தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மாவட்ட அரசியல் மாநாடு - தி.வேல்முருகன் அவர்களின் எழுச்சியுரை காணொளி பகுதி - 1

சனி, 30 ஜூன், 2012

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 24-6-2012 அன்று கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் மாவீரன் திலீபன் அரங்கத்தில் நடைபெற்ற லட்சக்கணக்கானோர் திரண்ட கடலூர் மாவட்ட முதல் மாபெரும் அரசியல் மாநாட்டில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் இளம்புயல், பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்களின் எழுச்சியுரை பாகம் 1










  http://www.youtube.com/watch?v=Lu2-wnXSygc&list=UUSRslur1DqIhEBTj829MYvg&index=3&feature=plcp \

Read more...

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வலியுறுத்தி தி. வேல்முருகன் கையொப்பமிட்டார்

வியாழன், 28 ஜூன், 2012

சென்னை :


      தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வலியுறுத்தி ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சியை முதல் கையெழுத்திட்டு வைகோ தொடங்கி வைத்தார். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, ஒரு கோடி கையெழுத்து பெறும் நிகழ்ச்சி காந்திய மக்கள் இயக்கம் சார்பில் சென்னையில் நேற்று தொடங்கியது. காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தலைமை வகித்தார்.


        ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ முதல் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மூத்த தலைவர் ஹைதர் அலி உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர்.



Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மாவட்ட முதல் அரசியல் மாநாடு - குமுதம் ரிப்போர்ட்டர், ஜூனியர் விகடன் செய்திகள்

புதன், 27 ஜூன், 2012



தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஞாயிறன்று (24-6-2012) மாலை கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் மாவீரன் திலீபன் அரங்கத்தில் நடைபெற்ற    லட்சகணக்கானோர் திரண்ட கடலூர் மாவட்ட முதல் மாபெரும் அரசியல் மாநாடு குறித்து குமுதம் ரிப்போர்ட்டர், ஜூனியர் விகடன் ஆகிய நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ள செய்திகள்





Read more...

கூடங்குளம் அணு உலைகளை முற்றிலும் கைவிட வலியுறுத்தி தி.வேல்முருகன் பங்கேற்கும் எழுச்சி மாநாடு

திங்கள், 25 ஜூன், 2012

இடம் : இடிந்தகரை

நாள்: 01.07.2012, ஞாயிறு, காலை 9.00 மணி

தலைமை

அய்யா. பழ. நெடுமாறன், தலைவர், தமிழர் தேசிய இயக்கம்.

முன்னிலை

அய்யா. இரா. நல்லகண்ணு, தேசிய கட்டுப்பாட்டுக் குழு, இந்திய பொதுவுடைமை கட்சி

வரவேற்புரை

சுப. உதயகுமார், ஒருங்கிணைப்பாளர், அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்.

கருத்துரை வழங்குபவர்கள்



திரு. பண்ருட்டி தி.வேல்முருகன், நிறுவனர் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி.



திரு. தொல்.திருமாவளவன், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

திரு.பெ.மணியரசன், தலைவர், தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சி.

தோழர். தியாகு, தமிழ் தேசிய விடுதலை இயக்கம்.

திரு. கொளத்தூர் மணி, தலைவர், பெரியார் திராவிடர் கழகம்.

திரு. சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி.


திரு. வடிவேல் ராவணன், பொதுச் செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி.

திரு. மல்லை சத்யா, துணைப் பொதுச் செயலாளர், ம.தி.மு.க.

திரு. எம்.ஜி. தேவசகாயம், இ.ஆ.ப (ஓய்வு), முன்னாள் செயலர், மின்சார வாரியம், ஹரியானா

திரு. இரா.கோவை இராமகிருஷ்ணன், பொதுச் செயலாளர், பெரியார் திராவிடர் கழகம்

தோழர். மீ.த.பாண்டியன், மாநிலச்செயலாளர், இந்திய பொதுவுடைமைக் கட்சி, (மார்க்சிஸ்ட் - லெனிஸ்ட்) மக்கள் விடுதலை

திரு. அதியமான், தலைவர், ஆதித்தமிழர் பேரவை, கோவை.

திரு. ஜான் பாண்டியன், தலைவர், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்.

திரு. அரிமாவளவன், தலைவர், தமிழர் களம்,

திரு. ஞாநி, எழுத்தாளர், சென்னை .

திரு. மனுஷ்யபுத்திரன், ஆசிரியர், உயிர்மை, மாத இதழ், சென்னை

திரு. புனித பாண்டியன், ஆசிரியர், தலித் முரசு, மாத இதழ், சென்னை

பேரா. தொ.பரமசிவன், தலைவர், தாமிரபரணி பண்பாட்டுப் இயக்கம், திருநெல்வேலி,

திரு. புகழேந்தி தங்கராஜ், திரைப்பட இயக்குனர்.

திரு. மணிவண்ணன், திரைப்பட இயக்குனர், சென்னை

திரு. லக்ஷ்மி மணிவண்ணன், எழுத்தாளர், நாகர்கோவில்.

தோழர். சேவியர், மாநில குழு உறுப்பினர், இந்திய பொதுவுடைமைக் கட்சி, திருநெல்வேலி.

திரு.வி.எம்.அபுத்தாகீர், மாநில செயலாளர், சோசியல் டெமோகிராட்டிக் பார்ட்டி ஆப் இந்தியா

திரு. அப்துல் சமது, மாநில பொதுச் செயலாளார், தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம்.

திரு. அரங்க குணசேகரன், தலைவர், தமிழக மக்கள் புரட்சிக் கழகம்

திருமிகு .பொன்னுத்தாய், தமிழக பெண்கள் இணைப்புக் குழு, திருநெல்வேலி மாவட்டம்

திரு. திருமுருகன், ஒருங்கிணைப்பாளர், மே17 இயக்கம்

திரு. நித்யானந் ஜெயராம், சுற்றுச் சூழல் ஆர்வலர், சென்னை

திரு. கோ. சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள், சென்னை

பேரா. சாம் ஆசீர் ராஜ், அணு சக்திக்கு எதிரான ஆசிரியர் கூட்டமைப்பு, திருநெல்வேலி.

திரு. செந்தில், ஒருங்கிணைப்பாளர், சேவ் தமிழ் இயக்கம்

திரு. ப.அ. சரவணன், நெல்லை மாவட்ட செயலாளர், ம.தி.மு.க.

திரு. எம்.சி.கார்த்திக், நெல்லை மாவட்ட செயலாளர், விடுதலை சிறுத்தைக் கட்சி

வழக்கறிஞர். ரமேஷ், இந்திய பொதுவுடைமைக் கட்சி, மார்க்சிய லெனிஸ்ட், திருநெல்வேலி

தோழர். அந்தோணி முத்து, மாவட்ட செயலாளர், மார்க்சிஸ்ட் லெனிஸ்ட், குமரி மாவட்டம்

திரு. லேனா குமார், நெல்லை மாவட்டம், மே17 இயக்கம்.

வழக்கறிஞர். சிவக்குமார், தென் மண்டல ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி.

வழக்கறிஞர். செந்தில், நெல்லை மாவட்ட செயலாளர், நாம் தமிழர் கட்சி,

அருட்திரு. தாமஸ் கொச்சேரி, முன்னாள் தலைவர், தேசிய மீனவர் பேரவை.

திரு. டி.ஆர்.சபாபதி, தமிழர் தேசிய இயக்கம்.

எழுச்சிப் பாடல்கள்

முரசு கலைக் குழு, நாகர்கோவில்

மாநாடு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்

திரு. மை.பா. சேசுராசு & திரு. பீட்டர் மில்டன்.

நன்றியுரை

ம.புஷ்பராயன்.


தோழர். சி.மகேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர், இந்திய பொதுவுடைமைக் கட்சி,

Read more...

Tamilaga Vazhvurimai Katchi Political Awareness Conference at Manjakuppam

Cuddalore:

   It is unfortunate that Tamil Nadu’s riparian rights are denied by the neighbouring States, Tamils are subjected to ill-treatment without any valid reason and the Centre has turned a Nelson’s eye to the plight of the people affected by cyclone ‘Thane,’ said T. Velmurugan, founder of the Tamilaga Vazhvurimai Katchi (TVK).

    He was addressing the first “political awareness conference” of the party at Manjakuppam Grounds here on Sunday. Mr. Velmurugan said the TVK was established with the prime objective of retrieving the rights of Tamils. The Centre had cheated the people of Tamil Nadu by not sanctioning adequate cyclone relief.

 

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மாவட்ட முதல் அரசியல் விழிப்புணர்வு மாநாடு

சனி, 23 ஜூன், 2012



தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மாவட்ட முதல் அரசியல் விழிப்புணர்வு மாநாடு சூன் - 24, 2012 (ஞாயிற்றுக்கிழமை) கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் மாவீரன் திலீபன் அரங்கத்தில் நடைபெற உள்ளது..எனவே தமிழ் உணர்வு கொண்ட தமிழர்கள், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட மாநில, நகர, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள்,தொண்டர்கள் அரசியல் மாநாட்டில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்....


இடம் : மஞ்சை நகர் மைதானம், கடலூர்.

நேரம் : மாலை 4 மணி

நாள்: சூன் - 24, 2012, ஞாயிற்றுக்கிழமை


Read more...

Tamil Nadu were denied by neighbouring States - TVK founder T.Velmurugan

The Tamilaga Vazhvurimai Katchi (TVK) will organise its maiden “political awareness conference” on the Manjakuppam Grounds here on June 24, according to its founder T. Velmurugan, former MLA.

Addressing a press conference here on Friday, Mr. Velmugurgan who floated the new party after his expulsion from the Pattali Makkal Katchi, said that the conference would serve as a rallying point for the Tamils to assert their rights and to retrieve their lost prestige.

Unity on common causes

It was a matter of concern that riparian rights of Tamil Nadu were denied by neighbouring States such as Kerala, Andhra Pradesh and Karnataka. The TVK was of the view that if political parties in Tamil Nadu put up of a show of unity on common causes, it could safeguard its interests. The TVK also sought retrieval of Katchatheevu from Sri Lanka and protection to Tamil Nadu fishermen on the high seas and Tamils living on the island.


Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மாவட்ட மாநாட்டு பணிகள்: தி.வேல்முருகன் நேரில் பார்வை

ஞாயிறு, 17 ஜூன், 2012

கடலூர்:

 

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட மாநாடு வரும் 24 ம் தேதி கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடக்க உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை கட்சியின் நிறுவனர் வேல்முருகன் நிர்வாகிகளுடன் சென்று நேரில் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கூறியது:

கடலூரில் நடைபெற உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநாடு ஒட்டுமொத்த தமிழர்களின் நலன் காக்கும் மாநாடாகும். தமிழீழ மக்களின் விடியலுக்காகவும், கட்ச தீவை மீட்கவும், கல்வி கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்திடவும், என்.எல்.சி யில் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர பணியாளர்களாக்கவும் இந்த மாநாடு கடலூரில் எழுச்சியோடு நடத்தப்பட உள்ளது என்றார். பேட்டியின்போது நிர்வாகிகள் பஞ்சமூர்த்தி, ஆனந்த், செந்தில், அருள்பாபு. சுப்ரமணியம், கமலநாதன், கள்ளப்பட்டு ஆறுமுகம், பிரசன்னா உள்பட பலர் உடனிருந்தனர்.


Read more...

உளுந்தூர்பேட்டை ஒன்றிய கிராமங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடி ஏற்று விழா

திங்கள், 11 ஜூன், 2012


உளுந்தூர்பேட்டை ஒன்றியம், பள்ளியம்தாங்கள், அரளி, பாண்டூர் கிராமங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத்தலைவர் . இளம்புயல் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் கொடி ஏற்றினார். நிகழ்ச்சியில்  மாநில துணைப் பொதுச்செயலாளர் வ.ச.சுரேஷ்குமார், மாவட்ட செயலாளர் ஞா.ராஜேஷ் மற்றும் ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

இலங்கை ராணுவத்துக்கு இந்தியா ராணுவப் பயிற்சி வழங்க தி. வேல்முருகன் கண்டனம்

செவ்வாய், 5 ஜூன், 2012

சென்னை: 

இலங்கைக்கு இந்தியா ராணுவப் பயிற்சி வழங்கக்கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவும் அமெரிக்காவும் உயர் ராணுவப் பயிற்சி வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளன என்று இலங்கை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளதாக ஊடகங்களில் வெளியாகி உள்ள செய்தி வெந்தபுண்ணில் வேலை பாய்ச்சுவதாகவே உள்ளது.

இலங்கையின் பூர்வகுடிகளான எங்கள் தொப்புள் கொடி உறவுகளான தமிழ் மக்களை லட்சக்கணக்கில் ஈவிரக்கமின்றி படுகொலை செய்து சர்வதேசத்தின் முன் போர்க்குற்றவாளியாக நிறுத்தப்பட்டுள்ளார் ராஜபக்சே.

தமிழ் மக்களுக்கு எதிராக சர்வதேச நாடுகள் தடை விதித்திருக்கக் கூடிய கொத்து குண்டுகளை இலங்கை ராணுவம் வீசியதாக ஐக்கிய நாடுகள் சபையின் கண்ணிவெடி அகற்றும் பிரிவினரே குற்றம்சாட்ட்டியுள்ளனர். போர் முடிந்தது.. மறுசீரமைப்பு நடைபெறுகிறது என்று சொல்லிக் கொண்டே இன்னமும் முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட முல்லைத் தீவுப் பகுதிகளில் ஒன்றரை லட்சம் தமிழர்களை முகாம்களிலே அடைத்து வைத்து நாள்தோறும் சித்திரவதை செய்து கொண்டிருக்கிறது இலங்கை ராணுவம். எம் தமிழ்ச் சகோதரிகளை விசாரணை என்ற பெயரில் வேட்டையாடி அவர்களது எதிர்காலத்தையே நாசம் செய்து வருகிற படைதான் இலங்கை ராணுவம். இத்தகைய ரத்தக்கறை படிந்த சிங்கள ராணுவத்துக்கு இந்திய ராணுவம் பயிற்சி கொடுப்பது என்பதை ஏற்கமுடியாது.

தமது விடுதலைக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி லட்சக்கணக்கான தமிழர்களை கொலை செய்த சிங்கள அரசு இப்போது இஸ்லாம் பயங்கரவாதம் என்ற முகமூடியைப் போட்டுக் கொண்டு தமிழ் முஸ்லிம்களை வேட்டையாடப் புறப்பட்டிருக்கிறது.

இலங்கையில் நடைபெற்று வரும் இஸ்லாமிய மதப்பள்ளிகளை கணக்கெடுப்பது, மசூதிகளைக் கணக்கெடுப்பது என்று ஏற்கெனவே தமிழ் முஸ்லிம்களை வேட்டையாடத் தொடங்கியிருக்கும் ராஜபக்சே அரசு இப்போது அல் குவைதா, தலிபான்கள் நடமாட்டம் என்ற பெயரில் மீண்டும் ஒரு இனப்படுகொலைக்கு தயாராகிவிட்டது.

மூன்றாண்டுகளுக்கு முன்பு இலங்கையின் வடக்கில் முள்ளிவாய்க்காலில் எத்தகைய கோரத்தை சிங்கள ராணுவமும் சர்வதேச நாடுகளும் செய்தனவோ அதே போன்ற இனப்படுகொலையை இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையினராக வசிக்கும் கிழக்கிலும் நிகழ்த்தப் போகிறது என்பதற்கான முன் தயாரிப்புகளே இத்தகைய ராணுவப் பயிற்சிகள் என அச்சப்படுகிறோம். அல்குவைதா, தலிபான்கள் நடமாட்டம் என்ற பெயரில் இலங்கையின் கிழக்குப் பகுதியில் தமிழ் முஸ்லிம்கள் மீது சிங்கள ராஜபக்சே நடத்தப் போகும் இனப்படுகொலைக்கான இந்த ராணுவ பயிற்சியை இந்திய அரசு வழங்கக் கூடாது என்பதை அனைத்து தமிழ்த் தேசிய சக்திகளும் ஒன்றிணைந்து வலியுறுத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.



Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்: தி.வேல்முருகன் சிறப்புரையாற்றுகிறார்

ஞாயிறு, 3 ஜூன், 2012


கடலூர்:

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் கடலூர் டவுன் ஹால் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை மதியம் நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் விடுத்துள்ள செய்தி குறிப்பு


சூன் 24-ம் தேதி கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடக்கவுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் முதல் அரசியல் கொள்ளை விளக்க மாநாடு குறித்து பொதுக்குழுக் கூட்டத்தில் ஆலோசனை செய்ய உள்ளதால், கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோயில், திட்டக்குடி ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, வார்டு, கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.


சிறப்புரை : தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி. வேல்முருகன்

நாள் : சூன் 5, 2012 .

இடம் : கடலூர் டவுன் ஹால்

நேரம் : முற்பகல் 2 மணி






Read more...

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP