ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து தீக்குளித்து இறந்த விஜயராஜ் உடலுக்கு பண்ருட்டி தி.வேல்முருகன் மலர் மாலை வைத்து அஞ்சலி

வியாழன், 20 செப்டம்பர், 2012

சேலம்:

     ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து   சேலத்தில் ஆட்டோ டிரைவர் விஜயராஜ் தீக்குளித்து இறந்தார். நேற்று 19/09/2012 விஜயராஜ்  உடலுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகளுடன்  மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.


முன்னதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் அளித்த பேட்டி:


     ஒன்றரை லட்சம் இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே இந்தியாவிற்கு வரக்கூடாது என்பதை வலியுறுத்தி தம்பி விஜயராஜ் தீக்குளித்து இறந்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.  முத்துக்குமார், செங்கொடி உள்பட பலர் உயிர்தியாகம் செய்துள்ளனர். இதனால் மத்திய அரசு ராஜபக்சே இந்தியாவிற்கு வருவதை நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும். மத்திய அரசு இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும். ராஜபக்சே இந்தியாவிற்கு வரக்கூடாது என்பதை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நாளை ( இன்று 20/09/2012 ) ரயில் மறியல் போராட்டம் நடக்கிறது.

          சென்னையில் 21-ம்தேதி நடக்கும் ரெயில் மறியலில் நான் கலந்து கொள்கிறேன். இந்த மறியலில் திரளானோர் கலந்து கொள்கிறார்கள். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும். கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும். இதற்கு தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

            பேட்டியின் போது மாநில தலைவர் தீரன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் வை.காவேரி, காமராஜ், மாநில துணை பொது செயலாளர் சக்திவேலன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP