நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் பா.ம.க.தேர்தல் பணிகள் தீவிரம்

வியாழன், 24 மார்ச், 2011

பண்ருட்டி : 

                நெய்வேலி தொகுதியில் பா.ம.க.-அ.தி.மு.க.  போட்டி காரணமாக இரு கட்சியினரும் தேர்தல் பணியில் சுறுசுறுப்படைந்துள்ளனர். 

             மறுசீரமைப்பில் உருவான நெய்வேலி தொகுதி பண்ருட்டியை சுற்றியுள்ள 30 கிராமங்கள் மற்றும் நெய்வேலி என்.எல்.சி., தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியாக உருவாகியதால் பண்ருட்டி தொகுதி பா.ம.க., எம்.எல்.ஏ., வேல்முருகன் நெய்வேலி தொகுதியில் போட்டியிட முடிவு செய்து நெய்வேலி தொகுதியில் தேர்தல் பணிகளை துவங்கினார். 

               வேல்முருகனுக்கு போட்டியாக அ.தி.மு.க., சார்பில் மாவட்ட முன்னாள் செயலர் சொரத்தூர் ராஜேந்திரன் நிறுத்தப்படுவார் என எண்ணி அ.தி.மு.க., கட்சியினர் தொகுதி முழுவதும் உள்ள கிராமங்களில் பா.ம.க., விற்கு இணையாக சுவர் விளம்பரத்திற்கு வெள்ளையடித்து பணிகளை துவக்கினர். இந்நிலையில் சொரத்தூர் ராஜேந்திரனுக்கு குறிஞ்சிப்பாடி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதல் பட்டியல் குளறுபடி காரணமாக நெய்வேலி தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் நிறுத்தப்படலாம் என கருதப்பட்டது. 

              இந்நிலையில் அ.தி.மு.க., வின் 2வது வேட்பாளர் பட்டியலில் சொரத்தூர் ராஜேந்திரனின் தீவிர ஆதரவாளரும் ஒன்றிய முன்னாள் சேர்மன் சிவசுப்ரமணியன் அறிவிக்கப்பட்டார். அதனால் நெய்வேலி தொகுதியில் பா.ம.க.- அ.தி.மு.க., போட்டியால் இருதரப்பினரிடையே கடும் போட்டி நிலவும் என்பதால் தற்போது இருகட்சிகளும் சுறுசுறுப்படைந்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP