தானே புயல் : கடலூர் மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தக் கோரி பண்ருட்டி தி.வேல்முருகன் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்
வியாழன், 5 ஜனவரி, 2012
நெய்வேலி :
தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்க கோரி, பண்ருட்டி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி தி.வேல்முருகன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் வீசிய வரலாறு காணாத புயாலால் வாழ்விடமிழந்து, வாழ்வாதாரமிழந்து , குடிக்க நீரின்றி, உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி, வீடுகளை இழந்து, வீதிகளில் தஞ்சமடைந்துள்ள எம் மக்களின் அவல நிலையினை போக்கிட உரிய நேரத்தில் மீட்பு , மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ளாத மத்திய மாநில அரசுகளின் மெத்தன போக்கினை கண்டித்தும், மீட்பு பணிகளுக்கு துணை ராணுவத்தை அனுப்பிடக்கோரியும், உண்மையான சேதத்தைக் கணக்கிட நிபுணர் குழுவை அனுப்பிடக்கோரியும், நிவாரணத் தொகையாக பத்தாயிரம் கோடியை மத்திய அரசு வழங்கிட வலியுறுத்தியும், நேற்று காலை (4-1-12) புதன்கிழமை நெய்வேலியில் "q " பாலம் அருகில் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் தொடங்கி நடைபெற்று கொண்டு இருக்கிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக