கடலூரில் தானே புயல் இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் முறைகேடு: பண்ருட்டி தி. வேல்முருகன்

வியாழன், 12 ஜனவரி, 2012

பண்ருட்டி:

      தானே புயல் நிவாரணம்  வழங்குவதில் அதிருப்தி ஏற்பட்டு ஆங்காங்கே மக்கள் சாலை மறியல் செய்து வருகின்றனர். இதற்கு அரசியல்வாதிகளே காரணம் என்று  முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற  உறுப்பினர் தி.வேல்முருகன் கூறினார்

பண்ருட்டியில் திங்கள்கிழமை முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற  உறுப்பினர் தி. வேல்முருகன் அளித்த பேட்டி

          அமைச்சர் எம்.சி.சம்பத் தொகுதியான கடலூரில் இழப்பீடு ரூ. 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு மற்ற பகுதிகளில் ரூ. 2,500 கொடுக்கின்றனர். சிலருக்கு ஒன்றும் இல்லை என கூறுகின்றனர். இதுபோன்ற தவறுகளால்தான் மக்கள் மறியல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். முதல்வர் இதில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

            புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மாநிலத்தை பேரிடர் ஏற்பட்ட மாநிலமாக  அறிவிக்கப்பட்டுள்ளதை போல், கடலூரை மையமாக கொண்டு விழுப்புரம், நாகை மாவட்டத்தை பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டுவரி, நிலவரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகளை ரத்து செய்ய வேண்டும்.புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூ. 2500, முந்திரி ஹெக்டருக்கு ரூ. 9 ஆயிரம் என்பது 10 சதவீத இழப்பீடு கூட ஆகாது. 

            எனவே அதிகாரிகளின் குழுக்களை அமைத்து கணக்கெடுத்து முறையான நிவாரணம் அளிக்க வேண்டும்.கடலூரில் பல அமைச்சர்கள் முகாமிட்டிருந்தாலும் நிவாரணப் பணி முறையாக நடக்காததால் கிராம பகுதிகளுக்கு செல்ல அவர்கள் தயக்கம் காட்டுகின்றனர் என்றார் வேல்முருகன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP