தமிழக வாழ்வுரிமைக் கட்சி துவக்கம்
ஞாயிறு, 15 ஜனவரி, 2012
முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரும், இளம்புயல் பாசறை நிறுவனருமான பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று, தை முதல் நாள் 15.01.2012 ( ஞாயிற்றுக்கிழமை ) சென்னை, போரூரில் அமைந்துள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் புதிய கட்சியை துவங்கினார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி என பெயர் சூட்டி, கட்சி கொடியினை அறிமுகப்படுத்தினார். நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல. யாருடனும் கூட்டணி வைப்போம். காலத்திற்கேற்ப இந்திய அரசியல் சட்டத்திலும் மாற்றம் செய்யப்பட வேண்டும் என கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக