ராஜபக்சே இந்திய வருகையைக் கண்டித்து பண்ருட்டி தி. வேல்முருகன் தலைமயில் ரயில் மறியல் போராட்டம்
திங்கள், 17 செப்டம்பர், 2012
புவனகிரி:
தமிழக வாழ்வுரிமைக் கட்சி பொதுக்குழு கூட்டம் புவனகிரியில் 16.09.2012 அன்று நடைபெற்றது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி பொதுக்குழு கூட்டம் புவனகிரியில் 16.09.2012 அன்று நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் கலந்துகொண்டு பேசுகையில்,
இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்தவர் இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். இதை எதிர்த்து சிதம்பரத்தில் என் தலைமையில் வருகிற செப்டம்பர் 20-ந் தேதி சுமார் 1000 பேர் பங்கேற்கும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும். பல்வேறு பகுதிகளிலும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும். கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் கண்ணன், மாநில இளைஞர் பாசறை தலைவர் கோபிநாத், மாநில மதிப்பு குழு பாலகுருசாமி, மாவட்ட நிர்வாக குழு ராஜேந்திரன், மற்றும் வீரசோழன், சேரலாதன், அக்னி கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். புவனகிரி நகர செயலாளர் ராஜா நன்றி கூறினார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக