சேத்தியாத்தோப்பு பகுதியில் தானே புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பண்ருட்டி தி.வேல்முருகன் ஆறுதல்
புதன், 11 ஜனவரி, 2012
சேத்தியாத்தோப்பு :
சேத்தியாத்தோப்பு பகுதியில் "தானே" புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் பண்ருட்டி எம். எல்.ஏ., தி. வேல்முருகன் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
சேத்தியாத்தோப்பு பகுதியில் "தானே" புயலில் பாதிக்கப்பட்ட வளையமாதேவி, கரிவெட்டி, எறும்பூர், தர்மநல்லூர் ஆகிய கிராமங்களில் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்ட நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை பார்வையிட்டார். மாவட்ட முன்னாள் செயலர்கள் ராஜேந்திரன், கண்ணன், வீரசோழன், கோபாலகிருஷ்ணன், ஆளவந்தார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக