தானே புயல் சேதம் : தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பண்ருட்டி தி. வேல்முருகன் வேண்டுகோள்

சனி, 31 டிசம்பர், 2011

கடலூர் : 

       தானே புயல் சேதம் : தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்  நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பண்ருட்டி தி. வேல்முருகன் வேண்டுகோள்  விடுத்துள்ளார்.
 
இது குறித்து   பண்ருட்டி தி. வேல்முருகன் வெளியிட்டுள செய்திக்  குறிப்பு 
 
         கடலூர் , புதுவை, நாகை, விழுப்புரம் ஆகிய கடலோர மாவட்டங்களில் வீசிய வரலாறு காணாத பலத்த புயலால் எண்ணிலடங்கா இழப்புகள் ஏற்ப்பட்டுள்ள நிலையில் மீனவர்ளும் பொதுமக்களும் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர் அம்மக்கள் இயல்புநிலைக்கு திரும்ப பதினைந்து நாட்களுக்கு மேலாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது .
 
 
           இந்நிலையில் அத்யாவசிய வசிய தேவைகளான குடிநீர் உணவு உடை மருத்துவம் ஆகியவை இன்றியும் அடிப்படை வசதிகளான மின்சாரம் இன்றியும் குடியிருப்புகள் சிதைந்த நிலையிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து போக்குவரத்து தொலைதொடர்பு ஆகியவை துண்டிக்கப்பட்ட நிலையிலும் அவதியிற்றிருக்கும் அம்மக்களின் துயரத்தை போக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் மீட்ப்பு மற்றும் நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் 
 
 
    மேலும் பெருந்துன்பத்திற்குள்ளாகியிருக்கும் நம்மக்களின் துயரத்தில் பங்கெடுத்துக்கொள்ளும் வகையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அரசு சார்பற்ற தொண்டு அமைப்புகளும் தம்மால் இயன்ற மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறேன்.
 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP