"தமிழ்" குறும்படம் வெளியீட்டு விழா - தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் பங்கேற்பு

திங்கள், 16 செப்டம்பர், 2013

மகேந்திரவர்மாவின் இயக்கத்தில் இயக்குனர் களஞ்சியம் நடித்த இன உணர்வு "தமிழ்" குறும்படம் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள ஆர்.வி. திரையரங்கில் 15.09.2013 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கவிஞர் காசியானந்தன் அவர்கள் குறும்படத்தை வெளியிட திராவிடர் விடுதலை இயக்க தலைவர் கொளத்தூர் மணி அதனை பெற்றுக்கொண்டார்.

இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, கே.சவுந்தர்ராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்திதொடர்பாளர் வன்னியரசு, எழுத்தூளர் மனுஷ்யபுத்திரன், வழக்கறிஞர் அங்கயற்கண்ணி, ஓவியர் வீரசந்தானம் உள்ளிட்ட கலைஞர்கள் படைப்பாளிகள் என பெருந்திரளானோர் கலந்துகொண்ட நிகழ்வினை கவிபாஸ்கர் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேசியது:

இன்று செங்கல்பட்டு முகாம்களிலும் பூந்தமல்லி முகாமிலும் ஈழத்தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால் அவர்கள் அடைக்கப்பட்டுள்ளார்கள். புலிகள் என்று முத்திரைகுத்தப்பட்டு அவர்கள் சிறையில் வாடுகின்றார்கள்.அவர்களை வெளிக்கொண்டு வருவதற்கு இந்த குறும்படம் அமையும்.

தமிழகத்தில் ஈழத்தமிழ் இளைஞர்களை எவ்வாறு காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள் என்பதை எடுத்துக்காட்டும் படமாக இந்த காணப்படுகின்றது. அண்மையில் கூட இரண்டு ஈழத்தமிழர்களை தமிழக காவல்துறையினர் கைதுசெய்துள்ளார்கள் இந்த நிலையில் தான் இன்று ஈழத்தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். முறைப்படி பயண அனுமதி பெற்று தாய்த்தமிழகம் எங்களை காப்பாற்றாதா என்ற ஏக்கத்துடன் வந்த தமிழ் தம்பிகளை கைது செய்துள்ளார்கள்.

அவர்கள் தூயதமிழில் பேசினார்கள் ஈழத்தமிழில் பேசினார்கள் அதுதான் அவர்கள் செய்த பாவம் இவ்வாறுதான் தமிழகத்தில் ஈழத்தமிழர்கள் கைதுசெய்யப்படுகின்றார்கள். என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தனது கருத்தில் தெரிவித்துள்ளார்.










0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP