தஞ்சையில் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவிற்கு பண்ருட்டி தி.வேல்முருகன் அழைப்பு
திங்கள், 21 அக்டோபர், 2013
தஞ்சையில் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவிற்கு அனைத்து தமிழ் உறவுகளையும் கலந்துகொள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து மிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழீழ மண்ணில் சிங்கள பேரினவாத அரசு நடத்திய இனப்படுகொலையினை நாளைய தலைமுறையும் உலகத்தில் உள்ள ஒவ்வொரு தமிழர்களும் நெஞ்சில் நிறுத்தும் கற்சிற்பமாக தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றம் காணப்படுகின்றது.
மாவீரர்களையும் மக்களையும் நினைவிற்கொள்ளும் வகையிலும் இனப்படுகொலையினை நினைவில் நிறுத்தி செல்லவும் தடைசெய்யப்பட்ட குண்டுகளை சிங்கள அரசு பயன்படுத்தியது என்பதை தமிழர்கள் மறந்துவிட முடியாதவாறு முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் அமைகின்றது. நவம்பர் 8, 9, 10 ஆகிய நாட்களில் தஞ்சையில் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவில் அனைத்து தமிழ் உறவுகளையும் கலந்துகொள்ளுமாறு வேண்டுகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக