தமிழகத்தில் நிலவும் மின்வெட்டை சமாளிக்க மத்திய அரசு கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும்: பண்ருட்டி தி. வேல்முருகன் கோரிக்கை
சனி, 27 அக்டோபர், 2012
வேலூர்:
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வேலூரில் நேற்று (26/10/2012) அளித்த பேட்டி:
சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு தமிழர் நலன் காக்கவும். உலக தமிழர் நலன் காக்கவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராடி வருகிறது. ஈழதமிழர் பிரச்சினை, காவிரி, முல்லை பெரியாறு நதிநீர் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி வருகிறோம்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, ஜெயவர்த்தனே கூட்டு ஒப்பந்தபடி ஈழதமிழர் நலன் காக்க அதில் உள்ள 13வது ஷரத்தை ரத்துசெய்ய ராஜபக்சே அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இதை ரத்து செய்தால் இலங்கை அரசுடன் இந்திய அரசு எந்தவித தொடர்பும் வைத்து கொள்ளகூடாது ஈழதமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் தினமும் 12 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு அமலில் உள்ளது. இதை சமாளிக்க மத்திய அரசு கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும். நெய்வேலியில் உற்பத்தியாகும் 3000 மெகாவாட் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கு பெற்றுதர தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநில பொது செயலாளர் காவேரி அமைப்பு செயலாளர் காமராஜ் துணை பொது செயலாளர்கள் சிவகுமார், சுதாகர் உடன் இருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக