கடலூரில் பா. ம. க. , பயிற்சி பாசறையில் மாணவ, மாணவியர்களுக்கு இலவச பயிற்சி

புதன், 15 டிசம்பர், 2010

கடலூர் : 

                   கடலூரில் பா.ம.க. , பயிற்சி பாசறை சார்பில் துவங்கவுள்ள இலவச பயிற்சி வகுப்பில் மாணவ, மாணவியர்கள் சேர்ந்து பயன்பெற எம்.எல்.ஏ. , வேல்முருகன் கேட்டுக் கொண்டார்.

கடலூரில்  நேற்று  எம். எல். ஏ. , வேல்முருகன் கூறியது:

                  பொருளாதாரத்தில் பின் தங்கிய அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஏழை எளிய மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பயிற்சி பாசறை கடலூரில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இப்பயிற்சி பாசறையில் ஐ. ஏ. எஸ். , - ஐ. பி. எஸ். , -  டி. என். பி. எஸ். சி. , குரூப் 1, 2, வி. ஏ. ஓ. , வங்கி, ரயில்வே காவலர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இப்பயிற்சியில் பயின்ற 8 பேர் சப் இன்ஸ்பெக்டர் தேர்விலும், 48 மாணவர்கள் காவலர்களாகவும் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணைக்காக காத்திருக்கின்றனர்.  

                மீண்டும் அதே வகுப்புகள் கல்லூரி மாணவர்களின் வசதிக்கேற்ப காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் நடத்தப்படுகின்றன. இவ்வகுப்புகளில் கம்ப்யூட்டரில் வீடியோ ஆடியோ காட்சிகள் மூலமும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.  இதற்காக பிரத்யேக நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.  

                தற்போது டி. என். பி. எஸ். சி. , சுகாதார புள்ளியியல் ஆய்வாளர், வனத்துறை உதவி ஆய்வாளர் தேர்வுகளுக்கான வகுப்புகள், பி. எஸ்சி. , அறிவியல், கணிதம், கணிப்பொறியியல், மண்ணியல், புள்ளியியல் மற்றும் பொறியியல் பட்டதாரிகளுக்கான பயிற்சி வகுப்புகள் வரும் 19ம் தேதி துவங்க உள்ளது. இந்த வகுப்புகளில் சேர விரும்பும் மாணவ, மணவியர்கள் கடலூர் பா.ம க. , அலுவலக செயலரிடம் விண்ணப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP