பெரும்பான்மை மக்களில் மூன்று சதவீதத்தினர் தான் இட ஒதுக்கீட்டை அனுபவிக்கின்றனர்: வேல்முருகன்

புதன், 16 ஜூன், 2010


கடலூர் : 

                    ஜாதியின் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு இடஒதுக்கீடு வழங்கினால் தான் நாட்டில் சமூகநீதி நிலை நாட்டப்படும் என எம்.எல்.ஏ., வேல்முருகன் பேசினார்.ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுக்க வலியுறுத்தி பா.ம.க., சார் பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பா.ம.க., மாநில துணை பொதுச் செயலாளர் திருமால்வளவன், மாவட்ட செயலாளர்கள் பஞ்சமூர்த்தி, தர்மலிங்கம் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், எம்.எல்.ஏ., வேல்முருகன் தலைமை தாங்கி பேசியதாவது: 

                           ஜாதி வாரியாக கணக் கெடுப்பதில் என்ன தவறு உள்ளது. இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் 100 சதவீதத்தில் வெறும் 3 சதவீத இட ஒதுக்கீட் டையே அனுபவித்து வருகின்றனர். மீதமுள்ள 97 சதவீதத்தை ஆதிக்க ஜாதியினர் அனுபவித்து வருகின்றனர். மக்கள் தொகை கணக்கெடுக்கும் அரசு ஜாதி வாரியாக கணக்கெடுக்க வேண்டும் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார். இட ஒதுக்கீடு என்பது சாதாரண கிளார்க் முதல் சுப்ரீம் கோர்ட் நீதிபதி வரை சமூக நீதி சமமாக இருக்க வேண்டும். கல்வி, வேலை வாய்ப் பில் அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண் டும். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி, ஜாதியின் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு இடஒதுக்கீடு வழங்கினால் தான் சமூகநீதி நிலை நாட்டப்படும். ஜாதி வாரியாக கணக் கெடுக்க வலியுறுத்தி வரும் 28ம் தேதி தாலுகா அலுவலகம் முன் ஆர்ப் பாட்டம் நடத்தப்படுகிறது. இதில் வன்னியர்கள் அ.தி.மு.க.,- தி.மு.க., என எந்த கட்சியில் இருந்தாலும் அனைவரும் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு எம்.எல்.ஏ., வேல்முருகன் பேசினார்.

கடலூர் மாவட்ட செய்திகள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP