிய ராமதாஸ் இன்றைக்கு விஜயகாந்திடம் வட தமிழகத்தை தாரை வார்த்து விட்டார். தமிழ்நாட்டில் 5 வன்னியர்களை அமைச்சர்களாக்கி பெருமை சேர்த்தவர் ஜெயலலிதா. அ.தி.மு.க.வை ஒழிப்பேன் என்று கூறுகிறார் ராமதாஸ். அ.தி.மு.க. இரும்பு கோட்டை. யாராலும் அழிக்க முடியாது. தமிழகத்தில் 33 சதவீத ஓட்டுக்களுடன் தமிழ் இன உணர்வாளர்கள் 15 சதவீதம் ஓட்டும் பெற்று 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. ஜெயலலிதா பிரதமராவதும் உறுதி. தமிழகத்தின் நலனுக்காக செயல்பட்டு வரும் முதல்வர் ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்த அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்அமைச்சர் டி.கே.எம். சின்னையா, மாநில எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் அலெக்ஸாண்டர், நகர மன்ற தலைவர் கரிகாலன், துணை தலைவர் கோபிநாதன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கூத்தன், மாவட்ட பிரதிநிதி பரசுராமன், நகர துணை செயலாளர் என். கிருஷ்ண மூர்த்தி, கவுன்சிலர்கள் மார்க்கெட் பாபு, வேலு, சேலையூர் சங்கர், சத்யா, அ.தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Read more...

காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி (தனி) அ.தி.மு.க வேட்பாளர் திருமதி.மரகதம் குமரவேலை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பிரசாரம்

காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி (தனி) அ.தி.மு.க வேட்பாளர் திருமதி.மரகதம் குமரவேல் அவர்களுக்கு ஆதரவாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் இன்று 26.03.2014 (செவ்வாய்க்கிழமை) மாலை 7.00 மணி அளவில் உத்திரமேரூர் பகுதியிலும், இரவு 9.00 மணி அளவில் காஞ்சிபுரத்திலும் பிரசாரம் செய்கிறார். 


Read more...

தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பிரசாரம்

செவ்வாய், 25 மார்ச், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தனை அவர்களை ஆதரித்து 24.03.2014 அன்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் வாக்கு சேகரித்தார். 










Read more...

கடலூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவனை ஆதரித்து ஜெயலலிதா அவர்கள் பிரசாரம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பங்கேற்பு

திங்கள், 24 மார்ச், 2014

கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் 23.03.2014 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவனை ஆதரித்து தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலருமான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் பிரசாரம் செய்தார்.

பிரசார கூட்டத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எம்.சி.சம்பத், வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர் சொரத்தூர் ராஜேந்திரன், எம்.பி.எஸ்.சிவசுப்ரமணியன், தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர் தமிழழகன், கடலூர் நகரச் செயலாளர் ஆர்.குமரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 

Read more...

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமாரை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பிரசாரம்

சனி, 22 மார்ச், 2014

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமாரை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பிரசாரம் செய்கிறார். 

 நாள் : 22.03.2014 (சனிக்கிழமை ) 
நேரம் : மாலை 5.00 மணி அளவில்
இடம் : மத்திய சென்னை


Read more...

வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் டி.ஜி.வெங்கடேஷ் அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பிரசாரம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் டி.ஜி.வெங்கடேஷ் பாபுவை அவர்களுக்கு 21.03.2014 (வெள்ளிக்கிழமை) மாலை 5.00 மணி அளவில் வாக்கு சேகரித்தார்.











Read more...

திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் டாக்டர் பி.வேணுகோபால் அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் வாக்கு சேகரித்தார்

வெள்ளி, 21 மார்ச், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் 20.03.2014 அன்று தொடங்ங்கினார்.

து முதல் தேர்தல் பிரசாரத்தில் முதலில் திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் டாக்டர் பி.வேணுகோபால் அவர்களுக்கு20.03.2014 (வியாழக்கிழமை) மாலை 4.00 மணி அளவில் திருவள்ளூர் மணவாளன் நகரில் வாக்கு சேகரித்தார்.











Read more...

வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் டி.ஜி.வெங்கடேஷ் பாபுவை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பிரசாரம்

வியாழன், 20 மார்ச், 2014

வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் டி.ஜி.வெங்கடேஷ் பாபுவை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பிரசாரம் செய்கிறார்.

நாள்: 21.03.2014 (வெள்ளிக்கிழமை )
நேரம்: மாலை 5.00 மணி அளவில் .

Read more...

அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் முதற்கட்டமாக 19 தொகுதிகளில் பிரசாரம்

புதன், 19 மார்ச், 2014

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதற்கட்டமாக 19 தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

பிரசாரம் மேற்கொள்ள உள்ள தொகுதி, வேட்பாளரின் விவரம்:

 
1. தொகுதி - திருவள்ளூர்
வேட்பாளர் - டாக்டர் பி.வேணுகோபால்,
தேதி - 20.03.2014 (வியாழக்கிழமை)

2. தொகுதி - வடசென்னை
வேட்பாளர் - டி.ஜி.வெங்கடேஷ்
தேதி - 21.03.2014 (வெள்ளிக்கிழமை)

3. தொகுதி - மத்தியசென்னை
வேட்பாளர் - எஸ்.ஆர்.விஜயக்குமார்,
தேதி - 22.03.2014 (சனிக்கிழமை)

4. தொகுதி - கடலூர்
வேட்பாளர் - அருண்மொழிதேவன்
தேதி - 23.03.2014 (ஞாயிற்றுக்கிழமை)

5. தொகுதி - தென்சென்னை
வேட்பாளர் - டாக்டர் ஜெ.ஜெயவர்தன்
தேதி - 24.03.2014 (திங்கட்கிழமை)

6. தொகுதி - ஸ்ரீபெரும்புதூர்
வேட்பாளர் - கே.என்.ராமச்சந்திரன்
தேதி - 25.03.2014 (செவ்வாய்க்கிழமை)

7. தொகுதி - காஞ்சிபுரம்
வேட்பாளர் - மரகதம்குமரவேல்
தேதி - 26.03.2014 (புதன்கிழமை)

8. தொகுதி - அரக்கோணம்
வேட்பாளர் - கோ.அரி
தேதி - 27.03.2014 (வியாழக்கிழமை)

9. தொகுதி - வேலூர்
வேட்பாளர் - பா.செங்குட்டுவன்,
தேதி - 28.03.2014 (வெள்ளிக்கிழமை)

10. தொகுதி - கிருஷ்ணகிரி
வேட்பாளர் - பா.செங்குட்டுவன்
தேதி - 29.03.2014 (சனிக்கிழமை)

11. தொகுதி - தர்மபுரி
வேட்பாளர் - பி.எஸ்.மோகன்
தேதி - 30.03.2014 (ஞாயிற்றுக்கிழமை)

12. தொகுதி - சேலம்
வேட்பாளர் - வி.பன்னீர்செல்வம்,
தேதி - 31.03.2014 (திங்கட்கிழமை)

13. தொகுதி - கள்ளக்குறிச்சி
வேட்பாளர் - டாக்டர் க.காமராஜ்,
தேதி - 01.04.2014 (செவ்வாய்க்கிழமை)

14. தொகுதி - திருவண்ணாமலை
வேட்பாளர் - வனரோஜா,
தேதி - 02.04.2014 (புதன்கிழமை)

15. தொகுதி - ஆரணி
வேட்பாளர் - சேவல் வே.ஏழுமலை
தேதி - 03.04.2014 (வியாழக்கிழமை)

16. தொகுதி - விழுப்புரம்
வேட்பாளர் - எஸ்.ராஜேந்திரன்
தேதி - 04.04.2014 (வெள்ளிக்கிழமை)

17. தொகுதி - மயிலாடுதுறை
வேட்பாளர் - ஆர்.கே.பாரதிமோகன்
தேதி - 05.04.2014 (சனிக்கிழமை)

18. தொகுதி - நாகப்பட்டினம்
வேட்பாளர் - டாக்டர் கே.கோபால்
தேதி - 06.04.2014 (ஞாயிற்றுக்கிழமை)

19. தொகுதி - தஞ்சாவூர்
வேட்பாளர் - கு.பரசுராமன்
தேதி - 06.04.2014 (திங்கட்கிழமை)

ஆகிய 19 தொகுதியில் முதற்கட்டமாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

Read more...

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP