கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் மீது தாக்குதல்: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
வியாழன், 2 பிப்ரவரி, 2012
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனரும், முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான பண்ருட்டி தி.வேல்முருகன்அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனரும், முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்ட அறிவிப்பு
எதிர்கால தலைமுறையினரையும் இந்த மண்ணையும் மக்களின் வாழ்வாதாரங்களையும் அழிக்கும் அணு உலைகளை எதிர்த்து காந்திய வழியில் போராடிவரும் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் மீது நேற்று அணு உலைக்கு ஆதரவனோர் என்ற பெயரில் இந்து மக்கள் கட்சி மற்றும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசின் கைக்ககூலிகளாலும், கொலை வெறித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அமைதியான முறையில் அரசின் அழைப்பை ஏற்று பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள சென்றவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல் துறையினரின் முன்னால் தாக்கியது காட்டுமிராண்டித்தனமானது.
இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வெறிச்செயலில் ஈடுபட்ட பாசிச இந்து முன்னணியினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஜனநாயகத்தை நிலை நாட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். மேலும், இந்த வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டோரை கண்டித்து (3-2-2012) ந் தேதி காலை10 மணியளவில், பனகல் மாளிகை எதிரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி , நாம் தமிழர் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இதில் மனித நேய ஆர்வலர்களும்,தமிழின உணர்வாளர்களும், இளைஞர்கள், பொதுமக்களும், பெருந்திரளாய் கலந்து
0 கருத்துகள்:
கருத்துரையிடுக