கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது காவல்துறை தாக்குதலைக் கண்டித்து தி. வேல்முருகன் பங்கேற்ற மறியல் போராட்டம்
செவ்வாய், 11 செப்டம்பர், 2012
சென்னை:
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது காவல்துறை 10/09/2012 அன்று நடத்திய கொடுந்தாக்குதலைக் கண்டித்து சென்னையில் 11/09/2012 அன்று பல்வேறு அரசியல் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, உள்ளிட்ட பல நூறு பேர் கைதாகினர்.
சென்னை அண்ணா சாலையில் மறியலில் கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் , மதிமுகவின் மல்லை சத்யா உள்ளிட்டோர் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அண்ணா சாலையில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன், மல்லை சத்யா உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக