நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும்" Innocence of Muslims" திரைப்படத்திற்கு பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம்

திங்கள், 17 செப்டம்பர், 2012






நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும்  "Innocence of Muslims" திரைப்படத்திற்கு பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை


இஸ்லாமிய சகோதரர்களின் நீதியான போராட்டத்துக்கு ஆதரவு

             "Innocense of Muslims" எனும் பெயரில் ஆலன் ராபர்ட் என்பவர் இயக்க்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் உலகம் முழுவதும் இஸ்லாமியர்களை வெகுண்டெழ வைத்துள்ளது. இஸ்லாமியர்கள் தங்களது உயிரைவிட மேலானதாக கருதிக் கொண்டிருக்கும் இறைத் தூதரான அண்ணல் நபிகள் நாயகத்தை மிக மோசமாக சித்தரித்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை தமிழக வாழ்வுரிமை கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

            இத்திரைப்படத்துக்கு எதிராக எகிப்திலும் லிபியாவிலும் தொடங்கிய எதிர்ப்புப் பேரலைகள் இப்பொழுது இந்தியாவில் தமிழகத்தையும் உலுக்கி வருகிறது. இஸ்லாமிய சகோதரர்கள் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நாள்தோறும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இஸ்லாமிய சகோதரர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் இந்தத் திரைப்படத்தை அமெரிக்கா அரசாங்கம் தடை செய்து சம்பந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்லாமிய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அமெரிக்க அரசாங்கம் அந்த மக்களிடத்தில் இப்படியொரு திரைப்படத்தை வெளியிட்டதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

           இந்திய அரசும் தமது வன்மையான கண்டனத்தை அமெரிக்காவிடம் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது. உலகப் போராட்டமாக உருவெடுத்திருக்கும் இஸ்லாமிய சகோதரர்களின் இந்த நீதியான போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அண்ணல் நபிகள் நாயகத்தை அவதூறாக சித்தரிக்கும் இந்தத் திரைப்படத்துக்கு எதிராக தங்களது பகுதிகளில் நடைபெறும் அறப் போராட்டங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகளும் தோழர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு தங்களது ஆதரவை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP