மகிந்த ராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து தீக்குளித்த தோழர் சேலம் விஜய்ராஜ்க்கு மறைவிற்கு பண்ருட்டி தி.வேல்முருகன் இரங்கல்

செவ்வாய், 18 செப்டம்பர், 2012





      


    மகிந்த ராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து தீக்குளித்த தோழர் சேலம் விஜய்ராஜ்க்கு மறைவிற்கு பண்ருட்டி தி.வேல்முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள  இரங்கல் செய்தி


    சிங்கள இனவெறியன் போர்க்குற்றவாளியான கொலைகாரன் மகிந்த ராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து தீக்குளித்த தோழர் சேலம் விஜய்ராஜ் இன்று நம்மைவிட்டு பிரிந்துவிட்டார் என்ற செய்தி சொல்லொண்ணா துயரில் ஆழ்த்துகிறது. தோழர் விஜய்ராஜ்க்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வீரவணக்கத்தை செலுத்துகிறது! தமிழீழத்தின் மீதான இன அழிப்புப் போரை தடுத்து நிறுத்த ஈகச்சுடர் முத்துக்குமார் உட்பட 17 இளைஞர்கள் தீக்குளித்து மாண்டுபோயினர். அப்பொழுதும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. மூன்று தமிழர் விடுதலைக்காக தோழர் செங்கொடி தன்னுயிரை தீக்கு தாரை வார்த்தபோதும் வல்லாதிக்க இந்தியப் பேராரசு வாய்மூடி மவுனியாகத்தான் இருந்தது. இப்பொழுது கொலைகார சிங்கள ராஜபக்சேவை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி தோழர் சேலம் விஜய்ராஜ் தமது உயிரை தீ நாக்குகளுக்குத் தாரைவார்த்துக் கொடுத்திருக்கிறார்.

            இந்தியப் பேரரசே! தமி்ழகத்தின் ஒட்டுமொத்த உணர்வை தமது உயிரைக் கொடுத்து வெளிப்படுத்தியிருக்கிறார் எங்கள் தோழர் சேலம் விஜய்ராஜ்! இப்போதாவது எங்கள் உணர்வுகள் உங்களுக்குப் புரிகிறதா? கொலைகாரன் ராஜபக்சேவின் இந்திய வருகையை உடனே தடை செய்க! அன்று முத்துக்குமார் பற்ற வைத்த பெருநெருப்பு இன்று சேலம் விஜய்ராஜ் வரை நீண்டு கொண்டிருக்கிறது.. இப்படி காலங்காலமாக தமிழ் இளைஞர்கள் தங்களுக்குத்தானே தீக்குளித்துக் கொண்டிருப்பார்கள் என்று மட்டும் கனவு காணாதீர்கள்! மத்திய அரசே! ராஜபக்சேவின் இந்திய வருகையை தடை செய்! இல்லையெனில் இந்தத் தோழர்கள் பற்ற வைத்திருக்கும் நெருப்பு சுவாலை உங்கள் இந்திய வல்லாதிக்கத்தை சுட்டுப் பொசுக்கிவிடும் என்று எச்சரிக்கிறோம்!



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP