தானே புயலால் பாதிக்கபட்ட கடலூர் மாவட்டத்தில் கல்வி கடனை ரத்து செய்ய கோரி இளம்புயல் மாணவர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்
வியாழன், 16 பிப்ரவரி, 2012
இளம்புயல் மாணவர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :
அன்புள்ள தமிழ் சொந்தகளே தானே புயலால் பாதிக்கபட்ட கடலூர் மாவட்டத்தில் இருந்து மாநிலத்தின் எந்த கோடியில் படிகின்ற படிகின்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு எதிர் வரும் ஐந்து வருடங்களுக்கு கல்வி கட்டணத்தை அரசே ஏற்க கோரியும் கல்வி கடனை முழுவதுமாக ரத்து செய்ய கோரியும் வரும் 28.02.2012 (செவ்வாய்க்கிழமை) காலை ஏழுமணி அளவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் மாபெரும் உண்ணாவிரத அறவழி போராட்டம் நடை பெற உள்ளது.
இந்த உண்ணாவிரத அறவழி போராட்டத்தில் மாணவ சமுதாய மக்கள் அனைவரும் கலந்து கொண்டு போராட்டத்திற்கு அதரவு தாருங்கள்.
சிறப்பு விருந்தினர்
சிறப்பு விருந்தினராக முன்னாள் பண்ருட்டி சட்ட மன்ற உறுப்பினர், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் பண்ருட்டி தி . தி.வேல்முருகன் கலந்து கொள்கிறார்.
--------------------------இவன் இளம்புயல் மாணவர் சங்கம்-------------------------
0 கருத்துகள்:
கருத்துரையிடுக