உலகத் தமிழ் செம்மொழி மாநாடு திரள் ஓட்டம்: பண்ருட்டி சட்ட மன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் தலைமை
திங்கள், 14 ஜூன், 2010
பண்ருட்டி:
அண்ணா பல்கலைக் கழகம், திருச்சிராப்பள்ளி சரகம் பண்ருட்டி அரசு பொறியியல் கல்லூரி சார்பில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு குறுந்தொடர் திரள் ஓட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. பண்ருட்டி தட்டாஞ்சாவடியில் இருந்து புறப்பட்ட திரள் ஓட்டத்தில் பல்கலைக்கழக மாணவ, மாணவியர் கலந்துகொண்டு, கோஷங்களை எழுப்பியவாறு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அடைந்தனர். முன்னதாக பண்ருட்டி சட்ட மன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் தலைமை தாங்கி திரள் ஓட்டத்தை தொடங்கி வைத்தார். பண்ருட்டி அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் எம்.குமாரசாமி முன்னிலை வகித்தார். நகர மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன், நெய்வேலி கல்வி அறக்கட்டளை தாளாளர் ஆர்.சந்திரசேகர், செயலர் எம்.நடராஜன், வட்டாட்சியர் பி.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக