இலங்கையில் நடத்தப்படுகின்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்குபெற கூடாது என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் விருத்தாசலத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்ட மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

திங்கள், 30 செப்டம்பர், 2013

இனப்படுகொலை நடந்த இலங்கையில் நடத்தப்படுகின்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்குபெற கூடாது என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 29/09/2013 அன்று விருத்தாசலத்தில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

விருத்தாசலம் வானொலித் திடலில்  நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக்  கட்சியின் கடலூர் (மேற்கு) மாவட்டச் செயலர் வ.சின்னதுரை தலைமை வகித்தார். விருத்தாசலம் நகரச் செயலர் பி.ஜி.சேகர் வரவேற்றார். தமிழக வாழ்வுரிமைக்  கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் கண்டன உரை நிகழ்த்தினார்.

தமிழக வாழ்வுரிமைக்  கட்சியின் பொதுச் செயலர் வை.காவேரி, மாநில இணை பொதுச் செயலர் எம்.எஸ்.சண்முகம், அமைப்புச் செயலர் மே.ப.காமராஜ், மாநில பொது செயலாளர் காவேரி, மாநில துணைப் பொது செயலாளர் கருப்பு சரவணன், புதுவை மாநில அமைப்பாளார் ஸ்ரீதர், சின்னதுரை, மாநில இளைஞசரணித் தலைவர் ரவி பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். 

ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்தும், 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை கொன்று குவித்த ராஜபட்சே தலைமையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நிர்வாகிகள் அறிவழகன், முருகன், இராசன், விருத்தாசலம் ஒன்றியச் செயலர்கள் தியாகராசன், பன்னீர்செல்வன், செல்வம், தங்கவேல், ரெங்கசுரேந்தர், வெங்கடாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP