கடலூரை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மறியல் போராட்டம் - பண்ருட்டி தி.வேல்முருகன்
புதன், 25 ஜனவரி, 2012
கடலூர் :
"கடலூரை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்தப்படும்'' என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி தி. வேல்முருகன் கூறியுள்ளார்.
கடலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி தி. வேல்முருகன் கூறியது :
தானே' புயலுக்காக மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக 500 கோடி ரூபாயை மட்டும் வழங்கியுள்ளது. மின்வாரிய சீரமைப்பு பணிக்கே 2,000 கோடி ரூபாய் ஆகும். அனைத்துத் துறை அதிகாரிகளைக் கொண்டு கள ஆய்வு செய்து ஒட்டு மொத்த சேதத்தை கணக்கிட வேண்டும். ஆளும் கட்சியினர் சாலையோரங்களில் விழுந்த மரங்களை வெட்டுவது, புயலில் சேதமடைந்த அரசு கட்டடங்களை இடித்து அகற்றும் டெண்டர் எடுப்பதிலுமே குறியாக உள்ளனர்.
மத்திய அரசு, கடலூர் மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவித்து பேரிடர் மையம் துவங்க வேண்டும். விவசாய கடனை ரத்து செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி விரைவில் தமிழர் வாழ்வுரிமைக் கட்சி மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் நடத்தப்படும். கட்சி மாநில நிர்வாகிகளுடன் ஆலோசித்து வரும் 29ம் தேதி தர்மபுரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்படும். இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக