தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி அலுவலகத்தினை பண்ருட்டி தி. வேல்முருகன் திறந்து வைத்தார்
சனி, 1 செப்டம்பர், 2012
தர்மபுரி :
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று (31/08/2012) பங்கேற்றார்.
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அலுவலக திறப்பு விழா விழாவும் கம்பைநல்லூர் பேருந்து நிலையத்தில் நேற்று காலை கொடியேற்று விழாவும் நடந்தது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து, அங்கு கட்சிக்கொடியை ஏற்றினார். பின்னர் பொம்மிடி பேருந்து நிலையம் அருகே நேற்று மாலை (31/08/2012) 7 மணி அளவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன் கலந்து கொண்டு பேசினார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் பேசியது:
தமிழக வாழ்வுரிமைக் கட்சி அனைத்து சாதிகளையும் அரவணைத்து செல்லும் கட்சி. சாதி கட்சி அல்ல. காவிரி நதிநீர் பிரச்னை, முல்லை பெரியாறு அணை பிரச்னைகளை தீர்க்க போராட்டம் நடத்துவோம். தமிழக வாழ்வுரிமை கட்சியினர் எங்கு சென்றாலும் பா.ம.க.வினர் பிரச்சனை செய்கின்றனர். இவ்வாறு வேல்முருகன் பேசினார். இந்த பொதுகூட்டத்திற்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பாக குவிக்கப்பட்டிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக