என்.எல்.சியின் பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்வதைக் கண்டித்து பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
செவ்வாய், 9 ஜூலை, 2013
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஐந்து பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்வதைக் கண்டித்தும், நீதிமன்ற உத்தரவுபடி ஒப்பந்த தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யக்கோரியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் நெய்வேலி வட்டம் 19–ல் உள்ள தபால் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 09/07/2013 காலை 10.00 மணி அளவில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டன உரை ஆற்றினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக