சிதம்பரம் நகர பா.ம.க பொதுக்குழு கூட்டம்
வியாழன், 25 நவம்பர், 2010
சிதம்பரம் :
சிதம்பரம் நகர பா.ம.க., பொதுக்குழு கூட்டம் நடந்தது. நகர செயலாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். நகர துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். முருகன் முன்னிலை வகித்தார். மாநில துணை பொதுச் செயலாளர் திருமால்வளவன், தேவதாஸ் படையாண்டவர், வேணுபவனேஸ்வரன், சிலம்புச்செல்வி உட்பட பலர் பேசினர். கூட்டத்தில் சிதம்பரம் நகரத்திற்குட்பட்ட பகுதியில் கிளைக் கூட்டங்களை நடத்தி, வரும் சட்டசபை தேர்தலில் தனித்தன்மையை நிரூபிப்பது, பா.ம..க.,வை குறி வைத்து தாக்கும் போலீசாரை கண்டிப்பது. முன்னால் அமைச்சர் அன்புமணி தலைமையில் அனைத்து வார்டு பகுதிகளிலும் கட்சிக்கொடி ஏற்றுவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக