பா.ம.க. எம்.எல்.ஏ.வேல்முருகன் பேட்டி

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

தி.மு.க., கூட்டணி மற்றும் அ.தி.மு.க., கூட்டணியை பிடிக்காத மாற்று சிந்தனை கொண்டவர்கள், விஜயகாந்தை நம்பி ஓட்டுப்போடுகின்றனர். அதனால், கூட்டணி அமைத்தால், இவருக்குரிய 8 சதவீத ஓட்டு என்பது, 4 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துவிடும்; இதுதான் வெளியே தெரியாத உண்மை. அதனால், ஜெயலலிதாவுடன், விஜயகாந்த் சேர்வதால் எங்கள் கூட்டணியை பலவீனப்படுத்திவிட முடியாது. இதை, தேர்தல் முடிவுகள் உணர்த்தும்.

Read more...

பா.ம.க.பயிற்சிப் பாசறை அரசு வேலைகளுக்கான பயிற்சி வகுப்பு நிறைவு: தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. சால்வை அணிவித்தார்

புதன், 23 பிப்ரவரி, 2011


கடலூர்:
               
           மருத்துவர் அய்யா பயிற்சிப் பாசறை நடத்தும், மத்திய, மாநில அரசு வேலை வாய்ப்புக்கான இலவச பயிற்சி மையம் முலம், கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான பயிற்சி நிறைவு விழா கடலூரில் செவ்வாய்க்கிழமை நடந்தது. விழாவுக்கு பயிற்சி மையத்தின் நிர்வாக இயக்குநர் தி.திருமால்வளவன் தலைமை வகித்தார். 

            பயிற்சியாளர்கள் ராம்பாபு, மோகன், சுந்தர் கணேஷ், பேராசிரியர் சுகி, கிராம நிர்வாக அலுவலர் விஸ்வநாதன் ஆகியோரைப் பாராட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. சால்வை அணிவித்தார். மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி அசோகன், சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் கமலக் கண்ணன், போலீஸ் உதவி ஆய்வாளர் ஆனந்தபாபு, தொழிலதிபர் துரைராஜ் உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர். விஜயலட்சுமி நன்றி கூறினார்.

Halloween

Read more...

திண்டிவனத்தில் வன்னியர் சங்க விழிப்புணர்வுக் கூட்டம்: வேல்முருகன் சிறப்புரை

திண்டிவனம்:

              திண்டிவனத்தை அடுத்த எண்டியூர் கிராமத்தில் வன்னியர் சங்கத்தின் சார்பில் விழிப்புணர்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை வன்னியர் சங்க பொறுப்பாளர் நல்லி.குலோத்துஙகன் தலைமையில் நடைபெற்றது.

               பாமக முன்னாள் ஒன்றியச் செயலர் த.இராமலிங்கம், கிளை செயலர் பரசுராமன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் ஆ.மா.ஜானகிராமன் வரவேற்புரை வழங்கினார். கூட்டத்தில், பாமக மாநில இணை பொதுச் செயலரும் பண்ருட்டி எம்.எல்.ஏ.வுமான தி.வேல்முருகன், மாநில துணை பொதுச் செயலரும் மேல்மலையனூர் எம்எல்ஏவுமான பா.செந்தமிழ்ச்செல்வன், வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் அ.தருமன், பாமக மாநில துணைத் தலைவர் என்.எம்.கருணாநிதி உள்ளிட்டோர் சிறப்புரை வழங்கினர்.

                 பாமக மாவட்டச் செயலர் எஸ்.இ.ஏழுமலை, மாநில செயற்குழு உறுப்பினர் நா.சிவக்குமார், நகரச் செயலர் மலர்சேகர், மரக்காணம் மேற்கு ஒன்றியச் செயலர் பா.நடராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.ஊராட்சி மன்ற உறுப்பினர் டி.எத்திராஜ் நன்றி கூறினார்.

Read more...

அன்புமணி ராமதாஸ் மற்றும் வேல்முருகன்எம்.எல்.ஏ - மு.க.அழகிரியை சந்தித்தனர்


 
 சென்னை:
 
           மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி மற்றும் வேல்முருகன் எம்.எல்.ஏ சந்தித்து சென்னையில் பிப்ரவரி 28-ம் தேதி நடைபெற உள்ள தனது சகோதரி மகன் திருமண விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினார்.

Read more...

முதல்வர் கருணாநிதியை அன்புமணி ராமதாஸ் மற்றும் வேல்முருகன் எம் எல்.ஏ சந்தித்தனர்

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011


        



















                சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்றும், முதல்வர் கருணாநிதி 6வது முறையாக மீண்டும் முதல்வர் ஆவார் என்றும், பாமக இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கூறினார்.  முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில், அன்புமணி ராமதாஸ் மற்றும் வேல்முருகன் எம் எல்.ஏ ந்தித்தனர். அப்போது அவரது சகோதரி மகன் திருமண விழாவுக்கான அழைப்பிதழை கொடுத்தார்.

பின்னர்  பேசிய அன்புமணி ராமதாஸ்,

                முதல் அமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். எனது சகோதரி மகன் திருமண அழைப்பிதழை குடும்பத்தினருடன் சென்று கொடுத்து திருமண விழாவுக்கு அழைத்தேன்.   காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள தி.மு.க. கூட்டணி, மெகா கூட்டணி. இது சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெறும். முதல்வர் கருணாநிதி 6வது முறையாக மீண்டும் முதல்வர் ஆவார்.

               இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 6 மாதங்களுக்கு முன்பே நாங்கள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டோம். சட்டசபை தேர்தலின் போது, டாக்டர் ராமதாசும், நானும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பிரசாரம் செய்வோம். தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து, தி.மு.க. கிளை ஒன்றிய நிர்வாகிகளுடன் நல்லிணக்க கூட்டங்கள் நடத்தப்படும். இதன் மூலம் தேர்தலில் சிறப்பாக பணி புரிய வாய்ப்பு ஏற்படும் என்றார்.


Read more...

கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பண்ருட்டி எம்.எல்.ஏ.,வேல்முருகன் பங்கேற்ப்பு

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

கடலூர்:

                 ஞாயிற்றுக்கிழமை நடந்த கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பண்ருட்டி எம்.எல்.ஏ.,வேல்முருகன், மாவட்ட ஊராட்சித் தலைவர் சிலம்புச் செல்வி, பா.ம.க. முன்னணித் தலைவரும் மாவட்ட ஊராட்சி உறுப்பினருமான ப.சண்முகம் உள்ளிட்ட தலைவர்களும், தொண்டர்களும் ஏராளமாகக் கலந்து கொண்டனர்.     

விழாவில் வேல்முருகன் எம்.எல்.ஏ. பேசுகையில், 

                இந்த விழாவில் கலந்து கொள்வதன் மூலம் கூட்டணி உறுதியாகி விட்டதா என்று பத்திரிகையாளர்கள் கேட்கிறார்கள்.  கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி திட்டம் நீண்டநாள் கோரிக்கை. அந்த கோரிக்கை நிறைவேற்றியதற்காக நன்றி தெரிவிக்க வந்தேன். முன் அனுமதி பெறாமலேயே முதல்வரையும் துணை முதல்வரையும் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றவன் நான்.  கூட்டணி பற்றி பாமக நிறுவனர் ராமதாசும் முதல்வர் கருணாநிதியும் முடிவு செய்வர் என்றார்.

Read more...

நெய்வேலி குடிசைப் பகுதிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்: வேல்முருகன் எம்.எல்.ஏ. கோரிக்கை

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

நெய்வேலி:

              நெய்வேலி வட்டம் 21 மற்றும் 30 பகுதியில் உள்ள குடிசைவாசிகளுக்கு மின் இணைப்பு வழங்க முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்கவேண்டுமென சட்டப் பேரவையில் பா.ம.க. எம்.எல்.ஏ. வேல்முருகன் புதன்கிழமை வேண்டுகோள் விடுத்தார். 

 சட்டப் பேரவை இடைக்கால நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரில் பங்கேற்றுவரும் பண்ருட்டி எம்.எல்.ஏ. தி.வேல்முருகன், புதன்கிழமை பேரவையில் பேசியது: 

              என்.எல்.சி. நிறுவனத்தில் பணிபுரிகின்ற 13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் நெய்வேலி வட்டம் 21, 30-ல் உள்ள குடிசைப் பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு என்.எல்.சி. நிர்வாகம் மின்சாரம் வழங்க மறுத்து வருவது வேதனைக்குரிய செய்தி. மேலும் அவர்கள் வசிக்கின்ற இடத்துக்கு அதிக தொகையில் தரை வாடகை கோருகிறார்கள்.  இப்பிரச்னையில் முதல்வர் தலையிட்டு மாவட்ட ஆட்சியர் மூலமாக என்.எல்.சி. நிர்வாகத்தை அழைத்துப் பேசி தீர்வு ஏற்படுத்திட வேண்டுகிறேன்.  மேலும் நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் பணிபுரிகின்ற பேராசிரியர்கள் பணி பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் உள்ளனர். 

            மாநில அரசின் கல்வித்துறை வழங்குகின்ற வழிகாட்டு நெறிமுறைகளை மதிக்க மறுக்கிறார்கள்.  என்.எல்.சி.யில் காலங்காலமாக பின்பற்றப்பட்ட பணி நேரம் என்பது தற்போது மாற்றியமைக்கப்பட்டு, காலை 9 முதல் மாலை 5,30 வரை பணிக்கு வரவேண்டும் என உத்தரவிடுகின்றனர். இதை எதிர்த்து கேட்டால் அடக்குமுறை நடைபெறுகிறது. இந்த நிலைகளை மாற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.  

               மேலும் என்.எல்.சி. சுரங்கத்தில் பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த வெடிமருந்துகளால், சுரங்கப் பகுதிகளுக்கு அருகாமையில் உள்ள கிராமங்களான வானதிராயபுரம், தென்குத்து கிராமங்களில் உள்ள வீடுகள் குலுங்கின்றன. ஆடு, மாடுகள் விபத்துக்குள்ளாகின்றன. மேலும் கையகப்படுத்தும் வீடுகளுக்கு மாற்றிடம் தர மறுக்கிறார்கள்.  இதனால் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என்று போராட்ட நடவடிக்கையில் ஈடுபட நேரிடுகிறது. 

               ஆனால் என்.எல்.சி. நிர்வாகம் இதை பொருட்படுத்திக் கொள்வதில்லை.  எனவே என்.எல்.சி. நிறுவனத்தினரை அழைத்து பேசி, இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என இத் தருணத்தில் கேட்டுகொள்வதாக வேல்முருகன் கோரிக்கை விடுத்தார்.


Read more...

15 வயதுள்ள வன்னிய இளைஞர்களை எங்களிடம் நம்பி ஒப்படையுங்கள்: எம்.எல்.ஏ.தி.வேல்முருகன் பேச்சு

திங்கள், 7 பிப்ரவரி, 2011

நெய்வேலி:

            கூட்டணி தொடர்பாக கோபாலபுரமோ அல்லது போயஸ்கார்டனோ செல்லாமலிருக்கவேண்டுமானால் வன்னியர்கள் அனைவரும் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும் என பண்ருட்டி எம்எல்ஏ தி.வேல்முருகன் நெய்வேலியில் வெள்ளிக்கிழமை பேசினார்.

நெய்வேலியில் உள்ள கட்சி பிரமுகர் இல்லத் திருமண விழாவுக்கு வெள்ளிக்கிழமை பாமக நிறுவனர் ராமதாசுடன் வந்த எம்.எல்.ஏ. வேல்முருகன் அங்கு பேசியது:

              பெண் சிசு கொலைகளுக்கு வரதட்சிணை தான் முக்கிய காரணம். எனவே வரதட்சிணையை வேரறுக்க வேண்டும். தமிழகத்தில் இரண்டரை கோடி வன்னியர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் பாமகவுக்கு வாக்களித்தால், நாம் போயஸ்கார்டனோ அல்லது கோபாலபுரமோ செல்ல வேண்டியிருக்காது. 15 வயதுள்ள வன்னிய இளைஞர்களை எங்களிடம் நம்பி ஒப்படையுங்கள், வருங்காலத்தில் தமிழகத்தில் ஒரு வன்னியரை முதல்வராகிக் காட்டுகிறோம். பாமக தலைமையில் ஆட்சி அமையுமேயானால், மது விலக்கை அமல்படுத்துவதே முதல் கையெழுத்தாக இருக்கும் என்றார் வேல்முருகன்.

Read more...

நெய்வேலியில் பா.ம.க. பிரமுகர் இல்ல திருமண விழா: எம்.எல்.ஏ. வேல்முருகன் பங்கேற்ப்பு

சனி, 5 பிப்ரவரி, 2011

நெய்வேலி:

             நெய்வேலியில் பா.ம.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் டாக்டர் ராமதாஸ் இன்று கலந்து கொண்டார்.  அதற்கு அவர் கூட்டணி குறித்து இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. விரைவில் முடிவு எடுப்போம் என்று ராமதாஸ் கூறினார். 
முன்னதாக மண மக்களை வாழ்த்தி டாக்டர் ராமதாஸ் பேசியது:-

              வன்னியர் சமூகத்தில் கடந்த பல ஆண்டுகளாக மாணவ- மாணவிகள் கல்வி துறையில் முன்னேற்றம் அடையாமல் உள்ளனர். இப்போது நெய்வேலியில் மேடையில் வாழ்¢த்தி பேசிய சுமதி என்ற பெண் தனது மகன் ஐ.ஐ.டி. தேர்வில் வெற்றி பெற்று ராஜஸ்தானில் படித்து வருவதாக குறிப்பிட்டார்.

             இதுபோல வன்னிய சமூகத்து மாணவர்கள் கல்வியில் ஆர்வம் கொண்டு படிக்க வேண்டும். வன்னியர் சமூகத்துக்கான தனி இட ஒதுக்கீடு குறித்து பிரதமரிடமும் சோனியா காந்தியிடமும் வலியுறுத்தி பேசியதால் அன்றைய தினமே மந்திரி சபை கூட்டத்தில் தனி ஒதுக்கீடு பெற்று வெற்றி கண்டோம். வன்னியர் சமூக மாணவ- மாணவிகள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். ஆகிய தேர்வுகள் எழுத பயிற்சி அளிக்க திண்டிவனத்தில் தனி பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு வருகிறது.

             இதில் மாணவ- மாணவிகள் சேர்ந்து பயன்பெற வேண்டும். நமது சமூகத்தினர் உயர் பதவிகளுக்கு வராததற்கு காரணம் ஒற்றுமையின்மை. இதற்கு என்ன வழி என்று கேட்டால் 15 வயதில் இருந்து 30 வயது வரை உள்ளவர்களை என்னிடத்தில் விடுங்கள். அவர்களுக்கு ஒற்றுமை உணர்வை தூண்டி வெற்றி பெற வைக்கிறேன்.  நமது சமூகம் பின் தங்கியதற்கு மற்றொரு காரணம் மதுவிற்கு அடிமையானதுதான். மதுவை முழுமையாக விட்டொழிக்க சபதம் ஏற்று ஆண்கள் செயல்பட வேண்டும். கிராமங்களில் சாராயம் காய்ச்சுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ் அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். பெண்கள் சமூகத்தில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

                நிகழ்ச்சியில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, வேல்முருகன் எம்.எல்.ஏ., காடுவெட்டி குரு மற்றும் நெய்வேலி பாட்டாளி தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Read more...

பண்ருட்டி தொகுதி பாட்டாளி இளம்பெண்கள், இளைஞர்கள் பயிற்சிக் கூட்டம்: எம்.எல்.ஏ. வேல்முருகன் பங்கேற்ப்பு

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011


பயிற்சிக் கூட்டத்தில் பேசுகிறார் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் (இடமிருந்து 2-வது). (வலது படம்) கூட்டத்தில் பங்கேற்றோர்.
   
பண்ருட்டி:

             கூட்டணி குறித்து கவலைப்பட வேண்டாம். பா.ம.க.வின் தயவு இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.  

            தொகுதி பாட்டாளி இளம்பெண்கள், இளைஞர்கள் பயிற்சிக் கூட்டம் மாநில துணைப் பொதுச் செயலர் தி.திருமால்வளவன் தலைமையில் பேர்பெரியான்குப்பத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.  

கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியது.  

               நாட்டின் விலைமதிக்க முடியாத சக்திகள் இளைஞர்கள். எதிர்காலத்தில் நீங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என பா.ம.க. இப் பயிற்சிக் கூட்டத்தை நடத்துகிறது. வேறு எந்தக் கட்சிகளும் இதுபோல் கூட்டத்தை நடத்துவதில்லை.  தமிழகத்தில் சினிமா மோகம், இலவசம், சாராயப் புரட்சிதான் நடக்கிறது. மத்திய அமைச்சராக இருந்தபோது உயர்ந்த விருதுகளை பெற்று நமது சமுதாயத்துக்கு பெருமையை சேர்த்துள்ளேன். அமெரிக்காவில் 911 என்ற ஆம்புலன்ஸ் சேவையை பார்த்துதான் 108 ஆம்புலன்ஸ் சேவையை கொண்டு வந்தேன். 

            மேலும் பல்வேறு நல திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியுள்ளேன்.  தமிழகத்தில் பாமக ஆட்சி அமைக்கும்போது இடும் முதல் கையெழுத்து மது ஒழிப்பு தான். இதையெல்லாம் எண்ணிப்பார்த்து இளைஞர்களும், இளம்பெண்களும் பாடுபட வேண்டும். மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். பாமக தயவு இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்றார்.  
  
இக் கூட்டத்தில் கட்சி நிறுவனர் ராமதாஸ் பேசியது:  

            பாமக ஆட்சிக்கு வந்தால் அம்மா பெயர் முதல் எழுத்தாகவும், அப்பா பெயர் இரண்டாவதாகவும் போட சட்டம் கொண்டுவரப்படும்.  தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி நெய்வேலி தொகுதி என கூறவேண்டும். 5 பேர் முதல்வராகியே தீருவோம் என கூறுகின்றனர். இவர்கள் கோடம்பாக்கத்தில் இருந்து கோட்டைக்கு செல்ல நினைக்கின்றனர். பெண்களுக்கு சம உரிமை, வாய்ப்பு கொடுத்து சமுதாயத்தை உயர்த்துவோம், அனைவருக்கும் சமச்சீர்க் கல்வி, வேலைவாய்ப்பு அளிப்போம் என்றார்.  

             முன்னதாக கூட்டத்தில் கலந்துக்கொண்ட இளம் பெண்கள், இளைஞர்கள் பேசினர். அன்புமணி ராமதாஸ், உறுதிமொழி படிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.   பயிற்சிக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் கோ.க.மணி, அமைப்புச் செயலர் தி.வேல்முருகன், சொத்துப் பாதுகாப்பு குழுத் தலைவர் ஆர்.கோவிந்தசாமி, மாவட்டச் செயலர் அ.தர்மலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.ஒன்றியச் செயலர் டி.சி.முருகன் நன்றி கூறினார்.  

நெய்வேலியில்...  

            பின்னர் பாமக சார்பில் இளம் பெண்கள், இளைஞர்கள் பயிற்சிக் கூட்டம் நெய்வேலியில் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியது:  வன்னியர்களுக்கு இருக்கும் தகுதி வேறு யாருக்கும் இல்லை. வன்னியர்களுக்கு தகுதி இல்லையென்றால் வேறுயாருக்கும் தகுதி கிடையாது. கட்டி வா என்றால் வெட்டிக் கொண்டு வரும் சமுதாயம் நம் சமுதாயம்.  

              அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கச் செய்யவேண்டும் என்பதே எங்களது குறிக்கோள். பாமக தலைமையில் ஆட்சி அமையும்போது, அம்பானி வீட்டு பிள்ளைகளுக்கு கிடைக்கின்ற கல்வி நம்மை போன்ற ஏழை, எளிய மக்களுக்கும் கிடைக்கச் செய்வோம்.   

                தனியாக டியூசன் எடுப்பவர்களை சிறையில் அடைப்போம். வீட்டுப் பாடம் ரத்து செய்யப்படும், தினமும் 2 மணி நேரம் விளையாட்டு. இதுபோன்ற சமச்சீர்க் கல்வி நடைமுறைப்படுத்தப்படும்.  பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி.யில் ஒருவர் கூட உயர் பதவியில் இல்லை. இந்நிறுவனத்தின் தலைவராக ஒரு வன்னியர் வரவேண்டும் அதற்கு பா.ம.க. பாடுபடும். நெய்வேலி தொகுதியில் பாமக தனித்து போட்டியிட்டாலும் படுத்துக் கொண்டே வெற்றிபெறுவோம் என்றார் ராமதாஸ்.

Read more...

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP