பா.ம.க., மகளிர் செயற்குழு பொறுப்பாளர்கள் கூட்டம்

வியாழன், 24 ஜூன், 2010


கடலூர்:

            பா.ம.க., மகளிர் செயற் குழு மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டம் கடலூர் கட்சி அலுவலகத்தில் நடந்தது.

             பாட்டாளி மகளிர் சங்க மாநில செயலாளர் சிலம் புச்செல்வி தலைமை தாங்கினார். எழிலரசி ரவிச் சந்திரன், அமுதா, தானாயி, தர்மலிங்கம், பஞ்சமூர்த்தி முன்னிலை வகித்தனர். அலுவலக செயலாளர் போஸ் ராமச்சந்திரன் வரவேற்றார். பா.ம.க., மாநில அமைப்புச் செயலாளர் எம்.எல்.ஏ., வேல்முருகன், மாநில துணை பொதுச் செயலாளர் திருமால்வளவன் பங்கேற்று பேசினர். மாலதி, கலைமதி, உஷாராணி, செல்வகுமாரி, மலர்விழி, சுமதி, பாக்கியம், ஜெயக்கொடி உட்பட பலர் பங்கேற்றனர்.

                  கூட்டத்தில் ஜூலை 18ம் தேதி நடக்கும் வன்னியர் மகளிர் பெரு விழாவில் கடலூர் மாவட்டத்தில் இருந்து 1,000 வாகனங்களில் செல்வது, ஜூலை 28ம் தேதி கடலூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகங்கள் முன் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பெருவாரியாக கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. தேவசுந்தரி நன்றி கூறினார்.


Read more...

தமிழில் பெயர்ப் பலகை: கடலூரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

செவ்வாய், 22 ஜூன், 2010

கடலூர்:

             கடலூரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனைத்து வணிக நிறுவனங்களிலும் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என்ற,​​ அரசாணையை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

               மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாமக மாநில துணைப் பொதுச் செயலர் திருமால்வளவன் தலைமை தாங்கினார்.​ மாவட்டச் செயலர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார்.​ மாவட்ட அலுவலகச் செயலர் போஸ் ராமச்சந்திரன் வரவேற்றார்.​ கட்சியின் அமைப்புச் செயலாளர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ.​ சிறப்புரை நிகழ்த்தினார். மாவட்டச் செயலர் பஞ்சமூர்த்தி,​​ நகரச் செயலர் ஆனந்த்,​​ ஒன்றியச் செயலர்கள் சிவகுமார்,​​ முருகன்,​​ விஜயகாந்த்,​​ சக்கரவர்த்தி,​​ தட்சிணாமூர்த்தி,​​ நகராட்சி உறுப்பினர்கள் திருமூர்த்தி,​​ ராதாகிருஷ்ணன்,​​ கமலநாதன்,​​ செந்தில்,​​ மாணவரணிச் செயலர் அருள்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விருத்தாசலம்:


              விருத்தாச்சலத்தில் நடைபெற்றஆர்ப்பாட்டத்துக்கு, ​பாமக நகரச் செயலர் முருகன் தலைமை ஏற்றார்.​ மாநில முன்னாள் துணைச் செயலர் திருஞானம்,​​ ஒன்றியச் செயலர்கள் செல்வக்குமார்,​​ வெங்கடேசன்,​​ ராஜவேல் மற்றும் நகர்மன்ற உறுப்பினர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக் குழு துணைத் தலைவர் பழனிவேல்,​​ நகர்மன்ற உறுப்பினர் தனபாண்டியன்,​​ ஊராட்சித் தலைவர் ஆசைத்தம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Halloween Comments - http://www.halloweentext.com 

Read more...

தேர்ச்சி விழுக்காடு குறைவு: எம்.எல்.ஏ. தி.வேல்முருகன்புது யோசனை

திங்கள், 21 ஜூன், 2010

பண்ருட்டி:
           பண்ருட்டி வட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விழுக்காடு குறைவாக உள்ளதால் தலைமையாசிரியர்களின் கூட்டம் நடத்த வேண்டும் என எம்எல்ஏ தி.வேல்முருகன் மாவட்ட ஆட்சியரிடம் கூறினார். 

பண்ருட்டியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி துவக்கி வைக்க வந்த மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமனிடம் பண்ருட்டி எம்எல்ஏ தி.வேல்முருகன் கூறியது: 

                பண்ருட்டி வட்டத்தில் உள்ள சில அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் நல்ல தேர்ச்சி விழுக்காடு பெற்று சிறந்து விளங்குகிறது. ஆனால் ஏனைய பள்ளிகளின் தேர்ச்சி விழுக்காடு மோசமாக உள்ளது.இதனால் பண்ருட்டி வட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் கூட்டத்தை கூட்டி, சிறப்பு வகுப்புகள் நடத்தி தேர்ச்சி விழுக்காட்டை உயர்த்த அறிவுறுத்த வேண்டும் என தி.வேல்முருகன் கேட்டுக்கொண்டார்.

Read more...

பெரும்பான்மை மக்களில் மூன்று சதவீதத்தினர் தான் இட ஒதுக்கீட்டை அனுபவிக்கின்றனர்: வேல்முருகன்

புதன், 16 ஜூன், 2010


கடலூர் : 

                    ஜாதியின் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு இடஒதுக்கீடு வழங்கினால் தான் நாட்டில் சமூகநீதி நிலை நாட்டப்படும் என எம்.எல்.ஏ., வேல்முருகன் பேசினார்.ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுக்க வலியுறுத்தி பா.ம.க., சார் பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பா.ம.க., மாநில துணை பொதுச் செயலாளர் திருமால்வளவன், மாவட்ட செயலாளர்கள் பஞ்சமூர்த்தி, தர்மலிங்கம் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், எம்.எல்.ஏ., வேல்முருகன் தலைமை தாங்கி பேசியதாவது: 

                           ஜாதி வாரியாக கணக் கெடுப்பதில் என்ன தவறு உள்ளது. இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் 100 சதவீதத்தில் வெறும் 3 சதவீத இட ஒதுக்கீட் டையே அனுபவித்து வருகின்றனர். மீதமுள்ள 97 சதவீதத்தை ஆதிக்க ஜாதியினர் அனுபவித்து வருகின்றனர். மக்கள் தொகை கணக்கெடுக்கும் அரசு ஜாதி வாரியாக கணக்கெடுக்க வேண்டும் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார். இட ஒதுக்கீடு என்பது சாதாரண கிளார்க் முதல் சுப்ரீம் கோர்ட் நீதிபதி வரை சமூக நீதி சமமாக இருக்க வேண்டும். கல்வி, வேலை வாய்ப் பில் அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண் டும். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி, ஜாதியின் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு இடஒதுக்கீடு வழங்கினால் தான் சமூகநீதி நிலை நாட்டப்படும். ஜாதி வாரியாக கணக் கெடுக்க வலியுறுத்தி வரும் 28ம் தேதி தாலுகா அலுவலகம் முன் ஆர்ப் பாட்டம் நடத்தப்படுகிறது. இதில் வன்னியர்கள் அ.தி.மு.க.,- தி.மு.க., என எந்த கட்சியில் இருந்தாலும் அனைவரும் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு எம்.எல்.ஏ., வேல்முருகன் பேசினார்.

கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு திரள் ஓட்டம்: பண்ருட்டி சட்ட மன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் தலைமை

திங்கள், 14 ஜூன், 2010


பண்ருட்டி:

                          அண்ணா பல்கலைக் கழகம், திருச்சிராப்பள்ளி சரகம் பண்ருட்டி அரசு பொறியியல் கல்லூரி சார்பில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு குறுந்தொடர் திரள் ஓட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. பண்ருட்டி தட்டாஞ்சாவடியில் இருந்து புறப்பட்ட திரள் ஓட்டத்தில் பல்கலைக்கழக மாணவ, மாணவியர் கலந்துகொண்டு, கோஷங்களை எழுப்பியவாறு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அடைந்தனர். முன்னதாக பண்ருட்டி சட்ட மன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் தலைமை தாங்கி திரள் ஓட்டத்தை தொடங்கி வைத்தார். பண்ருட்டி அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் எம்.குமாரசாமி முன்னிலை வகித்தார். நகர மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன், நெய்வேலி கல்வி அறக்கட்டளை தாளாளர் ஆர்.சந்திரசேகர், செயலர் எம்.நடராஜன், வட்டாட்சியர் பி.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Read more...

பாமக ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் 4 நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்

வெள்ளி, 11 ஜூன், 2010

உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வது குறித்து விளக்குகிறார் பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன்.
நெய்வேலி:

                என்எல்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி பாட்டாளி ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கடந்த 4 தினங்களாக நடந்த சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை மாலையுடன் முடிவுக்கு வந்தது.

                என்எல்சி நிறுவனத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணி நிரந்தரத்திற்கான பதவி மூப்புப் பட்டியலை வெளியிடவேண்டும். ஊதிய உயர்வு வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி பாட்டாளி ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினர் நெய்வேலி ஸ்கியூ பாலத்தில் திங்கள்கிழமை முதல் சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

                  இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தோரில் 8 பேர் மயங்கியதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக என்எல்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து புதன்கிழமை உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்த பண்ருட்டி எம்எல்ஏ தி,வேல்முருகன் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கைகளை என்எல்சி நிர்வாகம் நிறைவேற்றும் வரை தானும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உண்ணாவிரதத்தில் பங்கேற்றார். 

                   இதையடுத்து என்எல்சி நிர்வாகம் பாமக தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாக அலுவலர்கள் முன்னிலையில் பேச்சு நடத்தியது. இப்பேச்சில், உச்ச நீதிமன்றத்தின் விடுமுறை முடிந்து மீண்டும் திறந்த பின் நீதிமன்றத்தை அணுகி ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டு, அதன் பின்னர் படிப்படியாக ஒப்பந்தத் தொழிலாளர்களை இன்கோசர்வ் பிரிவில் இணைப்பது, மேலும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கைத் தொடர்பாக, நிறுவனத்தின் நிரந்தரத் தொழிலாளர்களின் ஊதியமாற்று ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நிறைவடைந்த பின்னர் 15 தினங்களுக்குள் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வென்றெடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இதை பாமக தொழிற்சங்க நிóர்வாகிகள் ஏற்றுக்கொண்டதையடுத்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றுக் கொண்டார்.

                         மேலும் நிர்வாகம் உறுதியளித்தப் படி நடந்துகொள்ளவில்லை எனில் மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றார். இதையடுத்து 4 நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது.ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஒரு பிரிவினர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையிலும், என்எல்சி அனல்மின் நிலையங்களில் வியாழக்கிழமை 2300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாக நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

Pattali Makkal Katchi MLA T.Velmurugan joins striking NLC contract workers

வியாழன், 10 ஜூன், 2010

CUDDALORE: 

           Pattali Makkal Katchi MLA T.Velmurugan on Wednesday joined the fast-unto-death agitation launched by a section of the contract workers of the Neyveli Lignite Corporation at Neyveli on Wednesday.

           The workers owing allegiance to the PMK labour wing, Pattali Thozhir Sangam, had begun the indefinite hunger strike on Monday in support of their nine-point charter of demands. Their demands include absorption of 5,000 contract labourers in the Industrial Cooperative Service Society (INDCOSERVE) as a prelude to regularisation of their services, wage revision, weekly off day with wages and so on.

            The MLA said that even though the NLC management had signed the agreement six months ago it was yet to honour its commitment. Meanwhile, seven of the workers who reported giddiness and exhaustion from three day's hunger strike were admitted to the NLC general hospital for treatment.

Read more...

என்.எல்.சி.யில் பண்ருட்டி எம்.எல்.ஏ தி.வேல்முருகன் உண்ணாவிரதம்

நெய்வேலி:
                   என்எல்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி பாட்டாளி ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெறும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமையும் தொடர்ந்தது. இந்த உண்ணாவிரதத்தில் பண்ருட்டி எம்எல்ஏ தி.வேல்முருகனும் ஈடுபட்டுள்ளார். என்எல்சி நிறுவனத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணி நிரந்தரத்துக்கான சீனியாரிட்டி பட்டியலை வெளியிட வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி பாட்டாளி ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினர் நெய்வேலி ஸ்கியூ பாலத்தில் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். 3-ம் நாளான புதன்கிழமை வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தோரில் 8 பேர் மயங்கியதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக என்எல்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து புதன்கிழமை உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்த பண்ருட்டி எம்எல்ஏ தி.வேல்முருகன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசுகையில், 
                  
  "6 மாதங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கை தொடர்பாக பேச்சு நடத்தியபோது, 2 மாதங்களுக்குள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக கூறிய நிர்வாகம் 6 மாதமாகியும் நிறைவேற்றவில்லை. 48 மணிநேரம் கெடு விதிக்கிறோம். அதற்குள் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். இல்லையெனில் என்எல்சி தலைவரின் வீடு முற்றுகையிடப்படுவதோடு, இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகளின் வாகனங்கள் சேதப்படுத்தப்படும், மேலும் பாமக தொழிற்சங்கமும் நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்காது.÷எங்களை வன்முறைக்குத் தூண்ட வேண்டாம். ஜனநாயக முறையிலே வேண்டுகோள் வைக்கிறோம். கோரிக்கைக் குறித்து நிரந்தரத் தீர்வு ஏற்படும்வரை நானும் உண்ணாவிரத்தில் பங்கேற்கவுள்ளேன். என்எல்சி நிர்வாகத்தினர் மக்கள் பிரதிநிதிகளை மதித்து நடக்க வேண்டும்' என்றார் வேல்முருகன். 

'உச்ச நீதிமன்றம் திறந்த பிறகுதான் பிரச்னைக்கு தீர்வு' 
                      என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களை இன்கோ-சர்வ் பிரிவில் படிப்படியாக இணைப்பது என நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், இன்கோ-சர்வ் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் தொடர்பாக இதே பிரிவில் உள்ள மற்றொரு தொழிற்சங்கம், உச்ச நீதிமன்றத்தில்  வழக்குத் தொடுத்திருப்பதால், ஒப்பந்தத் தொழிலாளர்களை இன்கோ-சர்வ் பிரிவில் இணைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. ஜூலை மாதம் உச்ச நீதிமன்றம் திறந்த பிறகு, வழக்கு வாபஸ் பெறுவதற்கான பணிகள் தொடங்கும். அதன் பின்னர் அவர்கள் படிப்படியாக இன்கோ-சர்வ் பிரிவில் இணைக்கப்படுவார்கள். இப்பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது எப்படி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும் என நிர்வாகத்தரப்பில் கூறப்படுகிறது. மேலும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மருத்துவப் புத்தகம், போனஸ் உள்ளிட்ட சலுகைகளை நிர்வாகம் தானாகவே முன்வந்து வழங்கி வருகிறது. அவர்களுக்கு சட்டரீதியாக கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளையும் நிர்வாகம் வழங்கி வருவதாகவும் நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP