தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் ரீகன் என்ற பரிதி சுட்டுக் கொலை - பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம்
சனி, 10 நவம்பர், 2012
தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் ரீகன் என்ற பரிதி சுட்டுக் கொலை - பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு
தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் பிரான்சு நாட்டு தமிழர் ஒருக்கிணைப்புக் குழுத் தலைவருமான ரீகன் என்ற பரிதியை சிங்களப் புலனாய்வுப் பிரிவினர் பாரீஸ் நகரில் சுட்டுக் கொன்ற செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதேபோல் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி தளபதிகளை வெளிநாட்டில் ஏற்கெனவே சிங்களப் புலனாய்வு பிரிவினர் சுட்டுக் கொலை செய்திருக்கின்றனர். தற்போது பரிதியையும் சிங்களப் பேரினவாதிகள் படுகொலை செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தன் வாழ்நாள் முழுவதும் தமிழீழ விடுதலைக்காகப் பாடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதியான பரிதிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமது வீரவணக்கத்தை செலுத்துகிறது. தளபதி பரிதியின் குடும்பத்தினருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக