தமிழ்நாடு மால்கம் கழக கெளவத் தலைவராக பண்ருட்டி தி. வேல்முருகன் நியமனம்

திங்கள், 13 பிப்ரவரி, 2012

கடலூர்:

       தமிழர்களின் கலாசாரமும் வீர விளையாட்டுகளும் புத்துயிர் பெற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வலியுறுத்தினார்.  

         தென்மண்டல மால்கம் விளையாட்டுப் போட்டியை நடத்துவது தொடர்பாகத் தமிழ்நாடு மால்கம் கழக ஆலோசனைக் கூட்டம் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. 

மால்கம் கழக கெளவத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கூட்டத்தில் பேசியது: 

          தமிழக நாகரிகமும், கலாசாரமும் வீர விளையாட்டுகளும் மறைந்து, நுகர்வு கலாசாரம் பெருகி வருகிறது. மாணவர் சமூகம் மாறிவிட்டது. கல்வி முறை மன அழுத்தம் தருவதாக மாறியிருக்கிறது. குழந்தைகள் மோசமான கலாசாரத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். உறவு முறைகள் எல்லாம் மறைந்து விட்டது. கல்வி நிறுவனங்களில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் கலாசாரத்தைச் சீர்குலைந்து வருகிறது. சினிமா கலாசாரத்தால் மாணவ சமுதாயம் சீரழிகிறது. மன அழுத்தம் தரும் கல்வி முறைதான் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது.  தமிழ்ச் சமூகத்தின் வேர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். 

         தமிழர்களின் வீர விளையாட்டுகள் மீண்டும் வளர வேண்டும். அவற்றுக்கு புத்துயிரூட்ட வேண்டும். அவற்றை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்.  கிக் பாக்ஸிங் என்ற தமிழக குத்துச் சண்டைக் கலை மீட்டெடுக்கப்பட்டு உள்ளது. இன்றைய தலைமுறை இக்கலையைக் கற்க வேண்டும். நம்மிடமிருந்து சென்ற இக்கலைக்கு வேறு வடிவம் கொடுத்து அதனைச் சிலர் புகழ்பாடிக் கொண்டு இருக்கிறார்கள் என்றார் வேல்முருகன்.

நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி தமிழ்நாடு மால்கம் கழகத் தலைவரும் உடல்கல்வி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான ஆர்.திருமலைசாமி பேசுகையில், 

          தமிழகம், புதுவை, கர்நாடகம், கேரளம், ஆந்திர மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல மால்கம் விளையாட்டுப் போட்டி தமிழகத்தில் மே மாதம் நடைபெறும் என்றார்.  மால்கம் கழக பொதுச் செயலாளர் உலகதுரை, துணைச் செலாளர் ஆதம் சாக்ரட்டீஸ், திருமால்வளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP