மேட்டூர் அணையில் இருந்து வீணாகும் உபரிநீரை திருப்பி ஐந்து மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி பொதுக்கூட்டம்

திங்கள், 23 செப்டம்பர், 2013

மேட்டூர் அணையில் இருந்து வீணாகும் உபரிநீரை திருப்பி சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி பொதுக்கூட்டம் ஆத்தூரில் 22/09/2013 அன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் வை.காவேரி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சம்பத், அன்பரசன், முருகன், ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில அமைப்புச் செயலாளர் காமராஜ், மாநில துணைப் பொதுச் செயாலாளர் ஜெயமோகன், மாநில துணைப் பொதுச் செயாலாளர் கருப்பு சரவணன், மாநில துணை பொதுச் செயலாளர் சு.க.சக்திவேலன், மாநில மாணவர் பாசறை தலைவர் ரவிபிரகாஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
மாவட்ட அமைப்பாளர் மாணிக்கம் நன்றி கூறினார்.  பொதுக்கூட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் தி.வேல்முருகன் கலந்து கொண்டு ஆற்றிய உரை:
 

 தமிழக வாழ்வுரிமை கட்சி எப்போதும் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும். ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்கும் காமன்வெல்த் மாநாட்டில் பாரத பிரதமர் கலந்து கொள்ளக்கூடாது. தமிழர்களின் நலனுக்காக செவி சாய்க்கும் அரசு விரைவில் மத்தியில் ஏற்படும். அப்போது தமிழர்களின் நலனிற்காக உழைக்கும் ஒருவர் பிரதமர் பதவிக்கு வரும்போது, மேட்டூர் அணையில் இருந்து வீணாகும் நீரை தடுத்து நிறுத்தி அணைகட்ட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP