பாமக போட்டியிடும் தொகுதிகள் : திமுக குழுவுடன் ஆலோசனை

திங்கள், 7 மார்ச், 2011

         தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்து, திமுக ஐவர் குழுவுடன் பாமகவினர் ஆலோசனை நடத்தினர். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகள் எவை என்பது குறித்து திமுக பொருளாளரும், திமுக தொகுதி பங்கீட்டுக் குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஐவர் குழுவுடன் பாமக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். 

               இந்த ஆலோசனையில் திமுக தரப்பில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், ஆர்க்காடு வீராசாமி, பொன்முடி, டி.ஆர்.பாலுவும், பாமக தரப்பில்   தலைவர் ஜி.கே.மணி, வேலு, ஏ.கே.மூர்த்தி, எம்.எல்.ஏ. வேல்முருகன், எம்.எல்.ஏ.தமிழரசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டனர்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP