உரிமை பிரச்சனை : கடலூரில் மாவட்ட பா.ம.க.அலுவலகத்துக்கு சீல்

சனி, 12 நவம்பர், 2011

        
 http://mmimages.mmnews.in/Articles/2011/Nov/edc7cf01-992a-4541-97dd-c4435b5d9244_S_secvpf.gif

       

           கடந்த 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் பா.ம.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தி. வேல்முருகன். இவர் பா.ம.க. மாநில இணை பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்தார்.  இதற்கிடையே கடந்த 31-ந் தேதி வேல்முருகன் கட்சியில் இருந்து திடீரென நீக்கப்பட்டார். இதனால்  பண்ருட்டி தி. வேல்முருகனின் ஆதரவாளர்கள் பா.ம.க. அலுவலகத்தை கைப்பற்றினர்.

         
பண்ருட்டி தி. வேல்முருகன் அவர்களின் சீரிய முயற்சியால் தொடங்கப்பட்ட  பா.ம.க. அலுவலகம். இந்த நிலையில் கடலூர் மாவட்ட பா.ம.க. அலுவலகம் யாருக்கு சொந்தம் என்பதில் 3 தரப்பினர் உரிமை கொண்டாடி வந்தனர்.  பண்ருட்டி தி.வேல்முருகனின் முயற்சியால்  தொடங்கப்பட்ட அலுவலகம் தங்களுக்குதான் சொந்தம் என்றும் தி.வேல்முருகன் ஆதரவாளர்களும்,  

           பா.ம.க.  அலுவலகம் கட்சிக்குத்தான் சொந்தம் என்று பா.ம.க. துணை பொதுச் செயலாளர் சண்முகம் தரப்பினரும் தற்போது செயல்படும் கட்சி  அலுவலகம் வன்னியர் சங்கத்துக்காக வாங்கப்பட்ட இடம் என்று சீனிவாச படையாட்சியின் மகன் அமராவதி தரப்பினரும் உரிமை  கொண்டாடி கலெக்டரிடம் மனு கொடுத்து இருந்தனர்.

          இதனால் பா.ம.க. அலுவலகம் யாருக்கு சொந்தம் என்பதை உறுதிப்படுத்திட 3 தரப்பினரையும் தகுந்த ஆவணங்களுடன் வருகிற 13-ந்  தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கலெக்டர் அமுதவல்லி உத்தர விட்டிருந்தார்.  இதற்கிடையே  கடலூரில் பா.ம.க. மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதையொட்டி கட்சி  அலுவலகம் தொடர்பாக பிரச்சினை ஏற்படலாம் என கருதி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கட்சி அலுவலகத்துக்கு நேற்று மாலை தாசில்தார் எழிலன் சீல் வைத்தார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP