அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் சார்பில் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் கடலூரில் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம்

வியாழன், 3 அக்டோபர், 2013

பேரழிவை உண்டாக்கும் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு! போராடும் மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப் பெறு! எனக் கோரி அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் சார்பில்  2.10.2013 (புதன்கிழமை)  கடலூரில் கடலூர் மஞ்சக்குப்பம் திடல் அருகே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அணுசக்திக்கு எதிராக பல்வேறு கட்சிகள்- அமைப்புகளின் நிர்வாகிகள், தோழர்கள் என ஆண்களும் பெண்களுமாக அணி அணியாக ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.  காலை 10.30 மணிக்கு அணு உலைக்கு எதிரான முழக்கங்களுடன் துவங்கிய  ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன்  பேசியது:

 தென் தமிழக மக்களுக்கும், மீனவ மக்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ள கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும். அணு உலைக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்ற பல லட்சம் மக்கள் மீது ஆயிரக்கணக்கில் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல் படி இந்த வழக்குகளை திரும்ப பெற வேண்டும். அணு உலைக்கு எதிராக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்றார் .

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர்.கிவெங்கட்ராமன், ம.தி.முக மாவட்டச் செயலாளர் திரு.என்.இராமலிங்கம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி துணைப் பொதுச் செயலாளர் திரு.உ.கண்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் திரு.தி.ச.திருமார்பன், மாவட்டச் செயலாளர், திரு.பா.தாமரைச்செல்வன், நாம் தமிழர் கட்சி மாவட்ட அமைப்பாளர் வா.கடல்தீபன், மீனவர் ஐக்கிய முன்னணி திரு.இரா.மங்கையர் செல்வன். மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர், திரு.ஷேக்தாவுத், தந்தை பெரியார் திராவிடர் கழகம் மாவட்டத் தலைவர் திரு, கு.அழகிரி, சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா பொதுச் செயலாளர் திரு.ச. மக்பூல் அகமது, தமிழ் நாடு நுகர்வோர் கூட்டமைப்பு திரு.மு. நிஜாமுதின், கடலூர் சிப்காட் சுற்றுச் சூழல் பாதுகாப்புக் குழு தோழர், அருள் செல்வன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, திரு.இரா.பாபு, தமிழ்த் தேச மக்கள் கட்சி மாவட்டப் பொறுப்பாளர் தோழர், தயாநிதி, சிங்கார வேலர் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் மாவட்டச் செயலாளர் திரு.தினகரன், தமிழர் தேசிய இயக்கம் மாவட்டச் செயலாளர் திரு.வை.இரா.பாலசுப்பிரமணியம், தனியார் பேருந்து தொழிலாளர்கள் சங்கம், திரு பண்டரிநாதன், தமிழர் கழகம் பெ.பாவாணன் உள்ளிட்ட பல்வேறு கட்சி அமைப்புகளின் பொறுப்பாளர்கள் பங்கேற்றுப் பேசினார்கள்.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP