தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளராக திரு.சக்திவேலன் நியமனம்: பண்ருட்டி தி. வேல்முருகன் அறிவிப்பு
புதன், 1 பிப்ரவரி, 2012
சேலம்:
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளராக, சேலத்தை சேர்ந்த சக்திவேலன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனரும், முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான பண்ருட்டி தி. வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கை:
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளராக, சேலம் சக்திவேலன் நியமிக்கப்படுகிறார்.
சேலம் தெற்கு மாவட்ட அமைப்பாளராக முத்து, மாநகர அமைப்பாளராக மெகாபைவ் ஆனந்தன் ஆகியோர் நியமனம் செய்யப்படுகின்றனர்.
சேலம் தெற்கு மாவட்ட அமைப்பாளராக முத்து, மாநகர அமைப்பாளராக மெகாபைவ் ஆனந்தன் ஆகியோர் நியமனம் செய்யப்படுகின்றனர்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சக்திவேலன் உள்ளிட்ட நிர்வாகிகள், தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனரும், முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான பண்ருட்டி தி.வேல்முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் தீரன், மாநில பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான காவேரி, மாநில அமைப்பு செயலாளர் காமராஜ், இணைச் செயலாளர் சண்முகம், மற்றும் மாநில நிர்வாகிகள், பொறுப்பாளர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக