விழுப்புரத்தில் இளம்புயல் பாசறை நிர்வாகிகள் கூட்டம்

திங்கள், 9 ஜனவரி, 2012


          விழுப்புரத்தில் இளம்புயல் பாசறை நிர்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை நடை பெற்றது. இதில்  பண்ருட்டி தி.வேல்முருகன் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்.

இதில்  பண்ருட்டி தி.வேல்முருகன் பேசியது :   

  
    பேராசிரியர் தீரன் 1996-ல் சட்டப்பேரவையில் வாதாடி அந்த குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவியும், மாதம் ரூ.5 ஆயிரம் உதவித்தொகையும் பெற்றுத்தந்தார். பின்னால் வந்த அரசு அதை நிறுத்தியபோது இவர்கள் கேட்டதுண்டா. நாங்கள் போராட முயன்றதை ராமதாஸ் தடுத்தார். நாங்கள் அண்டா, குண்டாவை வைத்து, காணி நிலங்களை விற்று, கல்வி அறக்கட்டளையை உருவாக்கினோம்.


            இந்த சமுதாயத்தில் எத்தனையோ தியாகிகள் இருக்கும்போது, அந்த கல்வி நிறுவனத்திற்கு உங்கள் மனைவி சரஸ்வதி பெயரை வைத்தது ஏன். நீங்கள் நடத்தும் தொலைக்காட்சியிலும், பத்திரிகையிலும் இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர் உண்டா. ஏன் ஒரு தமிழ்நாட்டு தமிழன் கூட இல்லையே மக்கள் டிவியிலும் அவர்கள் குடும்பத்தினரே உள்ளனர். மலையாளி, தெலுங்கர்கள் தான் நிர்வாகிகளாக, ஆசிரியர்களாக உள்ளனர். தைலாபுரம் பயிற்சி பட்டறை இயக்குனரும் மலையாளிதான். வாயில்லா பூச்சிகள் தான் அவரிடம் உள்ளனர்

         ன்னியர்களிடம் நிதி திரட்டி கட்டிய பல்கலை., யில் யாருக்காவது வேலை கொடுத்தாரா. அவர் குடும்பத்தினர் டிரஸ்ட் நிர்வாகிகளாக உள்ளனர். வெளிநபராக இருந்த கோவிந்தசாமியும் தற்போது நீக்கப்பட்டுள்ளார். ஏற்காட்டில் மாமியார் பெயரில் 550 ஏக்கர் தோட்டம், 40 கோடியில் தங்கை பெயரில் மாளிகை, சென்னையில் அக்கா பெயரில் சொத்துகள் உள்ளன. தியாகிகளுக்கு 10 லட்சத்தில் வீடு கட்டச் சொன்னேன், கல்லூரிக்கு அவர்கள் பெயரை வைக்க கேள்வி கேட்டேன். பதில் கூறவில்லை. கோடிகள் வந்தது குறித்த புள்ளி விபரங்கள் என்னிடம் உள்ளது. லாபத்திற்காக கட்சி நடத்துகின்றார்.

          இந்த தேர்தலுக்கு கூட கருணாநிதியிடம் ராமதாஸ் குடும்பத்தினர் பெட்டி வாங்கியுள்ளனர். திண்டிவனம் வழக்கில் சி.பி.ஐ., உண்மை கொலையாளிகளை விசாரிக்க வேண்டும் டாஸ்மாக், ரிலையன்ஸ் நிறுவனத்தை எதிர்த்து போராட்டம், பின்னர் பெட்டி வாங்கிக் கொண்டு முடித்துக் கொள்வது. பவர் கார்ப்பரேஷனிடம் கோடிகளை வாங்கிக் கொண்டு ராமதாஸ் போராட்டத்தைப் பின் வாங்கினார். ஈழத் தமிழர் பிரச்னையின் போது அன்புமணியின் பதவிக்காக கூட்டணியை விட்டு வெளியேறவில்லை. அதை நான் சுட்டிக் காட்டியதை ராமதாஸ் ஏற்கவில்லை என்றார் வேல்முருகன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP