சேலத்தில் மார்ச் 4-ம் தேதி தமிழக வாழ்வுரிமைக் கட்சி பொதுக்கூட்டம்: தி.வேல்முருகன் தலைமை தாங்குகிறார்

புதன், 22 பிப்ரவரி, 2012

    தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மார்ச் 4-ம் தேதி சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் நிறுவனர் தலைவர் தி.வேல்முருகன், தலைவர் பேராசிரியர் தீரன், பொதுச் செயலர் காவேரி, அமைப்புச் செயலர் ப.காமராஜ்ஆகியோர் பங்கு கொள்கின்றனர்.

    தமிழக வாழ்வுரிமைக் கட்சி சேலம் மாநகர் ஆலோசனைக் கூட்டம் ஓமலூர் சாலையில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி   அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை ( 19/02/2012) நடைபெற்றது. 

       சேலம் மாநகர் மாவட்ட அமைப்பாளர் ஏ.பி.குமார் தலைமையில்  நடைப்பெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் துணை அமைப்பாளர் சந்திரன், ஏ.பி.பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைப் பொதுச் செயலர் எஸ்.சத்தியமூர்த்தி சிறப்புரையாற்றினார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில துணைப் பொது செயலாளர்கள் சக்திவேலன், ஜெயமோகன் ஆகியோர் பேசினார்கள். 

    கூட்டத்தில், கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர்கள் எஸ்.கே.சக்திவேலன், கே.ஜெயமோகன், பொதுக்குழு உறுப்பினர் பி.ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : 

1. சேலம் மாநகரில் நிலவும் குடிநீர் தட்டுபாட்டை போக்க, சேலம் மாநகராட்சி பகுதிகளில் 2  நாட்களுக்கு ஒருமுறை சீராக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்க எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

 2.சேலம் புதிய பேருந்து  நிலையத்தின் சுற்றுப்புறத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; 

3. சேலம் மாநகரில் குறைந்தது 10 அல்லது 12 நாள்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் விநியோகத்தை சீரமைத்து 2 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

4. சேலம் மரவனேரி பிரதான சாலை மிகவும் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே, இந்த சாலையை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் விரைந்து சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 5. தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மார்ச் 4-ம் தேதி சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் நிறுவனர் தலைவர் தி.வேல்முருகன், தலைவர் பேராசிரியர் தீரன், பொதுச் செயலர் காவேரி, அமைப்புச் செயலர் ப.காமராஜ் ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP