மாணவியை மானபங்கம் செய்து கொன்றவர்கள் மீது நடவடிக்கை: எம்.எல்.ஏ. வேல்முருகன்
வெள்ளி, 12 நவம்பர், 2010
சென்னை:
ஓமலூர் பள்ளி மாணவி சுகன்யாவை மானபங்கம் செய்து கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பா.ம.க. எம்.எல்.ஏ. வேல்முருகன் வலியுறுத்தினார்.
சட்டப் பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற துணை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பா.ம.க. எம்.எல்.ஏ. வேல்முருகன் பேசியது:
சேலம் மாவட்டம் ஓமலூரில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி மாணவி சுகன்யா மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அவர் மானபங்கம் செய்து கொல்லப்பட்டதாக புகார் எழுந்தது. இந்தப் பிரச்னையில் நீதி கேட்டு போராடியதற்காக பா.ம.க. எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் மீது போலீஸôர் வழக்குப் பதிவு செய்தனர். சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் மாணவி சுகன்யா மானபங்கம் செய்து கொல்லப்பட்டது உண்மைதான் என்று தெரியவந்துள்ளது. அப்படியெனில் அவரை மானபங்கம் செய்தது யார்? அதனை மறைத்து பா.ம.க.வினர் மீது பொய் வழக்கு போட தூண்டியது யார்? இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக