என்.எல்.சி.நிறுவனத்தின் பங்குகளை விற்பதைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் ஜூலை 9-ல் கண்டன ஆர்ப்பாட்டம்

சனி, 6 ஜூலை, 2013

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஐந்து சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கியூபாலத்தில் ஜூலை 9-ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

என்.எல்.சி நிறுவனம் மத்திய அரசு பொதுத் துறை நிறுவனமாக உள்ளதால்தான் இப்பகுதி மக்கள் தங்களது வாழ்வாதாரமான நிலத்தையும் வீட்டையும் வழங்கினர். தற்போது மத்திய அரசு என்எல்சியை படிப்படியாக தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எனவே மத்திய அரசு பங்குகளை விற்பது தீவிரம் செலுத்துமேயானால், இதுவரை என்எல்சிக்காக கையகப்படுத்திய நிலங்களை அந்தந்த நில உரிமையாளர்களிடம் திருப்பி வழங்கிவிட வேண்டும்.

உயர்நீதிமன்ற இடைக்காலத் தடையைக் காட்டி என்.எல்.சி தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும் என்று கூறும் நிர்வாகம், உச்சநீதிமன்றம் என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என தீர்ப்பு வழங்கிய பின்னரும் அதை அமல்படுத்த முன்வராதது ஏன்? எனவே மத்திய அரசின் செயலைக் கண்டிக்கிற வகையிலும், என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் கியூபாலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் என்.எல்.சி ஊழியர்கள் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP