தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்: தி.வேல்முருகன் சிறப்புரையாற்றுகிறார்
ஞாயிறு, 3 ஜூன், 2012
கடலூர்:
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் கடலூர் டவுன் ஹால் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை மதியம் நடைபெறுகிறது.
இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் விடுத்துள்ள செய்தி குறிப்பு
சூன் 24-ம் தேதி கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடக்கவுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் முதல் அரசியல் கொள்ளை விளக்க மாநாடு குறித்து பொதுக்குழுக் கூட்டத்தில் ஆலோசனை செய்ய உள்ளதால், கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோயில், திட்டக்குடி ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, வார்டு, கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சிறப்புரை : தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி. வேல்முருகன்
நாள் : சூன் 5, 2012 .
இடம் : கடலூர் டவுன் ஹால்
நேரம் : முற்பகல் 2 மணி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக