கடலூரில் பண்ருட்டி தி.வேல்முருகன் புதிய கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை

வியாழன், 3 நவம்பர், 2011



 http://mmimages.mmnews.in/Articles/2011/Nov/3299acdc-37e7-42d1-91eb-73db96612133_S_secvpf.gif
 
கடலூர்:

        பாட்டாளி மக்கள் கட்சி மாநில இணைப் பொது செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன் கட்சியிலிருந்து எந்தவித நியாமான காரணம் இன்றி 
நீக்கப்பட்டுள்ளார். இதை கண்டித்து ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பல நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகினார்கள். இதைத்தொடர்ந்து  ஆதரவாளர்கள் கூட்டத்தை நேற்று கடலூரில் கூட்டினார். டவுன்ஹாலில் கூட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வேல்முருகன் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார். 
 
அப்போது தி.வேல்முருகன் கூறியது:-

          நான் எனது 15-ம் வயதில் பா.ம.க.வில் சேர்ந்து 25 ஆண்டுகள் எனது உழைப்பை கொடுத்துள்ளேன். எனது வளர்ச்சியை பொறுக்க முடியாத அதிகார கும்பல் நான் டாக்டர் ராமதாசின் வலது கரமாக வளர்ந்து விடுவேனோ என்று எண்ணி என்னை கட்சியை விட்டு நீக்க திட்டம் தீட்டினார்கள். நான் 3 மாதத்துக்கு முன்பே பேசிய பேச்சில் என்ன தவறு இருக்கிறது? அதை நிர்வாக குழுவில் வாசித்து காட்டியிருக்கிறீர்கள். இதைவிட பல மடங்கு கூட்டத்தை மஞ்சக்குப்பம் மைதானத்துக்கு அழைத்துக் கொண்டு வருகிறேன். நான் பேசிய பேச்சை அந்த கூட்டத்தில் போட்டு காட்டுங்கள். இந்த கட்சியில் 2-ம் கட்ட தலைவராக உருவாகி வருகிறேன் என்பதால் காய் நகர்த்தி வெளியேற்றி விட்டீர்கள்.

            இந்த இயக்கத்துக்கு ரத்தத்தையும், தியாகத்தையும் வழங்கிய வேல்முருகனுக்கே இந்த நிலை என்றால் மாநில, மாவட்ட நிர்வாகிகளே உங்களுக்கு என்ன நிலை என்று யோசித்துப் பாருங்கள்.நான் இப்போது பா.ம.க. வில்தான் இருக்கிறேன். இந்த கட்சியில் இருந்துதான் செயல்படுவேன். இந்த கட்சி பெயரை பயன்படுத்தக் கூடாது என்று அவர்கள் நீதி மன்றத்துக்கு சென்று தடை ஆணை வாங்கி வந்தால் இந்த கட்சியின் பெயருக்கு முன்னால் புதிய பெயருடன் செயல்படுவோம். இன்றைக்கு நான் அழைக்காமலே பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் நிர்வாகிகள் வந்துள்ளனர். என்னை நீக்கியது சரியா, தவறா? என்பதை முடிவு செய்ய ஒருவார காலத்திற்குள் பா.ம.க. குழுவை கூட்ட வேண்டும்.

            தேர்தலில் கூட்டணி வைக்க பொதுக்குழுவை கூட்டி ஓட்டெடுப்பு நடத்தி முடிவு எடுத்தீர்களே அதேபோல் ஒரு வார காலத்திற்குள் பொதுக்குழுவை கூட்டி வேல்முருகனை நீக்கியது சரியா, தவறா? என்று முடிவெடுக்க வேண்டும். என்னை நீக்கியது சரிதான் என்று பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டால் பா.ம.க. பெயரை அதன் பிறகு நான் பயன்படுத்த மாட்டேன். அதன்பிறகு தமிழகம் முழுவதும் சென்று இளைஞர்களிடமும், பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்டு புதிய பெயருடன் இயக்கம் காண்போம்.  இவ்வாறு அவர் பேசினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP