தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வலியுறுத்தி தி. வேல்முருகன் கையொப்பமிட்டார்
வியாழன், 28 ஜூன், 2012
சென்னை :
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வலியுறுத்தி ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சியை முதல் கையெழுத்திட்டு வைகோ தொடங்கி வைத்தார். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, ஒரு கோடி கையெழுத்து பெறும் நிகழ்ச்சி காந்திய மக்கள் இயக்கம் சார்பில் சென்னையில் நேற்று தொடங்கியது. காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தலைமை வகித்தார்.
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ முதல் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மூத்த தலைவர் ஹைதர் அலி உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக