தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மாவட்ட மாநாட்டு பணிகள்: தி.வேல்முருகன் நேரில் பார்வை
ஞாயிறு, 17 ஜூன், 2012
கடலூர்:
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட மாநாடு வரும் 24 ம் தேதி கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடக்க உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை கட்சியின் நிறுவனர் வேல்முருகன் நிர்வாகிகளுடன் சென்று நேரில் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கூறியது:
கடலூரில் நடைபெற உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநாடு ஒட்டுமொத்த தமிழர்களின் நலன் காக்கும் மாநாடாகும். தமிழீழ மக்களின் விடியலுக்காகவும், கட்ச தீவை மீட்கவும், கல்வி கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்திடவும், என்.எல்.சி யில் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர பணியாளர்களாக்கவும் இந்த மாநாடு கடலூரில் எழுச்சியோடு நடத்தப்பட உள்ளது என்றார். பேட்டியின்போது நிர்வாகிகள் பஞ்சமூர்த்தி, ஆனந்த், செந்தில், அருள்பாபு. சுப்ரமணியம், கமலநாதன், கள்ளப்பட்டு ஆறுமுகம், பிரசன்னா உள்பட பலர் உடனிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக