சிதம்பரம் நகர பா.ம.க பொதுக்குழு கூட்டம்

வியாழன், 25 நவம்பர், 2010

சிதம்பரம் : 

           சிதம்பரம் நகர பா.ம.க., பொதுக்குழு கூட்டம்  நடந்தது. நகர செயலாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். நகர துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். முருகன் முன்னிலை வகித்தார். மாநில துணை பொதுச் செயலாளர் திருமால்வளவன், தேவதாஸ் படையாண்டவர், வேணுபவனேஸ்வரன், சிலம்புச்செல்வி உட்பட பலர் பேசினர். கூட்டத்தில்  சிதம்பரம் நகரத்திற்குட்பட்ட பகுதியில் கிளைக் கூட்டங்களை நடத்தி, வரும் சட்டசபை தேர்தலில் தனித்தன்மையை நிரூபிப்பது, பா.ம..க.,வை குறி வைத்து தாக்கும் போலீசாரை கண்டிப்பது.  முன்னால் அமைச்சர் அன்புமணி தலைமையில் அனைத்து வார்டு பகுதிகளிலும் கட்சிக்கொடி ஏற்றுவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more...

கும்மிடிப்பூண்டியில் தேமுதிகவில் இருந்து 100 பேர் பாமகவில் இணைந்தனர்

செவ்வாய், 23 நவம்பர், 2010


கும்மிடிப்பூண்டி:

                 கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரணி பேரூர் அருகே உள்ள மல்லியங்குப்பம் ஊராட்சியில் இருந்து, ஊராட்சி மன்ற துணைத் தலைவரும் தேமுதிக கிளைச் செயலருமான கே.ரங்கநாதன் தலைமையில் 100 பேர் வெள்ளிக்கிழமை பாமகவில் இணைந்தனர்.

                    பாமக திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலர் க.ஏ.இரமேஷ், மாநில துணைத் தலைவர் கடலூர் சண்முகம் ஆகியோர் முன்னிலையில் இவர்கள் பாமகவில் இணைந்தனர். மல்லியன்குப்பம் ஊராட்சி மன்ற தலைவரும் பாமக விவசாய அணி மாவட்டச் செயலருமான பா.ரவி, ஆரணி பேரூர் பாமக செயலரும், ஆரணி பேரூராட்சி துணைத் தலைவருமான சி.பாபு, மாவட்ட இளைஞரணி துணைச் செயலர் கோ.சிவா ஆகியோர் உடனிருந்தனர்.

Read more...

கடலூர் பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க பாமக கோரிக்கை

சனி, 20 நவம்பர், 2010

கடலூர்;

                கடலூர் பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட பாமக மகளிரணி கோரிக்கை விடுத்துள்ளது.÷பாமக மகளிரணி தேர்தல் சிறப்புக் கூட்டம் கடலூரில் வியாழக்கிழமை நடந்தது. 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 

                 மழைக்காலம் தொடங்கி விட்டதால், கடலூர் பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேணடும். கடலூர்  மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சுரங்கப் பாதைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, விருத்தாசலம் தொகுதிகளில் மகளிரணியை சிறப்பாக செயல்படவைக்க அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் சென்று அணி திரட்டுவது என்றும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

                 கூட்டத்துக்கு மகளிரணி மாநில துணைப் பொதுச் செயலர் சு.அமராவதி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் செüபாக்கியம், செயலர் உஷாராணி மற்றும் நிர்வாகிகள் தானாயி அம்மாள், தையல்நாயகி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேவசுந்தரி வரவேற்றார். பாமக மாநில துணைப் பொதுச் செயலர் தி.திருமால்வளவன்,  மாவட்டச் செயலர்கள் அ.தர்மலிங்கம், ரா.பஞ்சமூர்த்தி, அலுவலகச் செயலர் போஸ் ராமச்சந்திரன், கடலூர் நகரச் செயலர் ஆனந்த் உள்ளிட்ட பலர் பேசினர். லதா நன்றி கூறினார்.

Read more...

மாணவியை மானபங்கம் செய்து கொன்றவர்கள் மீது நடவடிக்கை: எம்.எல்.ஏ. வேல்முருகன்

வெள்ளி, 12 நவம்பர், 2010





சென்னை:
                  ஓமலூர் பள்ளி மாணவி சுகன்யாவை மானபங்கம் செய்து கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பா.ம.க. எம்.எல்.ஏ. வேல்முருகன் வலியுறுத்தினார்.

 சட்டப் பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற துணை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பா.ம.க. எம்.எல்.ஏ. வேல்முருகன் பேசியது:

                   சேலம் மாவட்டம் ஓமலூரில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி மாணவி சுகன்யா மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அவர் மானபங்கம் செய்து கொல்லப்பட்டதாக புகார் எழுந்தது. இந்தப் பிரச்னையில் நீதி கேட்டு போராடியதற்காக பா.ம.க. எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் மீது போலீஸôர் வழக்குப் பதிவு செய்தனர். சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் மாணவி சுகன்யா மானபங்கம் செய்து கொல்லப்பட்டது உண்மைதான் என்று தெரியவந்துள்ளது. அப்படியெனில் அவரை மானபங்கம் செய்தது யார்? அதனை மறைத்து பா.ம.க.வினர் மீது பொய் வழக்கு போட தூண்டியது யார்? இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

Read more...

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP