நெய்வேலியில் அரசு மருத்துவ கல்லூரி அமைய பாடுபடுவேன்: பா.ம.க. வேட்பாளர் வேல்முருகன்

ஞாயிறு, 27 மார்ச், 2011

நெய்வேலி:

               நெய்வேலியில் உள்ள பாட்டாளி தொழிற்சங்க அலுவலகத்தில் தொழிற் சங்கம் மற்றும் பா.ம.க. கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. பாட்டாளி தொழிற்சங்க பொதுச்செயலாளர் திலகர் வரவேற்றார். தலைவர் பெருமாள் முன்னிலை வகித்தார்.  
 
கூட்டத்தில் நெய்வேலி தொகுதி பா.ம.க. வேட்பாளர் வேல்முருகன் கலந்து கொண்டு பேசியதது:-

                  நெய்வேலியில் அமைந்துள்ள தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் பாட்டாளி தொழிற் சங்கம் ஆகியவைகள் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களாக உள்ளன. இந்த தொழிற் சங்கங்களின் உறுப்பினர்கள் முனைப்புடன் கூட்டணி கட்சியினருடன் ஒற்றுமையுடன் செயல்பட்டு தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும். நெய்வேலியில் தொழி லாளர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்காக களமிறங்கி போராடி வெற்றி பெற்றுள்ளேன்.

               பா.ம.க. கூட்டணி வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும். முன்னாள் மத்திய மந்திரி அன்புமணியின் கனவை நனவாக்கும் வகையில் நெய்வேலியில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க பாடுபடுவேன். 21, 30 ஆகிய வட்டங்களில் குடியிருக்கும் குடிசை வாழ் மக்களின் அடிப்படை பிரச்சினையான குடிநீர் மற்றும் மின்சாரம் பெற்றுத்தர முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் பலமுறை பேசியுள்ளேன். அவரும் கலெக்டர் மற்றும் என்.எல்.சி. நிறுவன தலைவரிடம் பேசியுள்ளார். இந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

               கூட்டத்தில் நெய்வேலி நகர செயலாளர் சக்கரவர்த்தி மற்றும் நிர்வாகிகள் ஜோதி பிரகாசம், வளர்மதி, பாட்டாளி தொழிற்சங்க பொருளாளர் மோனிகா, அலுவலக செயலாளர் சுப்பிரமணியன், வன்னியர் சங்க முன்னாள் செயலாளர் ஜோதிலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP